Ad Code

Ticker

6/recent/ticker-posts

இயற்கை வேளாண்மை

 

திகம் விளைவிக்க வேண்டுமென்ற பேராசை வந்த பிறகுதான், செயற்கை முறைகளைக் கையாளத் தொடங்கினான் மனிதன். ஆடுகளின் கழிவுகளை விளை நிலங்களில் அடியுரமாகப் பயன்படுத்தும் பழமையான மந்தை அடைத்தல் முறையை பல தலைமுறைகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தால், விவசாயத்தில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் இயற்கை வேளாண்மைக்குப் பதிலாக செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.இந் நிலையில், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.மரம், செடி ஆகியவற்றின் இலைகள், மேலும், சிலர் ஆடுகளைப் பட்டியில் அடைக்கும் முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

கிதாரிகள்

நெல், ராகி போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், நாற்றுகளை நடவு செய்வதற்கு முன் விளை நிலத்தில் அடியுரத்துக்காக ஆடு, வாத்து ஆகியவற்றை வேலி அமைத்து அடைப்பர். பட்டியில் அடைக்கப்படும் ஆடுகள் வெளியேற்றும் கழிவுகள், ரோமம் போன்றவை விளை நிலத்துக்கு அடியுரமாகப் பயன்படும்.விளை நிலங்களில் ஆடு, வாத்து ஆகியவற்றை வேலி அமைத்து பட்டியில் அடைக்கும் தொழிலைச் செய்பவர்கள் கிதாரிகள் என அழைக்கப்படுவர். குரும்பர் இனத்தைச் சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகளாக, மந்தை போடுதல் அல்லது பட்டி போடும் தொழிலைச் செய்து வருகின்றனர்.பயிர் நாற்று நடவு செய்ய, விளை நிலத்தைத் தயார் செய்வதற்கு முன், பயிருக்கு அடியுரம் கிடைக்கும் வகையில் விளை நிலத்தில் பட்டி போடுவோம். ஒரு பட்டியில் குறைந்தது 50 முதல் 300 ஆடுகள் வரை அடைப்போம். இவ்வாறு பட்டியில் அடைக்கப்படும் ஆடு ஓன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணமாக வசூலிப்போம்.தற்போது இதற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆடு வளர்ப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், 4 அல்லது 5 நபர்களாகச் சேர்ந்து இத் தொழிலைச் செய்து வருகிறோம் தற்போது காடு அழிக்கப்பட்ட நிலையில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் பரப்பளவு குறைந்துவிட்டது. இதனால், கிதாரிகளும் மாற்றுத் தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.இதனால், தொன்றுதொட்டு பல தலைமுறையாகக் கடைப்பிடித்து வந்த இயற்கை வேளாண்மையை தொடர முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில், நாங்களே 50 ஆடுகளை வளர்த்து வருகிறோம். எங்களது விளை நிலத்தில் மட்டுமல்லாமல், மற்றவர்களின் விளை நிலங்களிலும் மந்தை போடுவோம்.இதன் மூலம், கூடுதலாக மகசூல் கிடைக்கும். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தாக்குதல் குறைகிறது. மண் மலட்டுத் தன்மையும் அடைவதில்லை வேளாண் தொழிலில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இயற்கை முறை வேளாண்மையான, இப்பழமையான தொழில் நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

மலடாக மாறும் மண்!- இயற்கை வேளாண்மை கை கொடுக்குமா?

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் முண்டாசுக் கவி பாரதி. அவரே இன்று இருந்திருந்தால், ‘ரசாயன இடுபொருட்கள் மூலம் கிடைக்கும் உணவை அழித்திடுவோம்’ என்று பாடியிருக்கக்கூடும். இந்த உலகின் ஆதாரம் உணவு. உணவில்லையேல் உயிரில்லை. ஆனால், இன்று அந்த உணவே கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சாகி, நம் உயிரை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை, இயற்கை வேளாண்மை மறந்து, ரசாயனம் மிகுந்த செயற்கை விவசாயத்தை மேற்கொண்டதுதான் என்கின்றனர் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள். ரசாயனங்களால் இந்த மண் மலடாகிக் கொண்டிருக்கும் சூழலில், இனியாவது இயற்கை  வேளாண்மை மேற்கொண்டு, நம்மையும், எதிர்கால சந்ததிகளையும் பாதுகாப்போமா என்பதே நம்முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.

இந்த உலகம் தோன்றியதிலிருந்தே உணவுத் தயாரிப்பும் தொடங்கிவிட்டது. தாவரங்கள் தொடங்கி, ஊர்வன, நடப்பன, பறப்பன என அனைத்து விலங்குகளும் இயற்கையிலிருந்தே தங்களுக்கான உணவைத் தேடிக் கொண்டன. மனித இனம் தோன்றிய காலத்திலும், இயற்கை உணவே பிரதானமாக இருந்தது. உணவை விளைவித்து, சமைக்கத் தொடங்கிய காலத்திலும் இயற்கையை மனிதன் மீறவில்லை. அதிகம் விளைவிக்க வேண்டுமென்ற பேராசை வந்த பிறகுதான், செயற்கை முறைகளைக் கையாளத் தொடங்கினான் மனிதன்.இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பாரம்பரிய விவசாயம், இயற்கையைச் சார்ந்தே இருந்தது. மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு கிடைக்காமல் பஞ்சம் ஏற்பட்டதால்தான், பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்கள் நம் நாட்டுக்குள் நுழையத் தொடங்கின. ஆரம்பகட்டத்தில் கிடைத்த மிதமிஞ்சிய விளைச்சல், ரசாயன விவசாயத்தை ஊக்குவித்தது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து என அனைத்துமே ரசாயனங்களின் கலவையானது. வெளிநாட்டிலிருந்து ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் இந்தியாவில் குவிந்தன. ஒரு கட்டத்தில் இந்தியாவிலேயே இவற்றைத் தயாரிக்கத் தொடங்கினோம். விவசாயத்தை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில், அரசுகளும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மானியங்கள் கொடுக்கத் தொடங்கின. ஒரு கட்டத்தில், ரசாயன இடுபொருட்கள் இல்லையெனில், விவசாயமே நடைபெறாது என்ற நிலை உருவானது.

நஞ்சாக மாறும் உணவு!

ரசாயன உரங்களால் உணவு உற்பத்தி அதிகரித்தது. அதேசமயம், மண்ணில் விஷம் மிகுந்து, மண் புழு அழிந்து, உணவும் விஷமாக மாறத் தொடங்கியது. ரசாயன முறை வேளாண்மை, விவசாயிகளை விலை மிகுந்த ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை சார்ந்திருக்கச் செய்தது. மென்மேலும், உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் அதிக பயன்பாடு நாளுக்கு நாள் விவசாயச் செலவை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் உற்பத்தி குறையத் தொடங்கியதால், மேலும் மேலும் ரசாயன இடுபொருட்களை விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், மண்ணின் தன்மை மாறியதுடன், மக்களின் உடல்நலத்தையும் பாதிக்கத் தொடங்கியது. நிலத்தின் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. மனிதர்களும், விலங்குகளும் அருந்தப் பாதுகாப்பற்றதாக தண்ணீர் மாறிவருகிறது.வேளாண்மை லாபமற்ற, சிக்கலான தொழிலாக மாறி, சிறிய விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவேதான், செயற்கை விவசாயத்திலிருந்து, இயற்கை வேளாண்மைக்கு மாறுவதை வலியுறுத்தும் இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவடையத் தொடங்கியுள்ளது. 

தண்ணீர் மட்டுமே பிரச்சினையில்லை!

ஒருபுறம் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை இருந்தாலும், மறுபுறம் தண்ணீர் இருந்தாலும் விளைச்சலும், விலையும் கிடைக்கவில்லை என்ற அவலமும் நீடிக்கிறது. எனவே, தண்ணீர் மட்டுமே விவசாயிகளுக்கு பிரச்சினை கிடையாது.இயற்கை  வேளாண்மை கைவிட்டு, செயற்கை விவசாயத்துக்கு மாறியதால், மண் மலடாகிவிட்டது. எதைப் போட்டாலும் விளைந்த இந்த மண்ணில், விதைகள் முளைக்கவே சிரமப்படுகின்றன. காரணம், ரசாயன உரத்தைக் கொட்டி கொட்டி மண்ணின் தன்மையே மாறிவிட்டது. விவசாயம் மேற்கொள்ள உரிய ஆர்வம் இல்லாமல், மானியம் கிடைக்கும் என்பதற்காக கடமைக்கு விவசாயம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

மண்ணுக்கு மறுவாழ்வு

பொதுவாகவே, மண்ணுக்குள் இருக்கும் நுண்ணுயிர்கள் இறந்துவிட்டன. மண்ணுக்குள் இருக்கும் நுண்ணூட்டச் சத்தை எடுத்து, வேர் உள்பட பயிர் முழுவதும் கொடுப்பவை நுண்ணுயிர்கள்தான். செயற்கை உரத்தில் நுண்ணுயிர் செய்ய வேண்டிய பணியை, அந்த உரம் செய்ததால், நுண்ணுயிர்கள் அழிந்தன. நமக்கு செயற்கை உரத்தைக் கொடுத்த நாடுகள், பல ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை  வேளாண்மைக்கு மாறிவிட்டன. ஆனால், நாம் செயற்கை ரசாயன இடுபொருள் முறையை தொடர்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

முதல்கட்டமாக, மலடாகப் போயிருக்கும் மண்ணுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தியை இந்தியாவில் முற்றிலுமாக நிறுத்த வேண்டும். உடனடியாக நிறுத்தாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியைக் குறைத்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். செயற்கை உரத்துக்கு பல லட்சம் கோடி மானியம் வழங்குவதை தவிர்த்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.நிலத்துக்கு 3 விஷயங்கள் அடிப்படைத் தேவையாகும். முதலில் அடியுரம். மாட்டுச் சாணம் சிறந்த அடியுரமாக இருந்தாலும், சாணத்தில் உள்ள நுண்ணுயிர்கள், நிலத்தை மறுசீரமைக்கும் அளவுக்கு தரமாக இல்லை. எனவே, சாணத்தை மெருகூட்டி, நவீனத் தொழில்நுட்பம் மூலம் கூடுதல் நுண்ணுயிர்களை சேர்த்து, எருக்கஞ்செடி, காட்டாமணக்கு, வேப்பிலை மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் கலந்து கொடுக்கும்போது, மண்ணின் தன்மை மாறி, நுண்ணூட்டச் சத்து மிகுந்ததாக அந்த மண் மாறும். நுண்ணுயிர்கள் மீண்டும் மண்ணில் வாழத் தொடங்கும். இந்த இயற்கை அடியுரம் மண்ணுக்கு உயிரூட்டும்.

இயற்கைவழி வேளாண்மை (natural farming) என்பது நமது பாரம்பரிய வேளாண்மையிலிருந்தும் பசுமைப்புரட்சி (green revolution) வேளாண்மை, அங்ஙக (organic) வேளாண்மை, நஞ்சில்லா வேளண்மை (residue free) மற்றும் சுற்றுச்சூழல் வேளாண்மை(ecofriendly agriculture) யிலிருந்தும் மாறுபட்டதாகும்.

வரலாறு

மசனோபு ஃப்யூகூவோகா (1913-2008) தத்துவ ஞானி மற்றும் விவசாயி். 1975ல் இவர் எழுதிய வைக்கோல் புரட்சி (straw revolution)” என்ற நூல் பிரசுரமாகியது. இதில் ”எதுவும் செய்யாதே” என்று விவரிக்கிறார். ஏதும் செய்யாதே என்றால் முயற்சி ஏதும் செய்யக்கூடாது என்ற அர்த்தம் அன்று. பதிலாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு ஃபுயூகோகாமுறை என்றும் பெயர் உண்டு். இயற்கைவழி வளத்தை வளர்ப்பு வேளாண்மை (fertility farming) , கரிம வேளாண்மை (organic farming), நீடித்த வேளாண்மை (sustainable agriculture), வேளாண்காடு வளர்ப்பு (agroforestry), சுற்றுச்சூழல் வேளாண்மை (ecoagriculture), வாழ்முறை (permaculture) ஆகியவற்றுடன் மிக்கத் தொடர்புடையது ஆனால் உயிராற்றல் (உயிரோட்ட/biodynamic agriculture) வேளாண்மையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் .இந்த முறை ஒவ்வொரு சூழலிலும் ஒரு உயிரினம் சிக்கலாக இருந்து அந்தச் சூழ்நிலையை வடிவமைப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. இவர் விவசாயத்தை உணவு மற்றும் ஆன்மீக (அழகு) அணுகு முறை என இரு வேளாண்மையாகப் பார்க்கிறார். சாகுபடி மற்றும் மனித முழுமைதான் தன்னுடைய இறுதி இலக்கு என்று கூறுகிறார். இந்த முறையில் வெற்றியடைய உள்ளூர் நிலைமைகளைக் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். 

மேலும், இயற்கைவழி வேளாண்மை ஒரு மூடிய அமைப்பு, மனித உள்ளீடுகள் இல்லாமல் இயற்கையை ஒட்டி இருக்க வேன்டும். ஃப்யூகூவோகாவின் கருத்துக்கள் நவீன வேளாண் தொழிற்சாலைகளுக்கு ஒரு சவாலாக இருந்தது. இயற்கைவழி வேளாண்மை , வழக்கமான கரிம வேளாண்மை(organic farming) மாறுபடுபதாகவும், கரிம வேளண்மை இயற்கையை பாதிபதாகவும் நினைக்கிறார். இவருடைய முறை நீர் மாசுபாடு தடுப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் மண் அரித்தழிப்பு தடுப்பு ஆகிய நன்மைகளுடன் போதுமான உணவும் கிடைக்கின்றன என அடித்துரைக்கிறார்

கொள்கைகள்

ஃப்யூகூவோகா ஐந்து கொள்கைகளை முக்கியமானதாக் கூறுகிறார்

1. உழவு இல்லை, 2. உரமில்லை, 3. பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகள் இல்லை,4.  களையெடுத்தல் இல்லை, 5. சீரமைப்பு இல்லை 

இவர் குறிப்பிடும் பயிர்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் மற்றும் முறைகள் குறிப்பாக ஜப்பான் நாடு் மற்றும் மிதவெப்ப மண்டல மேற்கு ஷிகோகுவின் உள்ளூர் நிலைக்குத் தொடர்பு உடையவையாக இருக்கின்றன. 

இயற்கை வேளாண்மை ஏன் தேவைப்படுகிறது?

நமது பண்டையகால வேளாண்மை இல்க்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும், அகழ்வாராய்ச்சிகளாலும் ஐயாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது என அறியப்படுகிறது. இந்த விவசாயத்தினால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவு கொடுக்க முடியவில்லை. இ்ரசாயன உரங்களினாலும், பூச்சிமருந்துகளாலும் உணவுச்சங்கிலியில் நஞ்சுகளாகப்பட்டு அதிக அளவில் (bioconcentration) சேமிக்கப்பட்டு பல வகையான புற்றுநோய், காலநிலை மாறுபாடு, மண்ணின் வளம் குன்றுதல், சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிதல், இரசாயன பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மை, சிறுபான்மை பூச்சிகள் பெரும்பான்மை பூச்சிகளாக மாறுதல், சாகுபடிச் செலவுகள் அதிகரித்தல் மற்றும் விவசாயிகளின் தற்கொலை போன்ற பாதகங்கள் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் நவீன இயற்கையோடு ஒன்றிய விஞ்ஞான உத்திகளைக்கொண்டு நல்ல தரமான அதிகப்படியான மகசூல் எடுக்கவேண்டும். 

பொருளியல் அறிஞர்' ஜே.சி. குமரப்பா காந்தியடிகளின் நண்பர். இவர் 1940களில் மரபு வேளாண்மையை இயற்கையோடு இணைத்து நவீனப்படுத்த விரும்பினார். மக்கும் உரம் தயாரித்தல், பண்ணை மேலாண்மை பணிகளைத் திட்டமிடுவது, டிராக்டர் வருகையின் ஆபத்து, ரசாயன உரங்களின் தீமை போன்றவற்றை அன்றே கண்டுபிடித்து விளக்கினார்.இதற்கிடையில் முருகப்பா குழுமத்தில் இருந்த சேஷாத்ரி என்பவர், காய்கறிச் சாகுபடியில் இருமடி பாத்தி என்ற நுட்பத்தை ஐரோப்பிய அமைப்பு ஒன்றின் துணையுடன் பரப்பி வந்தார். புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் என்ற அமைப்பின் சார்பாகப் பல உத்திகள் கையாளப்பட்டன.



முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை

செயற்கை உரம்

செயற்கை  பூச்சிக்கொல்லி மருந்துகள்

செயற்கை வளர்ச்சி ஊக்கிகள்

உயிர் எதிரி கொண்ட  எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை)

மரபணு மாற்றப்பட்ட உயிரினம்  

மனித சாக்கடைக்கழிவுகள் 


கடைப்பிடிக்க வேண்டியவை

உயிர் உரங்கள்

பசுந்தாள் உரம்

பசுந்தழை உரம்

மக்கிய இயற்கை உரம்

பஞ்சகவ்யம் தெளித்தல்

பயிர்சுழற்சி

உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை)நிர்வாகம்

சொட்டு நீர்பாசணம்

இன்று இயற்கை வேளாண்மைக்கு பலரும் மாறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் ரசாயன உரங்களையும் நுண்ணூட்ட சத்துக்களையும் பயோ என்று வார்த்தை தான் இயற்கை விவசாயம் செய்திடும் உத்தி என்ற தவறான பிரசாரத்தில் ஈடுபடுவது வருத்தம் தரும் நிகழ்வாகும்.அந்தந்த நிலத்தில் விளையும் பயிரின் கழிவுகளையும் அதன்மூலம் உற்பத்தி செய்யும் மண்புழு உரம் மற்றும் சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து பயன்படுத்த வேண்டிய  சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா முதலியவற்றை பயன்படுத்துவதும் இதில் மிக முக்கியம். 

திரவ உரங்களை அல்லது நீரில் கரையும் திறன் கொண்ட தழைமணி சாம்பல் சத்துக்களை பயோ என்பது உயிர் உரம் போன்ற தவறான பிரசாரம் தருவதால் இதனை பயன்படுத்துவது இயற்கை  வேளாண்மை முறை அல்ல. தழைமணி, சாம்பல் சத்துக்கள் ஒவ்வொரு இயற்கை வேளாண்மை இடுபொருட்களிலும் உள்ள விகிதாச்சாரம் அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். தொழுஉரம் என்று தமது பண்ணையில் வளர்க்கப்படும் மிருகங்களான கால்நடைகள், பசு, வெள்ளாடு, எருமை, பறவைகள் (கோழி) , செம்மறி ஆடு, குதிரை, பன்றி இவற்றின் சாணம் மற்றும் சிறுநீர் பயன்படுத்துவது முக்கிய உத்தியாகும்.

இந்தக் கழிவுகளுடன் மண்புழுவை சேர்த்து வளர்த்தால் அற்புத தரம் வாய்ந்த மண்புழு உரம் கிடைக்கும். மண்புழு உரத்தையும் மண்புழு உடலில் இருந்து வெளியிடப்படும் மண்புழுக்குளியல் நீர் சத்தான டானிக் தான். இதனை எல்லாப்பயிருக்கும் தெளித்து நல்ல காசு பார்க்கலாம். மண் வகைகள் தன்மையை மாற்றிட குளத்து வண்டல் மாட்டுக் கொட்டத்தில் இருந்து சுரண்டி எடுத்த மண் பட்டி மண் ஆற்று வண்டல் பெரிதும் உதவும். தாவரக்கழிவுகள் குறிப்பாக கம்பு, தட்டை, நெல், வைக்கோல், ராகிதாள், காட்டுப்புல், கரும்பு ஆலை கழிவு, மரத்தூள், நகரக்கழிவு மற்றும் மார்க்கெட் கழிவுகள் முதலியவற்றை மட்கவைத்து கம்போஸ்ட் தயாரித்து பயன்படுத்தலாம். சாம்பல் என்று நெல் உமி சாம்பல், பருத்தி மார் சாம்பல், கரும்பு சாம்பல் மற்றும் மர சாம்பல் கூட அதிகமாக மணிசத்து, சாம்பல் சத்து தரும் சாதனமாகும்.


எண்ணெய் மில்களில் இருந்து கிடைக்கும் கடலை பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு மற்றும் இலுப்பைப் பிண்ணாக்கும் புரதச்சத்து நிறைய உள்ளவை. மேலும் இயற்கை விவசாயத்தில் தழைகள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படும். பசுந்தாள் உரமாக சீமை, அகத்தி, சணப்பை துக்கை பூண்டு கொழுஞ்சி மற்றும் அவுரி உதவும். பசுந்தழைகள் தர ஏற்றவை தான். ஆவாரை, ஆடாதோடா, எருக்கு கிளைரி சிடியா, மலைப்பூவரசு, பூவரசு புங்கம் மற்றும் காட்டு மரங்களின் தழைகள் பழமரங்களைக் கவாத்து செய்வது மூலம் பெறும் மாவிலைகள் வேலியில் உள்ள மரங்கள் வாத நாராயணன் இலைகள் எல்லாம் பறித்து குழியில் இட்டு மட்க வைத்து பயன்படுத்தலாம்.

இப்படி எத்தனையோ இடுபொருட்கள் மற்றும் தயாரித்து பயன்படுத்த உகந்த பஞ்சகவ்யா, பூச்சி விரட்டி வேப்பம் இலைக் கரைசல், வேப்பம் பிண்ணாக்கு கரைசல் முதலிய இயற்கை இடுபொருட்கள் இருப்பதால் அவற்றை பயன்படுத்தியே உயர் லாபம், நீடித்த வருமானம், தரமான விளைபொருள் பெற முடியும்  ஒரு நிலப்பரப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். காடாக இருக்கலாம்! மலையாக இருக்கலாம்! பள்ளமாக இருக்கலாம்! மேடாக இருக்கலாம். அந்த மண்ணில் செயலாற்றுகின்ற செயல்வீரர்கள் இருந்தால் நாடு வளமாகும்.மண்ணை வளமாக்கி மனிதர்களை நலமாக்கச் செயலாற்றுகின்ற செயல்வீரர்கள் தான் உழவர் பெருமக்கள்.

கைவருந்தி உழைப்பவர்; தெய்வம்

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்,'' என்றார் பாரதி. உழைப்போர்; உண்டு களித்திருக்க முடியாத நிலை உள்ளது. இனிக்கும் வெல்லத்தில் சிறிய உவர்ப்பு. உழவனின் வியர்வைத் துளியும், கண்ணீர்த்துளியும் கலந்ததால் தானோ? ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களுக்குத் தாங்களே விலை நிர்ணயிக்கும் உரிமை பெறும் நாளே விவசாயிகள் வாழ்வின் திருநாள்

இயற்கை வேளாண்மை

வேளாண்மைப் பொருளாதாரம் எந்தத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது? ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்த இயற்கை உர விவசாயமே நல்வாழ்வுக்கு ஏற்றது.இயற்கை சார்ந்த விவசாயத்தை நாம் பழந்தமிழகத்தின் வாழ்வாக காண முடிகிறது. பாரி ஆண்ட பறம்பு மலையில் நால்வகைச் செல்வம் உண்டு என்பர்.மூங்கில்நெல், பலா, தேன், வள்ளிக்கிழங்கு ஆகியன மண்ணை உழாமல் கிடைத்த செல்வங்கள்.

இயற்கைச் சார்ந்த விவசாயத்தைச் செயல்படுத்தி வரும் அமெரிக்காவின் ரோடெல் நிறுவனத்திடம் "இதற்கு முன்னோடி யார்?” என்று கேட்ட பொழுது, "இந்தியா தான் எங்கள் இயற்கை விவசாயத்தின் முன்னோடி. இயற்கை விவசாயத்தை எங்கள் மூதாதையர் ஆல்பர்ட் ஓவர்டு இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தினார். உழவாண்மை ஆவணம் என்ற நூலைத் தந்தார்'' என்றார்.நச்சுப்படாத விவசாயமும், நலிவு இல்லாத விவசாய வாழ்வும் இன்று தேவை. இயற்கை வேளாண்மையில் நில வளம் உயர்ந்து கொண்டே போகிறது. வேலையும், பணச்செலவும் குறைகின்றது. இது எப்படி சாத்தியம் என கேள்வி எழலாம். இயற்கைக்கே திருப்பி அளிப்போம் என்பது தான் அந்த விதி.இதை மசானோபு புகோக்கா என்ற ஜப்பான் விவசாய ஆராய்ச்சியாளர் நிரூபித்திருக்கின்றார். காடுகளில் மரக்கூட்டங்களுக்கு யாரும் ரசாயன உரம் போடவில்லை! பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை! நிலத்தை உழாமல் முதல்முறையாக நெற்பயிர் அறுவடை செய்தபொழுது தாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்ல என்கின்றார்.விளைச்சலுக்கு குறைவில்லை நிலத்தில் ரசாயன உரங்களும் பூச்சிகொல்லி நஞ்சுகளும் பயன்படுத்தாததால் இப்போது கிடைக்கும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு குறையலாம். ஆனால் இயற்கையின் சக்தி நமது சக்திக்கு அப்பாற்பட்டது. முதல்கட்ட இழப்புக்குப் பிறகு விளைச்சல் அதிகமாகத் துவங்கி விரைவில் முதலில் எடுத்த விளைச்சலை மிஞ்சி விடும். செயற்கை உரங்களும் பூச்சிகொல்லி மருந்துகளும், இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்ற விவசாயம் இயற்கைத் தாயின் மடியை சேதப்படுத்தக் கூடும்.


*நன்றி* 

*விவசாய மலர்*










கருத்துரையிடுக

0 கருத்துகள்