நடுவண் அரசு
வகுப்பு-10 மதிப்பெண்-25
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ( 5×1=5)
1) நடுவன் அரசின் அரசியல் அமைப்புத் தலைவர்_______ ஆவார்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர் அமைச்சர்
இ) தலைமை நீதிபதி
ஈ) அமைச்சரவை குழு
2) லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது____
அ)18 வயது ஆ)19 வயது
இ) 20 வயது. ஈ) 21 வயது
3) ஒரு மசோதாவை நிதி மசோதாவை அல்லது இதர மசோதாவை என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
இ)இந்தியஅரசின்தலைமைவழக்கறிஞர்.
ஈ) லோக்சபாவின் சபாநாயகர்
4) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
அ) குடியரசுத் தலைவர்.
ஆ) இந்திய அரசின் தலைமைவழக்கறிஞர்
இ) ஆளுநர்.
ஈ) பிரதம அமைச்சர்
5)கீழ்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கிறார்.
அ) சட்ட பிரிவு 356. ஆ) சட்ட பிரிவு 360
இ) சட்ட பிரிவு 365. ஈ) சட்ட பிரிவு 352
கீழ்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி. ( 5×2=10)
6) இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
7) நடுவன் அரசின் அமைச்சர்கள் தர நிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளனர்?
8) உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
9) நிதி மசோதா குறிப்பு வரைக?
10) இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினை பட்டியலிடுக?
விரிவான விடையளி. ( 2×5=10)
11) இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி?
12) இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் மாவை?
நடுவண் அரசு குறுந்தேர்வு வினாத்தாள் ptf வடிவில்- click here
0 கருத்துகள்