Ad Code

Ticker

6/recent/ticker-posts

நலம் காக்கும் நல்லெண்ணெய் குளியல்



 ன்றைய நாகரீக உலகில், நாம் மறந்துவிட்ட பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதாகும். உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடிய தன்மை கொண்டதால் அதை "நல்ல எண்ணெய்" என்று முன்னோர்கள் குறிப்பிட்டார்கள் தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. குளிக்கும் முன் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சுடுநீரில் குளிப்பது தான் முறையான பழக்கம் அதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ உண்மையாகும்.

குளியலுக்கான விதிமுறைகள்

வார நாட்களில் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் அதிகாலையில் நல்லெண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும்.

எண்ணெய் தேய்க்கும் முறை

சுத்தமான நல்லெண்ணெய் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்றாக மசாஜ் செய்வதுபோல் தேயிக்க வேண்டும் முக்கியமாக தொப்புள், கை, கால், விரல்களின் நகங்களில் நன்றாகப் படியும்படி அழுத்தி தடவ வேண்டும். ஒருவர் தாமாகவே தேய்த்துக்கொள்வது விட மற்றொரு  தேய்த்து விடுவதே உடல் முழுவதும் எண்ணெய் படிவதற்கு ஏதுவாக இருக்கும் அதன் பின்னர் அரை மணி நேரம் ஊற விட்டு.  சோறு வடித்த கஞ்சி அல்லது அரைத்த வெந்தயத்துடன் சிகைக்காய் கலந்து தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.

கண்களில் என்னை விடுதல்

உடலுக்கு எண்ணை தேய்த்த பிறகு கண்களிலும் இரு துளிகள் நல்லெண்ணெயை விட்டு மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் தல 5 முறை கண்களைச் சுழற்ற வேண்டும். இதேபோல் எக்ஸ் வடிவிலும் சுழற்றிய பின்னர் வட்ட வடிவத்தில் ஐந்து முறை கடிகாரச் சுற்றாகவும் அதற்கு எதிர்ப்புறமாக சுழற்ற வேண்டும்.



வாய் கொப்பளித்தல்

10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். அதை உடனடியாக துப்பி விடாமல் கைகளால் பற்களைத் துலக்கிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும் சிறிது நேரத்தில் எண்ணை பிசுபிசுப்பு குறைந்து தண்ணீர் போல மாறியவுடன் அதைக் கீழே துப்பி விடவேண்டும் இதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

அருந்தும் முறை

2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை சிறிது சிறிதாக வாய்க்குள் உறிஞ்சி உமிழ்நீருடன் நன்றாக கலந்து விழுங்க வேண்டும் அதன் மூலம் மலம் எளிதாக வெளியேறி குடல் சுத்தமாகும்.

நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள்

உடலையும் கண்களையும் குளிர்ச்சி அடைய செய்து பார்வைத் திறனை கூர்மையாக்குகிறது. இதிலுள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் சீரான செரிமானத்துக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது தலை முடியில் உருவாகும் பொடுகு நீங்குவதுடன் சருமத்தையும் மிருதுவாக மாற்றுகிறது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்