Ad Code

Ticker

6/recent/ticker-posts

முருங்கை கீரை சூப் செய்வது எப்படி



 நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் மிக முக்கியமானது முருங்கை கீரை .முருங்கை கீரை பல்வேறு வகையாக சமைத்து சாப்பிடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப் செய்து தருவது உடல் நலத்திற்கு நல்லது. 


தேவையான பொருட்கள் 

முருங்கைகீரை – 3 கொத்து
 சின்ன வெங்காயம் – 10 எண்ணம் 
 சீரகம் – 2¼ ஸ்பூன் 
 உப்பு – தேவையான அளவு 
 மிளகு – 2 ஸ்பூன் 
கருவேப்பிலை– 2 கீற்று 
 தண்ணீர் – 8 டம்ளர் (இரண்டு கை கீரைக்கு) 



 செய்முறை 
முதலில் முருங்கைக் கீரையை அலசி உருவிக் கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை தோலுரித்து நேராக வெட்டிக் கொள்ளவும்.கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகு, சீரகத்தை ஒரு சேர பொடியாக பொடித்துக் கொள்ளவும்.

குக்கரில் முருங்கைக் கீரை, நேராக நறுக்கிய சின்ன வெங்காயம், ½ ஸ்பூன் சீரகம், தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைக்கவும்.குக்கரில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கி விடவும்.குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு சேர நன்கு கிளறவும்.



பின்னர் தண்ணீரை தனியே வடித்து விடவும்.முருங்கைக் கீரையைப் பிழிந்து எடுக்கவும்.ஒரு கிண்ணத்தில் முருங்கைக் கீரைச் சாற்றினை எடுத்து அதில் தேவையான உப்பு, பொடித்துள்ள மிளகு சீரகப் பொடி, பிழிந்த முருங்கை இலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.சுவையான முருங்கைக் கீரை சூப் தயார்.இதனை சூடாகப் பருகவும்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்