நாள்:
வகுப்பு:6 ம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு: நிலப்பரப்பும் பெருங்கடல்களும்
கற்றல் விளைவுகள்
SS604- தட்டையான பரப்பில் திசைகளைக் குறித்து காட்டுதல்.உலக வரைபடத்தில் கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களை குறித்தல்.
துணைக் கருவிகள்
*உலக வரைபடம்
* மலைகள் சார்ந்த புகைப்படம்
* பெருங்கடல் புகைப்படம்
கற்றல் நோக்கங்கள்
*கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களைப் பற்றி புரிந்துகொள்ளுதல்.
* பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள் மற்றும் பெருங்கடல்கள் ஆகியவற்றின் பண்புகளைப் பற்றி கற்றல்.
* நிலத் தோற்றங்களின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
* பெருங்கடல்களைப் பற்றியும் அதன் சிறப்புக் கூறுகளையும் புரிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
புவியின் மேற்பரப்பு 71 சதவிகிதம் நீரால்சூழப்பட்டுள்ளது. எஞ்சிய 29 சதவிகிதம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், புவியின்மேற்பரப்பு சீராக காணப்படுவதில்லை. புவியில் உயர்ந்த மலைகள், ஆழ்கடல்கள் மற்றும் பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன.
வாசித்தல்
ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல்.புதிய வார்த்தைகள் அடிக்கோடிடுதல்.
மனவரைபடம்
தொகுத்தலும் வழங்குதலும்
*புவியின் மேற்பரப்பு 71 சதவிகிதம் நீராலும்,
29 சதவிகிதம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.
• பூமியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைநிலத்தோற்றங்கள் என வகைப்படுத்தலாம்.
• கண்டங்களும், பெருங்கடல்களும் முதல்நிலை நிலத்தோற்றங்களாகும்.
• புவியில் ஏழு கண்டங்களும், ஐந்து பெருங்கடல்களும் காணப்படுகின்றன.
• மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் இரண்டாம்நிலைநிலத்தோற்றங்களாகும்.
• பள்ளத்தாக்குகள், கடற்கரை, மணற்குன்றுகள் போன்றவை மூன்றாம் நிலை நிலத்தோற்றங்களாகும்.
• பெருங்கடல்கள் எல்லையோரக் கடல்களையும், தீவுகளையும் கொண்டுள்ளன.
வலுவூட்டல்
பாடத் தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாட கருத்தை வலுவூட்டல்.
மதிப்பீடு
LOT
நீரால் சூழப்பட்டநிலப்பகுதி____
MOT
பெருங்கடலில் உள்ளஆழமான பகுதி___
HOT
சர்வதேச மலைகள் தினம்_____
குறைதீர் கற்பித்தல்
கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்
தொடர் பணி
பீடபூமி பற்றிக் எழுதி வரவும்
Join Telegram group
0 கருத்துகள்