Ad Code

Ticker

6/recent/ticker-posts

mansabdars history in Tamil



முகலாய பேரரசின் சிறந்த அரசர்களுள் ஒருவர்தான் அக்பர்.இவர் அறிமுகப்படுத்திய முறைகளுள் ஒன்று மன்சப்.

முதலில்,

மன்சப் என்றால் என்ன?

மன்சப் என்பதற்கு தமிழில் தகுதி, அந்தஸ்து என்று பொருள்.

இந்த மன்சப் என்ற தகுதியைப் பெற்றவர்தான் மன்சப்தார்.

மன்சப்தாரி முறை

இந்த முறையின் படி பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அலுவலர்கள் ஆகியோரது பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக சேர்க்கப்படும்.

இன்றைய காலத்தில் புரியும்படி சொன்னால், சமீபத்தில் மோடி, இந்தியாவின் முப்படைகளான தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து ஒரு பதவி உருவாக்கப்படும் எனக் கூறி Chief Of Defence Staff என்ற பதவியை உருவாக்கினார் அல்லவா?

அதுபோல அக்பர் காலத்தில் ராணுவம், குடிமைப் பணி அதிகாரிகளின் பணிகளை ஒருங்கிணைக்க கொண்டு வரப்பட்ட ஒரு முறைதான் மன்சப்தாரி முறை.

இந்த தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் எனப்படுவார்.

இந்த மன்சப்தார் முறையில் 2 முறைகள் பின்பற்றப்பட்டன.

  1. சாட்
  2. சவார்

இதில் சாட் என்பது ஒருவரின் தகுதியைக் குறிக்கும்.

சவார் என்பது அந்த மன்சப்தார் பராமரிக்க வேண்டிய குதிரைகள், குதிரை வீரர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

இந்த மன்சப்தார் எத்தனை குதிரைகளைப் பராமரிக்கிறாரோ அதைப் பொறுத்து அவரது ஊதியம் முடிவு செய்யப்படும்.

ஒரு மன்சப்தார் 10–10,000 குதிரைகள் வரைப் பெறலாம்.

இந்த மன்சப்தார்கள் அதிக ஊதியம் பெற்றனர்.இந்த மன்சப்தார் பத்தி இன்னும் சுருக்கமாக சொன்னால், நம்ம சின்ன வயசுல படிச்சிருப்போமே..

தெனாலிராமன் கதை (சினிமா இல்லை) யில் கிருஷ்ண தேவராயர் குதிரைகளை வளர்க்க அவர்களது அமைச்சர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு கொடுத்திருப்பார்.

அனைவரும் குதிரைகளை சிறப்பாக வளர்க்க தெனாலிராமன் சரியாக வளர்த்திருக்க மாட்டார்.

காலக்கெடு முடிந்தவுடன் அனைவரும் குதிரைகளை அழைத்து வருவர்.

அரசர் குதிரைகளைப் பார்வையிடுவார்.

உள்ளே எட்டிப்பார்த்த உடன் தெனாலிராமன் வளர்த்த குதிரை மட்டும் அரசரின் தாடியைப் பிடித்து இழுக்கும்.

சிறு வயதில் படித்தது நினைவிருக்கிறதா??

அந்த முறைதான் மன்சப்தாரி முறை.இப்போ மீண்டும் கான்சப்ட்டுக்குள்ள போவோம்.

இந்த ஊதியம் பெறுவதற்கு முன் அமைச்சர்கள் அனைவரும் அரசர் முன்னிலையில் குதிரைகளை காட்சிப்படுத்த வேண்டும்.

இந்த மன்சப்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட குதிரைகளை அரசர் தமது விருப்பப்படி பயன்படுத்தலாம்.

இந்த மன்சப்தாரர்களுக்கு ஊதியம் பணம் & நிலங்களாக வழங்கப்பட்டன.

இவ்வாறு செயல்படுத்தப்பட்ட முறைதான் மன்சப்தாரி முறை.



1571 ஆம் ஆண்டில் அக்பர் அறிமுகப்படுத்திய முகலாயபேரரசின் ராணுவம் மற்றும் பொது நிர்வாக முறைக்கு அடிப்படையாக 'மன்சாபாத்ரி முறை'இருந்தது.பாரசீக நாட்டில் பின்பற்றப்பட்ட முறையான மன்சப்தார் யினை தோற்றுவித்தார். மன்சாப் என்ற வார்த்தை அரபு மொழியில்" தரம் அல்லதுதகுதி" என்று பொருள்.மன்சப்தார்கள் பேரரசிற்கு உதவிட தாங்களே போர்வீரர்களை தெரிவு செய்து கொன்டனர். மன்சப்தார்களின் தகுதிக்கேற்ப சிறு நிலப்பகுதிவழங்கப்பட்டது இராணுவம் மற்றும் சிவில் துறை இரண்டிற்கும் இந்த அமைப்பு பொதுவானது,இது மங்கோலியாவில் உருவானதாக நம்பப்படுகிறது. பாபர் மற்றும் ஹுமாயூன் ஆட்சியின் போது இது மிகவும் பரவலாக இருந்தது. அக்பர் தனது திறமையால் இவ் அமைப்புக்கு முக்கியமான மாற்றங்களை செய்தார்.

அக்பரது ஆட்சி முறையில் மன்சப்தாரி முறை முக்கிய இடம் வகித்தது. இம்முறையின்கீழ் ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு தகுதிநிலை வழங்கப்பட்டது. குறைந்ததபட்ச தகுதிநிலை மன்சப்தார் 10 என்பதாகும் அதிகபட்ச தகுதி மன்சப்தார் 5000. இது உயர் குடியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அரசகுலத்தை சேர்ந்தவர்களுக்கு அதற்கும் மேலான தகுதிநிலைகள் நிர்ணயிக்கப்பட்டன. மன்சப் தகுதிநிலைகள் சத் மற்றும் சாவர் என இருவகைப்படும். சத் என்பது ஒருவரது தனிப்பட்ட அந்தஸ்தைக் குறிப்பதாகும். சாவர் என்பது ஒருவர் வைத்திருக்க வேண்டிய குதிரை வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது. ஒவ்வொரு சாவரும் குறைந்தபட்சம் இரண்டு குதிரைவீரர்களையாவது பெற்றிருக்கவேண்டும். மன்சப் தகுதிநிலைக்கு வாரிசுரிமை கிடையாது. நியமனங்கள் பதவி உயர்வுகள், பதவிநீக்கங்கள் அனைத்தும் நேரடியாக அரசரால் மேற்கொள்ளப்பட்டன.





கருத்துரையிடுக

0 கருத்துகள்