Ad Code

Ticker

6/recent/ticker-posts

குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி

 


இன்றைய அதிநவீன வாழ்க்கை முறையில் அவசரமாக தயாராகும் விரைவுப் பண்டங்களுக்கும் இடம் உண்டு அதில் அதிகம் சேர்க்கப்படுவது குடைமிளகாய் அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

பச்சரிசி -1/2 கிலோ

குடைமிளகாய்-3

தக்காளி-3

 வெங்காயம் -2

காய்ந்த மிளகாய் -20

இஞ்சி பூண்டு விழுது -3தேக்கரண்டி

முந்திரி-100கிராம்

 சீரகம்-2 டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

எண்ணெய்-தேவையான அளவு

உப்பு-தேவையான அளவு



செய்முறை

தக்காளி முந்திரி சீரகம் காய்ந்த மிளகாயை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய குடை மிளகாயை சேர்க்கவும். லேசாக வதங்கியதும் அத்துடன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின்பு அரைத்த தக்காளி காய்ந்த மிளகாய் விழுதை அதில் சேர்க்கவும் கலவை சற்று கெட்டிதன்மை அடைந்தவுடன் அரிசி மற்றும் உப்பு சேர்த்து லேசாக கிளறவும் இறுதியாக ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கினால் சூடான சுவையான குடைமிளகாய் சாதம் தயார் எளிமையாகவும் இனிமையாகவும் சமைத்து ருசித்திட இந்த குடைமிளகாய் சாதம் உதவும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்