Ad Code

Ticker

6/recent/ticker-posts

இயற்கை முறையில் காலிபிளவர் சாகுபடி

 


* (70 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை*: 
 
 ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ வாம் 2 கிலோ மெட்டாரைசியம் கொடுப்பது நல்லது. 40 நாட்கள் நர்சரியில் விதைத்து முளைத்த காலிஃப்ளவர் கன்றுகளை நடவு வயலில் பராமரிக்க வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை: 

 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 

5ம் நாள்  E.M 200 ml per 10 liter tank அதிகாலையில் தெளிக்கலாம். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் எம் கரைசல் கலந்து தரவும். 10 ம் நாள்  கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம்.

 12 ம் நாள் பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம். 

 16 ம் நாள்  கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 19 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் +4 கிலோ பாஸ்போ பாக்டீரியா தரைவழி தரவும்.



 26ம் நாள்  பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கரைசல் கலந்து மாலையில் தெளிக்க லாம். மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 

 33 ம் நாள்  கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் + ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி தரவும். அல்லது நேரடி சாம்பல் 40 கிலோ ஒரு ஏக்கருக்கு பாசன ஈரத்தில் தூவலாம். 40 ம் நாள்  10 லிட்டர் டேங்க்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லதுபஞ்சகாவியா  200 ml per கலந்து தெளிக்கலாம். தரைவழி ஏக்கருக்கு மீன் அமிலம் 2 லிட்டர் கொடுக்கலாம்.

 43 ம் நாள்  கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 47 ஆம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனாஸ் கலந்து தெளிக்கலாம். தரைவழி ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் மற்றும் 2 லிட்டர் மீன் அமிலம் பாசனத்துடன் கொடுக்கலாம்.ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி தரவும். அல்லது நேரடி சாம்பல் 40 கிலோ ஒரு ஏக்கருக்கு பாசன ஈரத்தில் தூவலாம்.

 54 ம் நாள் மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம். 

 58 ம் நாள்  கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 

 61 ஆம் நாள் தரைவழி ஒரு ஏக்கருக்கு 3 கிலோ பாஸ்போ பாக்டீரியா தரைவழி பாசனத்துடன் தரவும் அல்லது ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி தரவும். அல்லது நேரடி சாம்பல் 40 கிலோ ஒரு ஏக்கருக்கு பாசன ஈரத்தில் தூவலாம். 



 65ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வெட்டிசீலீயும் லேக்கானி மற்றும் 50 மில்லி பெவேரியா பேசியானா கலந்து தெளிக்கலாம். 

 68 ம் நாள்  10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி பஞ்சகாவியா கலந்து தெளிக்கலாம். ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் 1 ஏக்கருக்கு அமிர்தக்கரைசல் ஒரு 100 லிட்டர்,  ஜீவாமிர்தம் 200 லிட்டர், மீன் அமிலம் 2 லிட்டர்,  என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்..  இயலுமானால்  சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 40 to 45 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு..  களை கட்டுப்படும்.  நல்ல தரமான பூக்கள் கிடைக்க பஞ்சகாவியா திரவத்தை முப்பது நாட்களுக்கு பிறகு 5 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது மற்றும் சாம்பல் அதிக அளவு தரைவழி கொடுப்பது நல்லது. நிலத்தின் நீர் கொள்ளும் தன்மைக்கேற்ப அதிக நாள் (7 நாட்கள்) இடைவெளியுடன் குறைந்த அளவு தண்ணீரை காலை நேரத்தில் பாய்ச்சுவது நல்லது. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்