பஞ்சமர்களுக்காக வழங்கப்பட்ட நிலம் 'பஞ்சமி நிலம்' எனப்படுகிறது. பஞ்சமர்கள் என்போர் மோசமான வறுமையில் சிக்கித் தவித்த தலித்துகள் ஆவர்.
ஜேம்ஸ் டிரெமென்ஹியர் (James Henry Apperley Tremenheere) என்ற இந்த வெள்ளைக்காரர்தான் பஞ்சமி நிலங்களுக்கு வித்திட்டவர்.
செங்கல்பட்டின் பொறுப்பு ஆட்சியராக இருந்த டிரெமென்ஹியர் அங்கு வாழ்ந்த தலித் மக்கள் சுரண்டப்படுவதையும் அவர்களின் மோசமான வாழ்க்கையையும் கண்டு வேதனையடைந்து நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்து 1891ல் 'செங்கல்பட்டு பறையர்களைப் பற்றிய அறிக்கை'(“Notes on Pariahs of Chengleput”) யை தயார் செய்து அரசாங்கத்திடம் சமர்பித்தார்.
அவ்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்,
"They are always badly nourished, clad, if at all, in the vilest of rags, eaten up with leprosy or other horrible diseases, hunted like pigs, untaught, uncared for…."
(அவர்கள் உணவற்றவர்களாக, உடையற்றவர்களாக, குப்பைக் கூலங்களோடு, தொழுநோய் போன்ற கொல்லை நோய்களால் தாக்கப்படக் கூடியவர்களாக, பன்றிகள் போல வேட்டையாடப்பட்டுக்கொண்டு, கேட்பாரற்றுக் கிடக்கிறார்கள்)
மேலும் இந்நிலையிலிருந்து அவர்களை விடுவிக்க
“The small marginal landholdings, housing, literacy, free labour without force/bondage, self-respect and dignity are the factors that could lead to transformation in their lives.”
(அவர்களுக்கு சிறிதளவு நிலம், வீடு, எழுத்தறிவு, கொத்தடிமை நிலைக்குத் தள்ளாத சுதந்திரமான வேலை வாய்ப்பு, சுயமரியாதை, கண்ணியம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்கையை மாற்றியமைக்கவியலும் என பரிந்துரைக்கிறார்)
இவ்வறிக்கை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பின் 30–09-1892 அன்று மதராஸ் மாகாணத்தைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட பறையர்கள் பள்ளர்களுக்கு நிலங்கள் வழங்க (Depressed Class Land Act 1892) அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி 12 லட்சம் ஏக்கர் நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலத்தை அம்மக்களிடமிருந்து பஞ்சமர் அல்லாதவர்கள் வாங்க முடியாது.
இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்ககோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது.
0 கருத்துகள்