Ad Code

Ticker

6/recent/ticker-posts

paper gold advantage and disadvantage

 


ங்கத்தை நகையாகவோ, பாராகவோ, நாணயமாகவோ வாங்குவதற்கு பதிலாக தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீட்டின் பலன்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 'பேப்பர் கோல்டு'-ஆக வாங்குவது பல வகைகளில் நன்மை அளிக்கக்கூடியது.

'பேப்பர் கோல்டு' என்பது தங்கத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்யப்பட்டு அந்த முதலீட்டின் பயனை முதலீட்டாளர்களுக்கு அளிப்பது. இந்த முதலீட்டின் வருவாய் தங்கத்தின் விலைப்போக்கை ஒட்டியே இருக்கும். தவிர, செய்கூலி, சேதாரம் கிடையாது; தரம் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை; பாதுகாக்க லாக்கரும் வேண்டியதில்லை. ஆனால், தங்கத்தில் கிடைக்கும் வருவாய்க்கு நிகரான பலன்கள் இதில் உண்டு. பேப்பர் கோல்டு முதலீட்டை நாம் மூன்று வகைகளில் மேற்கொள்ள முடியும்.

கோல்டு இ.டி.எஃப்: இ.டி.எஃப் என்பது 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்' என்பதன் சுருக்கம். தங்கத்தின் மீது நேரடியாக மேற்கொள்ளப்படும் இந்த வகை முதலீடு, பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்தத் திட்டத்தில் நாம் மேற்கொள்ளும் முதலீட்டுக்கேற்ப, நமக்கு தங்கம் யூனிட்டுகளாகப் பிரித்தளிக்கப்படும். அதாவது, ஒரு யூனிட் என்பதை ஒரு கிராம் எனக் கணக்கில்கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒரு யூனிட் முதல் எத்தனை யூனிட் வேண்டுமானாலும் ஒருவர் வாங்கிக்கொள்ள முடியும். நம் வசதிக்கேற்ப மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையிலும் வாங்கிக்கொள்ளலாம்.


இந்த முதலீட்டில் புரோக்கரேஜ் சார்ஜ், ஃபண்ட் மேனேஜ்மென்ட் சார்ஜ் ஆகியவை உண்டு. ஆனால், இவை இரண்டுமே மிகவும் குறைவானவை (0.5% -1% அளவு மட்டுமே இருக்கும்). இந்த முதலீட்டின் மூலம் ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கப்பெறும் லாபம் வருமான வரிக்கு உட்பட்டதாக இருந்தாலும், நீண்ட கால மூலதன ஆதாய வரி அடிப்படையில் செலுத்தினால் போதும். மேலும், தங்கத்தைப் போலவே, அவசரத் தேவைக்கு கோல்டு இ.டி.எஃப்-களையும் அடமானம் வைத்து வங்கிகளிலிருந்து பணம் பெற முடியும்.

செபியால் அங்கீகரிக்கப்பட்ட பங்குத் தரகர்களிடம் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளைத் தொடங்க வேண்டும். ஆண்டுக்கு 0.40 முதல் 0.80% பராமரிப்புக் கட்டணம் இருக்கும். எந்த ஒரு வர்த்தக தினத்திலும் வாங்கலாம், விற்கலாம். வரிச் சலுகை கிடைக்காது. மூலதன ஆதாய வரி இருக்கும். பத்துக்கும் மேற்பட்ட கோல்டு இ.டி.எஃப்கள் தற்போது வர்த்தகமாகி வருகின்றன.”

“இந்திய ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது வெளிடப்படுவது ‘எஸ்.ஜி.பி’ (சாவரின் கோல்டு பாண்டு) எனப்படும் தங்கப் பத்திரங்கள். இவற்றில் வரும் ஜூன் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலான காலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஒரு கிராமின் விலை இரண்டு நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும்.


இதன் முக்கிய அம்சங்கள்…

1. தனிநபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக நான்கு கிலோ வரை முதலீடு செய்யலாம். 

 2. முதலீட்டுக்கு வட்டியாக ஆண்டொன்றுக்கு 2.5% அளிக்கப்படும். 

3. முழுப் பலன்களைப் பெற, முதிர்வுக் காலமான எட்டு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். சில நிபந்தனைகளுடன் ஐந்து வருடங்கள் முடிவடைந்த பிறகு வெளியேறலாம். 

4. கணவன்-மனைவி இணைந்தும், மைனர் பேரிலும் முதலீடுகளைச் செய்யலாம். 

 5. குறிப்பிட்ட தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் முதலீடு செய்யலாம். 

 6. தனிநபருக்கு முதலீடு ஆரம்பத்திலிருந்து முழுக்காலத்தில் முதிர்வடையும்பட்சத்தில் பெறப்படும் தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்.”





கருத்துரையிடுக

0 கருத்துகள்