Ad Code

Ticker

6/recent/ticker-posts

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்|இடர்கள்|ஆசிரியர் பாடக்குறிப்பு

              இடர்கள்

வகுப்பு: எட்டாம் வகுப்பு

பாடம்   : சமூக அறிவியல்

பாடத் தலைப்பு: இடர்கள்

கற்றல் விளைவுகள்:

*இடர் பேரிடர் மற்றும் பேரழிவு ஆகியவைகளில் பொருளினை தெரிந்து கொள்ளல்.

*இந்தியாவின் மிகப்பெரிய இடர்கள் பற்றிய அறிதல்.

*இடர்கள் மற்றும் அவை சார்ந்த விழுப்புணர்வை ஏற்படுத்துதல்.

ஆர்வமூட்டல்

ஆசிரியர் மாணவர்களிடம் கனமழை பற்றி கூறுங்கள் என்ற கேள்வி கேட்டு மாணவர்களை ஆயத்தப் படுத்துதல்.

அறிமுகம்

ஒரு பொருளோ, நபரோ,  நிகழ்வோ அல்லது காரணியோ மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் எனப்படும். இவை சுற்றுச்சூழலில் மனிதனால் உருவாக்கப் பட்டவையாகவோ அல்லது இயற்கையான நிகழ்வாகவோ இருக்கலாம்.

படித்தல்

மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் பாடப்பகுதியை படித்தல், புறியாத மற்றும் புதிய சொற்களை மாணவர்கள் அடிக்கோடிதல்.

புதிய வார்த்தைகள்

வறட்சி- பற்றாக்குறை

சுனாமி - கடலில் ஏற்படும் பேரலை

வளிமண்டலம்- காற்றுவெளி

சூறாவளி -புனல் வடிவில் சுழன்று வீசும் புயல் காற்று

மனவரைபடம்




தொகுத்தலும் வழங்குதலும்

* இடர்களையும் மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம் இயற்கை சமூகம் மனித செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள்.

* இயற்கை இடர்பாடுகளுக்கு முக்கிய உதாரணம், நில அதிர்வு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, புயல்கள், வறட்சி, நிலச்சரிவு, சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு.

* மனிதர்களால் ஏற்படும் இடர்கள் தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவு, எண்ணெய் கசிவு, அபாயகரமான கழிவுகள், காற்று, நீர், நிலம் மாசடைதல், உள்நாட்டுக் கலவரங்கள்.

* பெரு நகரங்களில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகைகள், மரங்கள் மற்றும் நிலக்கரி எரிப்பதினால் உண்டாகும் புகையானது மூடு பனியை உருவாக்குகிறது.

* புயல் அலைகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள். புயல் அலைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மேற்கு கடற்கரை பகுதிகள்.

* கடலடி நில அதிர்வு கடலடி நிலச்சரிவு மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவற்றின் காரணமாக கடலில் ஏற்படும் பேரலைக்கு சுனாமி என்று பெயர்.


வலுயூட்டல்

மாணவர்கள் பாடத்தின் உட்பொருளைப் புரிந்து கொண்டதை சோதித்தல், புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் எளிதாக விளக்குதல் அறிந்துகொண்ட பாடப்பகுதியில் மேலும் புதிய செய்திகளை தொடர்புபடுத்தி ஆசிரியர் செரிவூட்டல்.

மதிப்பீடு

1) காற்றிலுள்ள நைட்ரஜன் சதவீதம்________

2) இந்திய பெருங்கடலில் சுனாமி_________ஆம் ஆண்டில் ஏற்பட்டது

3) பருவமழை பொய்பின் காரணமாக_______ ஏற்படுகிறது

4) சுனாமி என்ற சொல்________ மொழியிலிருந்து பெறப்பட்டது

5) தீவிரவாதம்______ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்


குறைதீர் கற்றல்

புரியாத மாணவர்களை கண்டறிந்து பாடப்பகுதி எளிய முறையில் எடுத்துக் கூறல்.ஆசிரியர் மாணவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை அளித்தல். மேலும் அடையாளம் காணும் திறனை மேம்படுத்த செய்தல்.

எழுதுதல்

ஆசிரியர் மாணவர்களிடம் புத்தக பயிற்சியினை எழுதச் செய்தல். இது வகுப்பறை செயல்பாடுகலாகும். 


தொடர்பணி

ஆசிரியர் மாணவர்களுக்கு புத்தக பயிற்சி வினாக்களுக்கு விடை எழுதி படித்து வர சொல்லுதல். இதனையே வீட்டு படமாக கொடுத்தல்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்