Ad Code

Ticker

6/recent/ticker-posts

CSSS Scholarship

CSSS Scholarship Application Link:

 இந்தியா முழுவதும் உள்ள கலை / அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை (CSSS) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கியது. ஆர்வமுள்ள மாணவர்கள் தேசிய உதவித்தொகை போர்ட்டலான scholarships.gov.in மூலம் ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 31, 2022 ஆகும். திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், CBSE 2022 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, 2021 ஆம் ஆண்டிற்கான முதல் புதுப்பித்தல், 2020 ஆம் ஆண்டிற்கான 2 ஆம் புதுப்பித்தல், 2019 ஆம் ஆண்டிற்கான 3 ஆம் புதுப்பித்தல் மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான 4 ஆம் புதுப்பித்தல்களை மாணவர்கள் வலைதளத்தில் செய்யலாம்.

புதிய உதவித்தொகை பெறுதல் மற்றும் உதவித்தொகை புதுப்பித்தல் ஆகிய இரண்டிற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை நிறுவனங்களால் சரிபார்க்கவும் (தேவைப்பட்டால், அசல் ஆவணங்களை நிறுவனத்தில் காட்டவும்) இல்லையெனில் விண்ணப்பம் செல்லாததாக கருதப்படும்" அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் தங்களின் பெயரை மதிப்பெண் பட்டியல் & ஆதாரில் உள்ளது போல் பதிவிட வேண்டும் என்றும், பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின் ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து http://www.scholarships.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்