Ad Code

Ticker

6/recent/ticker-posts

முக்கிய நிகழ்வுகள் ஜனவரி 02

 *முக்கிய நிகழ்வுகள்  ஜனவரி 02*


🎖️🏅 1954 – ம் ஆண்டு ஜனவரி 02 ம் தேதி இந்திய அரசு  பத்மஸ்ரீ, பத்மபூசண், பத்மவிபூசன் போன்ற உயரிய  விருதுகளை  அறிமுகப்படுத்தியது.


📐📏 சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன்  கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க நோபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010 ஆம் ஆண்டு பராக்கு ஒபாமா இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான இன்ஃபோசிசு பரிசையும் வென்றார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருந்துள்ளார், இவர் பிறந்த தினம் டிசம்பர் 02 ஆண்டு 1940.


✍️✍️ தி. வை. சதாசிவ பண்டாரத்தார்  சோழர்களின் முழுமையான வரலாற்றை  முதன்  முதலில்  தமிழில் எழுதியவர்.  பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. இவர் இறந்த தினம் ஜனவரி 02 ஆண்டு 1960.


🐅🐊🏎️ சி. ஆர். நாராயண் ராவ்  ஒர் இந்திய விலங்கியல் மருத்துவர் மற்றும் ஊர்வனவியலாளர் ஆவார். ”இன்றைய அறிவியல்” எனும் அறிவியல் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். இந்திய நில நீர் உயிரினங்களில் (இருவாழ்விகள்) இவரது முன்னோடிப் பணியை அங்கீகரிப்பதற்காக, "ராவ்ரெசுடெசு" என்ற தவளை இனத்திற்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது. இவர் இறந்த தினம் ஜனவரி 02 ஆண்டு 1961.


💃👯‍♂ கே. ஜே. சரசா என்பவர் தமிழ்நாட்டின் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியைகளுள் ஒருவரும், முதலாவது பெண் நட்டுவனாரும் ஆவார். இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுவதும் நடத்தி பரதக் கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். சென்னையில் மந்தைவெளியில் சரசாலயா நடனப் பள்ளியை 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தி வந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் இறந்த தினம் ஜனவரி 02 ஆண்டு 2012.

கருத்துரையிடுக

0 கருத்துகள்