விஜயநகர் அரசு
நாள் :
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : சமூக அறிவியல்
பாடத் தலைப்பு : அலகு -1 விஜயநகர் அரசு
கற்றல் விளைவுகள்
*விஜயநகர் அரசுபற்றியும் அதன் தோற்றம் விரிவாக்கம் பற்றிய அறிதல்
*விஜயநகர அரசின் நிர்வாக முறை, இராணுவமுறை, மற்றும் பொருளாதார வாழ்க்கை பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளுதல்.
*இலக்கியம், கலை, கட்டடக்கலை துறைகளில் உண்டான வளர்ச்சி பற்றி அறிதல்.
ஆயத்தப்படுத்துதல்/அறிமுகம்
1) தெனாலிராமன் எந்த அரசரின் அரசவைப் புலவராக இருந்தார்?
2) துங்கபத்திரா நதி எந்த மாநிலத்தில் உள்ளது?
மேற்கண்ட கேள்விகள் கேட்டு பதில் பெறுவதன் மூலம் மாணவர்களை ஆயத்தப்படுத்துதல்.
படித்தல்
மாணவர்கள் ஆசியர் வழிகாட்டலுடன் பாடப்பகுதியை படித்தல், புறியாத மற்றும் புதிய சொற்களை மாணவர்கள் அடிக்கோடிதல்.
புதிய வார்த்தைகள்
அஷ்டகஜங்கள்-8 இலக்கிய மேதைகள்
ராக்சதங்கடி - தலைக்கோட்டை போர்
அமுக்தமால்யதா - தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்
மனவரைபடம்
தொகுத்தலும் வழங்குதலும்
* வெற்றியின் நகரம் என்று அறியப்படும் விஜயநகரம் ஹரிஹரர் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் கர்நாடகத்தின் தென் பகுதியில் நிறுவப்பட்டது.துளவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். சிறந்த கட்டிட வல்லுநர் இலக்கியம், கலை, கட்டடக்கலையின் புரவலர்.
*தலைக்கோட்டை போரும் விஜய நகர பேரரசின் வீழ்ச்சியும். விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது.
*அரசமைப்பு மண்டலங்கள், நாடுகள், ஸ்தலங்கள், கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
* இராணுவம் குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை என பிரிக்கப்பட்டிருந்தது.
வலுவூட்டுதல்
ஒவ்வொரு சிறு குழுவும் தங்களின் மனவரைபடம்,தொகுத்தலை வழங்குதல் . பாட கருத்துக்களை வாழ்வியல் சூழலில் தொடர்புபடுத்தி எளிய செயல்பாடுகள் மூலம் ஆசிரியர் விளக்குதல்.
மதிப்பீடு
1) வராகன் என்றால் என்ன?
2) ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் _______
3) தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு_______
4) விஜய நகர பேரரசை தோற்றுவித்தவர்கள் __________
5) விஜய நகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
குறைதீர் கற்றல்
மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு பாடப் பொருளை மீண்டும் விளக்கிக் கூறுதல்.
எழுதுதல்
கிருஷ்ணதேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளை விளக்க.
தொடர் பணி
விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்க.
0 கருத்துகள்