பண்டைய காலத்தில் கஞ்சி காலை சிற்றுண்டியாக பயன்படுத்திவந்தனர். அதனால் தான் நம் முன்னோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது
தேவையான பொருட்கள்
4 கப் தண்ணீர்
உப்பு தேவையான அளவு
1 டேபிள் ஸ்பூன் தயிர்
1/4 கப் கவுனி அரிசி
செய்முறை
அரிசியை நன்கு கழுவி, ஒரு துணியில் போட்டு பேன் காற்றில் ஆறவிட்டு எடுத்து, ஒரு கடாயில் சேர்த்து வறுத்து, (படக் சவுண்ட் வரும் வரை வறுக்கவும்) சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக்கொள்ளவும்
பின்னர் ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது, அரைத்த அரிசிப் பொடியை சேர்த்து கைவிடாது கலக்கவும். (மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு கலக்கவும். அரிசி மாவு அடிபிடிக்க வாய்ப்புள்ளது)மாவை கொஞ்சம் தண்ணீரில் கலந்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கலக்கவும். ஓரு சில சமயம் அரிசி மாவு கட்டிகள் கட்டிவிடும். ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவுக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். மாவை கலக்க கால் கப் தண்ணீர் சேர்க்கவும்.
அரிசி மாவு சேர்த்து கலந்து கொதிக்கும் போது, மாவு நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
கஞ்சி சூடாறியவுடன் தயிர் அல்லது மோர் கலந்து குடிக்கவும். மிகவும் சுவையாக இருக்கும். பண்டைய காலத்தில் கஞ்சியுடன் பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம் சேர்த்து குடிக்க கொடுப்பார்கள்.
0 கருத்துகள்