ரைசோபியம்
ரைசோபியம் மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த்தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில் தன்னிச்சையாக வாழும் நுண்ணுயிரிகளிலிருந்து ரைசோபியத்துடைய வெளித்தோற்றம், இயல்நிலை வேறுபடுகிறது. தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில் இது ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும். பயிர்களின் வேர்களில் இருந்து கசியும், வேர்க்கசிவுகளும் வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் வேதிப்பொருள்களும் மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றன. ரைசோபியம் நுண்ணுயிர் உபயோகத்தால் தழைச்சத்து உரத்தைச் சேமித்து அதிக மகசூல் பெறலாம்.
அசட்டோபாக்டர்
அசட்டோபாக்டர் பலதரப்பட்ட வகைகளில், காற்றோட்டமுள்ள மண்ணில் அதிகமாக வளரக்கூடியது. இது தழைச்சத்தை வளர்ச்சி ஊடகத்தில் நிலைப்படுத்தக் கூடியது. நுண்ணுயிரி உற்பத்தி செய்யக் கூடிய எண்ணற்ற பசையானது மண் ஒருங்குபடுவதற்கு உதவுகிறது.
அசோஸ்பைரில்லம்
அசோஸ்பைரில்லம் லிபோபெரம் மற்றும் அசோஸ்பைரில்லம் ப்ரேஸிலென்ஸ் மண்ணில் உயிர் வாழக் கூடியவை. புல்வகை பயிர்களில் வேர்த்தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதியின் இடைப்பட்ட பகுதிகளில் உயிர் வாழும். நுண்ணுயிரி பேரினமான அசோஸ்பைரில்லம் வேர் மற்றும் மண்ணின் மேல்பகுதியில் உள்ள பயிர்களிலிருந்து தழைச்சத்தை நிலைப்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் மூலம் பிரித்தெடுக்கப்பட்டது. விப்ரியோ அல்லது ஸ்பெரில்லம் என்ற உயிரணு எண்ணற்ற அளவில் குவிக்கப்பட்டிருக்கும்.
அசோஸ்பைரில்லத்தில் 5 வகைகள் உள்ளன. அவை அசோஸ்பைரில்லம் ப்ரேஸிலென்ஸ், அசோஸ்பைரில்லம் லிப்போபெரம், அசோஸ்பைரில்லம் அமெசோஎன்னஸ், அசோஸ்பைரில்லம் ஹேலோப்ரேபிசன்ஸ் மற்றும் அசோஸ்பைரில்லம் இராகென்ஸ். இது காற்றோட்டம் உள்ள மற்றும் காற்றோட்டம் இல்லாத நிலையிலும் வளரும் தன்மை கொண்டவை. வளர்ச்சித் திரவத்தில் இருக்கக்கூடிய அல்லது இல்லாத நிலையிலும் இது வளரும். தழைச்சத்தை நிலைப்படுத்துவது மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கி உற்பத்தி, நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் வறட்சி சகிப்பு போன்றவை அசோஸ்பைரில்லம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளாகும்.
பாஸ்போ பாக்டீரியா:
இது மண்ணில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. சில வகை அமிலங்களை இந்த பாக்டீரியா உற்பத்தி செய்து மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது. இதை பயன்படுத்துவதால் 20 சதவீதம் மணிச்சத்து தரும் இரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். வேர்கள் செழித்து வளரவும், திசுக்கள் வளம் பெற்று கதிர்கள் செழித்து வளரவும், தழைச்சத்தை அதிக அளவு ஈர்க்கவும் பாஸ்போ பாக்டீரியா பயன்படுகிறது.
சைனோபாக்டீரியா
தன்னிச்சையாக உயிர்வாழும் தன்மையுடைய சைனோபாக்டீரியா இந்தியாவின் நெல் சாகுபடி முறைக்கு தகுந்தவாறு உள்ளது. கூட்டு வளர்ச்சி மாறுபட்டு கூடுடைய நீலப்பச்சைப் பாசிகளான நாஸ்டாக், அனபீனா, ஆலுசீரியா மற்றும் பல ஆரம்ப உட்புகுத்தலாக உறையிடப்பட்ட பானைகளில் வளர்க்கப்படுகிறது. பின் வயலில் இது பலமடங்காக பெருக்கப்படுகிறது. நெல் வயல்களில் ஒரு எக்டக்கு 10 கிலோ என்ற அளவில் மண் கலந்த கட்டிகளாக அளிக்கப்படுகிறது.
நீர்ம உயிர் உரங்கள்
உயிர் உரங்களான ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவை பயிர்களுக்கு தழைச்சத்தை நிலை நிறுத்துதல் மற்றும் மணிச்சத்தை கரைக்கும் முறைகளின் மூலம் தருகிறது. நெல், பயிறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, காய்கறி மற்றும் இதர தோட்டப் பயிர்களுக்கு இந்த உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அங்கக வேளாண்மையில் உயிர் உரங்கள் ஒரு முக்கியமான இடுபொருளாகும். பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், மண் நலத்தை மேம்படுத்தி, மண் வளத்தை காக்கிறது.
0 கருத்துகள்