தேவையான பொருட்கள்
1. வெள்ளை வேல மரப்பட்டை - 10 கிலோ
2. நாட்டு சர்க்கரை - 15 கிலோ
3. தென்னைக்குறும்பை - 5 கிலோ
4. கடுக்காய் -250 கிராம்
5. கொடி பிரண்டை - 2 கிலோ
6. கறுப்பு பன்னீர் திராட்சை - 1கிலோ
7. தண்ணீர் - 15 லிட்டர்
8. வாழைப்பழம் -10
9. வைக்கோல் - 1கிலோ
10. பிளாஸ்டிக் டிரம்(200லி) -1
செய்முறை
50 லிட்டர் தண்ணீரில் ஊற்றப்பட்ட டிரம்மில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட வேல மரப்பட்டை, இரண்டாக உடைக்கப்பட்ட தென்னம் குறும்பைகள், நாட்டு சர்க்கரை, நறுக்கப்பட்ட பிரண்டை, பொடியாக அரைக்கப்பட்ட கடுக்காய்ப் பொடியை ஒன்றாகப் போட்டு கலக்க வேண்டும். தோலுடன் உரித்து வாழைப்பழம், திராட்சை மற்றும் வைக்கோலையும் போட்டு நன்றாக கலக்கி விட வேண்டும். காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து 15 நாட்கள் கலக்கி வர வேண்டும். பின்பு 16 ஆம் நாள் டிரம்மின் முழுக் கொள்ளளவு வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். 17 ஆம் நாள் முதல் இக்கரைசலை பயன்படுத்தலாம். டிரம்மின் வாய்ப்பகுதியை ஈக்கள் , கொசுக்கள் செல்ல முடியாதவாறு சாக்கு அல்லது துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும். இக்கரைசலை 1 வருடம் வரை தினம் தோறும் இருவேளைகள் கலக்கி பயன்படுத்தலாம். மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களிலும் பாதி அளவு மட்டும் எடுத்து 100 லிட்டர் அளவுக்கு தேவைக்கேற்ப தயாரித்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
10லி தண்ணீரில் 100 மி.லி கலந்து இலைகள் மீது தெளிக்கலாம்.
பயன்கள்
தோட்டக்கலை, காய்கறிப் பயிர்கள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம். பூச்சி விரட்டியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் நன்கு செயல்படும். காய்கறிப் பயிர்களில் வைரஸ் நோய் உட்பட, பூச்சி, புழுக் கட்டுப்பாட்டிற்கு இயற்கை வழித் தீர்வாக இக்கரைசலை பயன்படுத்தலாம். மாதம் இரண்டு முறை தெளிக்கலாம்.
0 கருத்துகள்