Ad Code

Ticker

6/recent/ticker-posts

பாதுகாப்பான ஆன்லைன் கல்வியில் பெற்றோரின் பங்கு

 


கொரானா பெருந்தொற்றின் தாக்கம் நம் இயல்பு வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது அதற்குத் தீர்வாக அமைந்தது தான் ஆன்-லைன் வழிக் கல்வி. இதில் வகுப்புகள் ஆன்லைன் தளங்கள் மூலம் நடத்தப்படுகின்றன வீட்டுப்பாடங்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டன பிள்ளைகள் சிறிது நேரம் ஸ்மார்ட்போனில் விளையாடினால் கூட கண்டித்த நாம் கல்விக்காக அவர்கள் பல மணி நேரம் ஸ்மார்ட்போனில் மூழ்கியிருக்கும் போது வேறு வழியில்லாமல் அனுமதித்து கொண்டிருக்கிறோம். ஆன்லைன் வழி கற்றல் முறையால் மாணவர்களின் கல்வி தடையில்லாமல் தொடர்வது மகிழ்ச்சியே அதேசமயம் இந்த செயல்முறையால் உடல்நலத்தில் பாதிப்பு மன அழுத்தம் போன்ற சில எதிர்மறை தாக்கங்களில் இருந்து அவர்களைக் காக்கும் கடமையும் பெற்றோருக்கு இருக்கிறது இதற்காக பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்



அன்றாட நடைமுறை

பள்ளி செல்லும் நாட்களிலேயே காலை வேளையில் பிள்ளைகளை சரியான நேரத்தில் கிளம்ப செய்வது பல பெற்றோருக்கு போராட்டமாக இருக்கும். இதில் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் சரியான நேரத்தில் வகுப்பில் கலந்துகொள்ள செய்வது பற்றி கேட்கவா வேண்டும். இதை தவிர்க்க தினமும் இரவில் சரியான நேரத்தில் தூங்கி காலையில் சீக்கிரம் எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் இதனால் ஆன்லைன் வகுப்பிற்கு சரியான நேரத்தில் தயாராக முடியும் வீட்டிலேயே இருந்தாலும் முறையான நேர பட்டியலை பின்பற்றும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தேவையான வசதிகள்

பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போது பென்சில், பேனா, நோட்டு புத்தகம் போன்றவை இருக்கிறதா என்று சரிபார்ப்போம் அதுபோல ஆன்லைனில் வகுப்பில் பங்கேற்கும் முன்பும் அதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை ஒருமுறை சரிபார்ப்பது நல்லது ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வீட்டில் சரியான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியம். கவனம் சிதறும் படியான இடங்களை தவிர்க்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் பிள்ளைகள் எப்போதும் நம் கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.



பாதுகாப்பு வழிமுறைகள்

இணைய தொழில்நுட்பம் சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. சரியான முறையில் தொழில்நுட்பத்தை கையாளும் போது அவற்றைத் தவிர்க்க முடியும். மாணவர்கள் வலைதளத்தில் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் தனிப்பட்ட வகையாகவும் மற்றவர் எளிதில் கண்டறியாத வகையிலும் இருக்க வேண்டும். தேவையற்ற மின்னஞ்சல்கள், வாட்ஸ்அஆப் தகவல்கள், முகநூலில் நண்பர் ஆவதற்க்கான கோரிக்கைகளை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற தகவல் வந்தால், உடனே பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் வெப்கேமராவை மூடி வைக்க வேண்டும் மடிக்கணினியில் உள்ள கேமராவை சிறிய வெள்ளைத் தாளை  ஒட்டி மறைக்கலாம்.ஆண்டி வைரஸ் போன்ற கணினி பாதுகாப்பு மென்பொருளை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இவற்றை எல்லாவற்றையும்விட பிள்ளைகள் பெற்றோருடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் இதனால் ஏதேனும் அஞ்சத்தகுந்த செயல்கள் நடைபெறும்போது அவை உடனே நம் கவனத்துக்கு வரும் நாமும் பிள்ளைகளை பாதுகாப்பாக வழிநடத்த முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்