பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2022
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: பண்புடைமை
குறள் : 1000
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பொருள்:
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
பழமொழி :
Dogs that pursue many hares kill none.
பல பறவைகளுக்கு குறி வைப்பவர் ஒன்றையும் வீழ்த்த மாட்டார்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன்.
2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்
பொன்மொழி :
வலிமை இல்லாதவர்கள்
அதிஷ்டத்தின் மீது நம்பிக்கை
வைக்கிறார்கள்.. வலிமை
உள்ளவர்கள் தன் மீது
நம்பிக்கை வைக்கிறார்கள்..!
பொது அறிவு :
1.புரோட்டீனின் முக்கிய பொருள் எது ?
அமினோ ஆசிட்.
2. நியூரான் என்றால் என்ன ?
நரம்பு செல்.
English words & meanings :
identification - I ·den·ti·fi·ca·tion - the act of finding out who someone is or what something is. Noun. அடையாளம் குறி அல்லது அடையாளம் காணுதல். பெயர் சொல்
ஆரோக்ய வாழ்வு :
சிறுநீரக செயல்பாடு மேம்பட அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினசரி தண்ணீரின் அளவு ஆண்களுக்கு 4 லிட்டர் மற்றும் பெண்களுக்கு 3.1 லிட்டர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
NMMS Q 36:
ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் _________ ஆண்டுகளில் மூன்று மடங்காகும்.
விடை: 25 ஆண்டுகள்
ஆகஸ்ட் 01 இன்று
பால கங்காதர திலகர் அவர்களின் நினைவுநாள்
பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak, மராத்தி: बाळ गंगाधर टिळक, பாள கங்காதர டிளக்) சூலை 23, 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.
நீதிக்கதை
நூலும் பட்டமும்
அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், கண்ணா! நூலினுடைய வேலை என்ன என்று சொல்லு பார்க்கலாம்? பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு. அப்பா சொன்னார், இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு. பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே!
அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே என்றார்.
இன்றைய செய்திகள் - 01.08.22
💫வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
💫தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
💫சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
💫ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்.
💫ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் - சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம்.
💫சுத்தமான சூழலில் வாழ்வது ஓர் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
💫காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி சொரோகைபம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
0 கருத்துகள்