மொஹரம் என்றால் என்ன, நோன்பு அதன் வரலாறை பாப்போம்
இசுலாமியர்களுக்கு 4 புதிய மாதம் உண்டு, அதில் இது ஒன்று. மொஹரம் இசுலாம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். மொஹரம் என்பது இசுலாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த மாதத்தில் பிறை 9, 10 ஆகிய தினங்களில் நோன்பு வைப்பார்கள், குறிப்பாக பிறை 10 அன்று அரசு விடுமுறை.
10வது நாளை ஆஷூரா என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. ஆஷூரா என்ற அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்று பொருள்.
இசுலாமிய நாட்காட்டி மாதங்கள்:
முஃகர்ரம் (மொஹரம்)
சஃபர்
ரபி உல் அவ்வல்
ரபி உல் ஆகிர்
ஜமா அத்துல் அவ்வல்
ஜமா அத்துல் ஆகிர்
ரஜப்
ஷஃபான்
ரமலான்
ஷவ்வால்
துல் கஃதா
துல் ஹஜ்
இஸ்லாமியர்களில் இரண்டு வகை பிரிவு உண்டு. ஒன்று ஷியா மற்றோன்று சன்னி பிரிவு.
சன்னி பிரிவினர் எகிப்திய அரசரை வெண்றதுக்காக இந்த திருநாளை கொண்டாடுகின்றனர்.
ஷியா பிரிவினர் கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.
இந்த புனித மாதத்தில் சண்டை மற்றும் புனிதப் போர் புரிவதற்கும தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நாளில் நோன்பு இருப்பதால் வாழ்வு சிறப்பாக அமையும்
சிலர் இந்த நாளில் ஆசுரா என்று கத்தியால் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இந்த தியாகத்திருநாள் கொண்டாடுகின்றனர்.
0 கருத்துகள்