Ad Code

Ticker

6/recent/ticker-posts

தேமல் நீங்கி அழகு பெற

 


னித உடலின் ஒருங்கிணைந்த பாதுகாவலனாக திகழ்வது 'தோல்' காற்று ஒளி மட்டுமின்றி பல்வேறு கால சூழ்நிலைகளில் இருந்தும் உடலை பாதுகாப்பது தோலின் பிரதான வேலை நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் தோலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ஒவ்வாமையால் உண்டாகும் தேமலை சொல்லலாம் வெளிப்புற சூழ்நிலை மட்டுமல்லாமல் உடலின் உட்புறத்தில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தாலும் அதன் வெளிப்பாடாக தோலில் தேமல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்களை அதிகம் தாக்கும் பூஞ்சை நோயையே "தேமல்",என்கிறோம் சிலருக்கு ஏற்படும் பூஞ்சை தொற்று ஆரோக்கிய  குறைப்பாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம் உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் உருவாகும் தேமலை அலட்சியப்படுத்தும்போதோ கவனிக்கத் தவறும் போதோ உடல் முழுவதும் பரவி விடுகிறது தோலின் நிறம் திட்டு திட்டாக வெளுத்து காணப்படுவது தேமலின் அறிகுறியாகும்.



காரணம் என்ன?

சூரிய ஒளியே படாமல் இருக்கும் சருமத்தில்தான் பெரும்பாலான தோல் வியாதிகள் ஏற்படுகின்றன தோல் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் சர்வரோக நிவாரணியாக விளங்குவது காலை மற்றும் மாலையில் பிரகாசிக்கும் இளம் வெயில்தான் அது மனித உடலுக்கு பலவிதமான நன்மைகளைத் தரக்கூடியது. குளித்து முடித்ததும் உடலில் இருக்கும் ஈரத்தை முழுவதுமாக துவட்டாமல் ஆடைகளை அணிவதால் பூஞ்சை தொற்று ஏற்பட்டு உண்டாகிறது வேர்வை உண்டாகும் இடத்திலும் அழுக்குகள் தேங்கும் இடத்திலும் தேமல் உருவாகிறது. உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் தேமல் நோய் வர வாய்ப்புள்ள உணவுமுறை சுகாதாரத்தில் அலட்சியம் போன்றவைதான் தேமலுக்கு முக்கியமான காரணங்கள் என்கிறார்கள் தோல் நோய் மருத்துவ நிபுணர்கள்.

தீர்வு

தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும் பருவ நிலைக்கேற்ப பழங்களை உட்கொள்ள வேண்டும் உடலுக்கு அதிக சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் இரண்டு வேளை குளித்து உடலில் படிந்து இருக்கும் ஈரப்பதத்தை நன்றாகத் துடைத்து பிறகு ஆடைகளை அணிய வேண்டும் துளசியுடன் உப்பு சேர்த்து அடிக்கடி உடலில் தேய்த்துக் குளிக்கலாம் மருதாணி இலைகளை அரைத்து பூசியும் நீராடலாம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்