தரங்கம்பாடி கோட்டை:
இரகுநாத நாயக்கருடன் 1620இல் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் 1620-21ஆம் ஆண்டுகளில் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி கோட்டை ஒன்றைக் கட்டியது. டேன்ஸ்பர்க் என்று பெயரிடப்பட்ட இக்கோட்டையைப் பாதுகாக்க நென்றிக்ஹஸ் என்பவர் தளபதியாக நியமிக்கப்பட்டார். முப்பத்தாறு பீரங்கிகள் இக்கோட்டையில் நிறுவப் பட்டன. இக்கோட்டையைக் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் (1999:299) பின்வருமாறு விவரித்துள்ளார். நான்கு மூலைகளிலும் கொத்தளம் கொண்ட அமைப்போடு கற்களால் கட்டப் பெற்ற புற அரண் கொண்ட சுவர்களோடு கோட்டை அமைப்பை ஏற்படுத்தினர். இவ்வரண்களைச் சுற்றிலும் அகழி அமைத்தனர். அகழியைக் கடந்து உள்ளே செல்ல இழுவைப் பாலத்தையும் அமைத்தனர். மூன்று புறமும் சிப்பாய்கள் தங்குமிடம் (Barracks) கிடங்குகள் (Ware House) சமையலறை, மற்றும் சிறை அறைகளை அமைத்து, கிழக்கே இரண்டு அடுக்கு மாளிகையை உரு வாக்கினர். வளைந்த உட்கூரை பெற்றுத்திகழும் பூமிக்கு அடியில் அமைந்த தளத்தில், இராணுவத் தளவாடக் கிடங்கு, வணிகக் கிடங்கு ஆகிய வற்றையும், மேல்தளத்தில் தேவாலயம், கவர்னரின் தங்குமிடம், தலைமை வணிகர், மற்றும் காப்டனின் தங்குமிடங்கள் ஆகியவற்றையும் அமைத்தனர். இவற்றிற்குக் கடலும், ஆறும் காப்பாக அமைந்தன. தரங்கம்பாடி என்னும் அவ்வூருக்கு எந்தவித மதிலரண்களும் இல்லாமல் இருந்தன. ஊரின் எல்லைகளைக் குறிக்கும் இடங்களிலும், சுங்கத் தீர்வை வசூலிக்கப் பெறும் இடத்திலும் நாயக்க மன்னரின் இலச்சினை பெரிக்கப் பெற்ற வழவழப்பான கற்கள் இருந்தன. டேனிஸ் பர்க் கோட்டையில் நிலையாகத் தங்கிக்கொண்டு ஆண்டுதோறும் நாயக்க மன்னருக்குப் பகுதி அளிப்பதற்கு உரிய அனுமதியை கி.பி.1624இல் இரகுநாத நாயக்கர் வழங்கினர். கி.பி.1646இல் கோட்டைக்கு 300 மீட்டர்கள் மேற்காகத் தஞ்சை செல்லும் நெடுவழியில் பெரிய கத்தோலிக்க தேவாலயம் எழுப்பப் பெற்றது. கி.பி.1650இல் தரங்கம்பாடி நகரமாக வளர்ச்சி பெற்றது. விஜயராகவ நாயக்கரின் இறுதிக் காலத்தில் தஞ்சை நாயக்க அரசுக்கு ஏற்பட்ட நலிவும் சோதனைகளும் டேன்ஸ்பர்க் கோட்டைக்குச் சாதகமாய் அமைந்ததாலும், தங்களுக்கென 50 சதுரமைல் பரப்பளவுள்ள சோழ நாட்டுப் பகுதியின் உரிமை கிடைத்ததாலும் டேன்ஸ்பர்க் கோட்டையும், தரங்கம்பாடி நகரமும் வலிமை பெற்ற பாது காப்புடைய நகரமாக மாரின. இதனால் விஜய ராகவ நாயக்கரின் இறுதிக் காலத்திலும், தஞ்சை மராட்டியர்களின் தொடக்க காலத்திலும் தரங்கம்பாடி முழுவதற்கும் கோட்டைச் சுவர் எழுப்பப் பெற்றதோடு அதன் வெளிப்புறத்தே அகழியும் தோண்டப் பெற்றது. அவ்வகழி ஆற்றோடும் இணைக்கப் பெற்றது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தரங்கம்பாடியும் டேனிஷ்பர்க் கோட்டையும் நீர் சூழ்ந்த பேரரண் பெற்ற நகரமாக விளங்கலாயிற்று. ஜான் ஓலேஃபஸன் என்பவர் 1623 மே மாதம் பீரங்கிச் சிப்பாயாக, தரங்கம்பாடிக்கு வந்தார். ஒன்றரை ஆண்டுகள் தரங்கம்பாடியில் வாழ்ந்துள்ளார். டேனீஷ்பர்க் கோட்டையைக் கட்டியதில் நம்மவர்களின் பங்களிப்பைப் பாராட்டிப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
செஞ்சி- திருவண்ணாமலை சாலைக்கு வெகு அருகில் சாலையின் வலது புறம் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உள்ளது. மலைமீது ஏறி உச்சிக்கு செல்லும் வழியில் இரு பெரிய தானிய களஞ்சியங்களை காணலாம். இதையடுத்துத் தெய்வ மில்லாத ரெங்கநாதர் கோவில் சிப்பாய்கள் தங்கிய கட்டடமும் இதர சில கட்டடப் பகுதிகளும் உள்ளன.
கிருஷ்ணகிரி கோட்டை ராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. மலைக்கோட்டைக்கு செல்ல கற்படிகள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்ட மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு மாளிகை, பார்வையாளரும் இடம்பெறக்கூடிய வட்டமான தர்பார் ஒன்றும் சிறு பீரங்கியும் இங்கு காணப்படுகின்றன
செஞ்சி- திருவண்ணாமலை சாலையின் இடது புறம் சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இராஜகிரி மலைக்கோட்டை உள்ளது. இராஜகிரிக்குச் செல்லும் வழியில் பட்டாபி ராமர் கோயில் உள்ளது. இராஜகிரி கோட்டைக்குள் மராத்திய கட்டடக்கலை முறைப்படி உருவான கல்யாண மண்டபம் உள்ளது. ஏழு அடுக்குகளைக் கொண்ட இக்கட்டடம் மரத்தை பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ளது. கல்யாண மண்டபத்தை அடுத்து வெடி மருந்து சாலை, பெரிய தானிய களஞ்சியம், வீரர்கள் தங்கி இருந்த கட்டடங்கள், இராஜா தேசிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் மேடை, வெங்கடரமணா கோயில் ஆகியவை உள்ளன. வெங்கடரமணா கோவிலின் வேலைப்பாடு மிகுந்த ஒற்றைக் கல்தூண்கள் சிலவற்றைப் பெயர்த்து, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ராஜகிரி மலைக்கோட்டையில் பார்வையாளர்கள் இடம்பெறக்கூடிய அரச தர்பார் ஒன்று இம்மலை உச்சியில் உள்ளது. இது இந்தோ இஸ்லாமிய பாணியில் இந்த தர்பார் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு நம்மை அசத்திவிடும். மண்டபத்தின் மூடிய கூரை ரசிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைமீதுள்ள குறிப்பிடத்தக்க மற்றுமொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு. மலைமீது அரங்கநாதர் கோவில் ஒன்றும் உள்ளது. இது நாயக்கர் கால கட்டிடக்கலையை கொண்டுள்ளது. இங்கு நாலு மீட்டர் நீளமும் இரண்டு மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்று உள்ளது.
இராஜகிரி மலைக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. எட்டாவது வாயிலுக்குள் நுழையும் இடத்தில் மரப்பாலம் ஒன்று உள்ளது. உச்சியில் நாணயச் சாலை, தெய்வம் இல்லாத ரங்கநாதர் கோவில், ராஜாதேசிங்கு தர்பார் மண்டபம், மணிக்கூண்டு ஆகியவற்றை காணலாம்.
இராஜகிரி மலைக்கோட்டையை அடுத்து உட்கோட்டை (Inner Fort) உள்ளது. இக் கோட்டை பகுதியில் புதுச்சேரி வாயில், வேலூர் வாயில் ஆகியவை உள்ளன. புதுச்சேரி வாயில் அருகில் பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய கட்டிடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. வாயில் அருகில் உள்ள கோட்டைச் சுவரில், ஆற்காடு நவாப் சதாத் உள்ளான் உல்லாகான் கிபி 1713இல் தேசிங்குராஜானை வீழ்த்தி இக்கோட்டையை பிடித்த வெற்றி செய்தியை குறிக்கும் 'பாரசீக மொழி கல்வெட்டு' உள்ளது.
ராஜகிரி மலைகோட்டைக்குத் தெற்கில் சந்த்ரயன் துர்க்கம் மலைக்கோட்டை உள்ளது.
தமிழ்நாட்டில் செஞ்சிக்கோட்டையை போல் சிறப்பு மிக்கது வேறு எதுவும் இல்லை எனலாம். இக்கோட்டை நமது பண்பாட்டை அறிய உதவும் திறந்த தொல்பொருள் சின்னமாகும்.
செஞ்சியிலுள்ள, கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும் ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை இந்த மாபெரும் கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன. இவற்றில் 800 அடி உயரமுள்ள ராஜகிரி மலைதான் தனியாக இவற்றோடு பொருந்தாமல் நிற்கும் ஒன்றாகும் தற்போது ஒரு பாலத்தால் 20 மீட்டர் வரை ஆழமுள்ள சுனை இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்