Ad Code

Ticker

6/recent/ticker-posts

பசுந்தாள் எரு

 

சுந்தாள் எருவாவது,கோதுப்பயிரை விளைவித்து பூ பூக்கும் தருணத்தில் உழுது அவைகளை மண்ணுடன் கலந்து மடியச்செய்வதாம். ஏன் கோதுப்பயிரை இவ்வாறு உபயோகிக்க வேண்டும்? என்றால் மற்ற செடிகளுக்கு உதவாமல் ஆகாயத்தில் இருக்கும் நைட்ரஜன் வாயுவை அவைகள் கிரகித்து வேர்களில் சேர்கின்றன. அவ்வாறு சேர்ந்த நைட்ரஜன் வாயு மண்ணைக் கொழுமையாக்கி  அதிக விளைச்சலை கொடுக்கிறது. ஏன் பூவெடுக்கும் தருணத்தில்  பயிர்களை அழித்து விட வேண்டும் என்றால் அச்சமயத்தில்தான் செடிகளின் நார் முதலியன முற்றாமல் இருப்பதனால் அவை எளிதில் மக்கி எருவாகவும்.ராயசூடி தாலுக்காவில் ஆனி ஆடி மாதத்தில் விதைக்கும் கம்பு சோளம் இவைகளுடன் சணல் விதையை கலந்து விதைத்து புரட்டாசி ஐப்பசியில் சணல் செடியை வேருடன் பிடுங்கி நன்செய் வயலுக்கு எருவாக்குகிறார்கள். ஹிந்துபூர் தாலுகாவில் பசுந்தாள் எருவுக்கென்றே சணலை விதைத்து நெல் வயலில் மடிக்கிறார்கள். திண்டுக்கல்லில் சோளத்துடன் மொச்சையைக் கலந்து கிணற்றுப் பாசனம் உள்ள நிலங்களில் விதைத்து சோளம் அறுவடையான பின்பு மொச்சைக் கொடியை அதே நிலத்தில் மடித்து நெல் விளைவிக்கிறார்கள். கோயம்புத்தூரில் சில கிராமங்களில் கொத்தவரை விதைத்து பிடிங்கி சேற்றில் புதைக்கிறார்கள்.  ஓசபேட்டைத் தாலுகாவில் துங்கபத்திரை நீர்ப்பாய்ச்சல் நிலங்களில் மொச்சைக்கொட்டையை  சில மாதம் வளர்த்து நிலத்தை சேறுசெய்து அவைகளை புதைத்து நெல் விளைவிக்கிறார்கள். அங்கே சித்திரை வைகாசி ஆனியில் கரும்பு அறுவடையான நிலம் புரட்டாசி வரையிலும் தரிசாய் இல்லாமல் பசுந்தாள் எருப்பயிரை விளைவிக்கிறார்கள். பர்மாவில் மொச்சைக் கொடியை சேற்றில் உழுது மட்கச்செய்வது வழக்கம்.அமெரிக்கர்கள் தட்டைபயிரை  அதிகம் பசுந்தாள் எரு கொண்டதாக  மதிக்கிறார்கள். மேலும் அது வெகு சீக்கிரத்தில் தழைத்து மட்கத்தக்கது.  அமெரிக்காவில் தட்டைப் பயிற்று கொடியை எருவாக்கி பிறகு கரும்பு பருத்தி நெல் முதலியவற்றை பயிராக்குவார்கள். தமிழ்நாட்டில் சில இடங்களில் நெல் அறுப்பான பிற்பாடு பனிக்காலத்தில்  பசுந்தாள் எரு பயிரை  விளைவிப்பதனால், நிலம் கொழுமை அடைகிறது. காட்டில் தானாய் முளைக்கும்  கொளுஞ்சி, ஆவாரை முதலியன நன்செய் நிலத்திற்கு ஏற்ற பசுந்தாள் எரு. சில இடங்களில் ஆற்றோரத்திலும் வாய்க்கால் பக்கங்களிலும் வளர்கிற புங்கமரம்,சரளை நிலங்களில் வளர்கிற வாதநாராயணம், கிராமங்களில் நிழலுக்கென்று வைத்திருக்கும் வேம்பு பூவரசு முதலிய மரங்களின் தழை எருவாகிறது  இவைகளும் பசுந்தாள் எருவுக்கு சமமானதுதான்.புளிய மரம், அரச மரம், இலுப்பை மரம், முதலியவற்றின் தழையும் எருவாகின்றது. கொளுஞ்சி ,அவுரி,வாதநாராயணம், புங்கமரம் முதலியவற்றின் தழைகளில் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன.

புன்செய்யிலும் நன்செய் நிலங்களிலும் எல்லா பயிர்களுக்கும் பசுந்தாள் எரு உபயோகிப்பது அவசியம் காங்கேய நாட்டு புன்செய் நிலங்களில் விளையும் கம்பு,சோளம் இவைகளுக்கு கொளுஞ்சி தூளாக நறுக்கி பட்டைசாலில் போட்டு எருவாக்குகிறார்கள். நெல் அறுவடையானவுடனே வயலை இரண்டு தரம் உழுது ஆறுபடி கொள்ளை விதைத்து இரண்டு மூன்று மாதத்தில் எவ்வளவு விளையுமோ அவ்வளவையும் உழுது மண்ணில் கலப்பது சால சிறந்தது. கொள்ளுக்கு ஈரம் அதிகம் இல்லாவிட்டாலும் இவ்வாறு பயிரிட்டால் பனியின் உதவியில் தழைஉண்டாகும். ஆடுமாடுகள் வயல்களில் செல்லாமல் பாதுகாப்பது  அவசியம்.கார்த்திகை மாதத்தில் சோளம்,கம்பு, சாமை முதலியவை அறுவடை செய்தபின்  வேறு பயிர் இல்லாவிட்டால் நிலத்தை உழுது கொள் விதைக்க வேண்டும்.அவுரி,கொளுஞ்சி இவைகளை விதைப்பது சிறந்த பலன் கிடைக்கும். கொளுஞ்சியை  விதைத்து  பயிர் செய்தால் ஒருமுறை விதைத்தது எப்போதும் முளைத்துக் கொண்டேயிருக்கும். காய் முற்றிய பின்  செடி சேற்றில் மிதிக்கப்பட்டாலும்  நீர் இருக்கும் வரையில் விதை முளைக்காமல் மண் உலரும்போது விதை முளைக்க ஆரம்பிக்கிறது. கொள்,கொளுஞ்சி நிலம் முழுவதும் படர்வதனால் களைகள் முளைப்பது கிடையாது.சிலர் நிலத்தை தரிசாய் உழாமல் போட்டால்தான் மண் செழுமை படும் என்று கூறுவார்கள்.அது தவறான முறை நிலத்தை புரட்டிப் புரட்டி சூரியனின் கதிர்கள் படும் வரை உழவேண்டும்.ஒரு பலம் மண்ணை கால் பலம் புழுதியாக்கினால் அம்மண்ணுக்கு எரு போட வேண்டியதில்லை. ஆக்ஸிஜன் மண்ணுடன் கலந்து கரையாத தன்மையுள்ள தாதுவர்க்கங்கலை கரைய செய்வதனாலே நிலம் செழுமையடைகிறது. ஆக்ஸிஜன் தரிசு நிலத்தில் தானாக கலப்பதற்கு நெடுநாளாகும். நிலத்தை புழுதியாக்கி வைத்தால் ஆக்ஸிஜன் சீக்கிரத்தில் கலந்து மண்ணை செழுமையாக்கும். புழுதி வெறுமையாய் இருப்பதைவிட அதில் ஏதாவது ஒரு கோதுபயிரை விளைவித்து பசுந்தாள் எருவாக்குவது இன்னும் சிறந்தது. ஒவ்வொரு பயிருக்கும் புழுதியும் பசுந்தாள் எருவும் இருந்தால் எதுவும் தப்பாமல் உபயோகிப்பது நல்லது.

றண்ட நிலத்தை பசுந்தாள் எரு குளிரச்செய்கிறது.மணற்பாங்கான நிலத்தில் தாதுவர்க்கங்களை நீர் அடித்துப் போகாமல் பாதுகாக்கிறது. களிமண்ணில் பசுந்தாள் மட்கி நிலம் இளகி விருத்தியாகும். பசுந்தாள் எருவாகிற அகத்தி, மொச்சை, காராமணி, கொத்தவரை, வேர்க்கடலை, முதலிய செடிகளை வேர் அறாமல் பிடுங்கி பரிசோதித்தால் உண்ணியைப் போன்ற பருக்கள் அதிகம் இருப்பதை காணலாம்.இப்பருக்களில் கண்ணுக்குத் தெரியாத கருத்துகள் இருக்கின்றன. அவை நைட்ரஜன் வாயுவை ஆகாயத்திலிருந்து கிரகித்து மண்ணில் சேர்க்கின்றன.கோதுப்பயிர் இக்கருக்களால் கிரகிக்கப்பட்ட நைட்ரஜன் வாயுவை பின்னால் விளைவிக்கும் தானிய பயிருக்கு உணவாக்குகிறது.இக்கருகளை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறு குடுவையில் விருத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். இதை விதையிலாவது மண்ணிலாவது கலந்து நிலம் முழுவதும் தெளித்தால் ஏருவிட்டார் போல் பயிர் செழுமையாக வளர்கின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்