Ad Code

Ticker

6/recent/ticker-posts

Terminal Class க்கு TC தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

 


1. EMIS இணைய தளத்தில் பள்ளி DISE Code வழியாக Login செய்து students details ல் மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மாவட்டம், பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம்) போன்றவற்றையும் நம் பள்ளியில் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் அப்டேட் செய்ய வேண்டும்.


2. மென்பொருள் அப்டேட் செய்திருப்பதால், ஒரு சில மாணவர்களுக்கு பிறந்த தேதி / பள்ளியில் சேர்ந்த தேதி மாறி இருக்கலாம்.


3. பிறந்த தேதி / சேர்க்கை தேதி தவறுதலாக இருந்தால், 

மாணவரின் பெற்றோர் தற்போது பயன் படுத்தும் கைபேசி எண்ணை முதலில் அப்டேட் செய்ய வேண்டும்.


4. இதன் பிறகு மாணவரின் பெயர் / பிறந்த தேதி / சேர்க்கை தேதிகளில் மாற்றம் இருப்பின் செய்து கொள்ளலாம்.


5. பெற்றோரின் கைபேசிக்கு 6 இலக்க 0TP சென்றிருக்கும். அதை பெற்றோரிடம் இருந்து பெற்று, students list மெனு அருகில் உள்ள profile change OTP submission click செய்து, வலது புறம் கடைசியில் உள்ள Submit click செய்து, 6 இலக்க OTP உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே மாணவர்கள் விவரம் மாறும்.


6. இதன் பின் கடந்த ஆண்டு TC தயார் செய்த முறையை பின்பற்றி TC தயார் செய்து பிரிண்ட் எடுத்து வழங்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்