Ad Code

Ticker

6/recent/ticker-posts

அப்துல் கலாமின் சீரிய நோக்கு

ப்துல் கலாமின் வாழ்க்கையில் நான்கு புத்தகங்கள் அவர் இதயத்துடன் நெருங்கிய தொடர்புடையன. அவைகளை படிப்பது அவருக்கு பிடித்தமான ஒன்று. முதல் புத்தகம் டாக்டர். அலெகஸிஸ்காரல் எழுதிய 'தெரியாத மனிதன்'(Man the Unknown) இந்தப் புத்தகம் உடல்நலம் குன்றிய பொழுது எவ்வாறு மனம், உடல் இரண்டையும் கவனித்தல் வேண்டும் எனக் கூறுகிறது. ஏனென்றால் உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து.இரண்டாவது புத்தகம், திருவள்ளுவரின் திருக்குறள். இது நல்ல அற்புதமான வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளை கூறுகிறது. மூன்றாவது எய்ச்பூலர் வாட்சனின் 'பலவிளக்குகளிலிருந்து வரும் ஒளி'(Light from Many Lamps) இதுவே அப்துல் கலாமை ஆழமாக தொட்ட நூல். இது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை ஒளியூட்டுகிறது.   அப்புதுல்கலாமிற்க்கு இந்த நூல் வழிகாட்டியாக இருந்தது.


புனித குரான் அப்துல் கலாமுடன் எப்போதும் இருப்பது. தொழில்நுட்பத்தில் மலிவான கூலியாளாக வேலை பார்ப்பதற்கு பதிலாக அறிவு உயர்சக்தியாக அதற்கு மீண்டும் ஒரு இலக்கிய மறுமலர்ச்சி வருவது இன்றியமையாத ஒன்று. சமூகம் வளமடைய அத்தியாவசியமான தேவை இரண்டு.அவைகள் பொருட்செல்வத்தினால் கிடைக்கும் வளம். மற்றொன்று மக்களிடையே அறத்தை காத்து ஆதரிப்பது. இந்த இரண்டின் சேர்க்கையே ஒரு நாட்டை உண்மையான வல்லரசாகவும் வளமுடையதாகவும் ஆக்குகிறது.
நமது ஆன்மீக ஞானம்தான் நம் நாட்டின் வலிமை. நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்களையும் காலனி ஆதிக்கத்தின் விளைவுகளையும் மீறி நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் சமூகத்திலிருக்கும் பிரிவினைகள். பிளவுகளும் ஏற்றவாறு நாம் வாழ கற்றுக் கொள்கிறோம். இதனால் நாம் நமது லட்சியத்தையும் எதிர்பார்ப்பையும் குறைத்துக் கொண்டோம். நமது பரந்த வாழ்வை செழுமையாக்கும் நமது பாரம்பரியம், பண்பாடு, ஞானத்தையும் நலம் நிச்சயமாக திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.

நமது கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் வெற்றிகாணும் வகையில் செயலாற்றுவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய பாதை சேவை முறை. பாதை முழுவதும் உள்ள பள்ளங்கள் இந்த சேவைமுறை நெடுந்தூரம்  மக்களுக்குச் சென்றடையவும் மிக்க வளர்ச்சியை காணவும் முடியாதவாறு உள்ளது. நிறைந்து கிடக்கும் மனித மற்றும் பொருள்வளத்தை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும். பயனுள்ள செயல்கள் மூலம் முன்னேற்றத்திற்கான வழியை அடையாளம். இளைஞர்களை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லுதல் வேண்டும். அப்படி சென்றால் அவர்களின் வாழ்க்கை சரியான திசையை கண்டறியும். மேலும் அவர்களது படைப்புத்திறனும் மலரும் இதை செயல்படுத்த கல்வித்திட்டத்தில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்