Ad Code

Ticker

6/recent/ticker-posts

கணக்கு புதிர்-அறிவுடைய மகன்கள்

ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். அவனுடைய மகன்கள் மூவருமே அறிவுக்கூர்மை உடையவர்களாக விளங்கினார்கள். தன் மகன்களின் திறமையை ஆராய விரும்பினார் வணிகன். ஒருநாள் அவர்கள் மூவரையும் அழைத்து அவன், நம் தோட்டத்தில் விளைந்துள்ள ஆரஞ்சு பழங்களில் சரியாக 18 பழங்களை மூத்தவன் எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாமவன் 16 பழங்களை வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி மகன் 14 பழங்களை மட்டும் பறித்துக் கொள்ள வேண்டும்.அவரவர்க்கு கிடைத்த பழங்களை எடுத்துக் கொண்டு நீங்கள் மூவரும் சந்தைக்கு செல்ல வேண்டும். மூத்தவன் என்ன விலைக்கு பழங்களை விற்கின்றானோ அதே விலைக்குதான் மற்றவர்களும் விற்கவேண்டும். விலையில் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது. என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது. மூத்தவன் பழம் விற்ற  தொகை எவ்வளவு கொண்டு வருகின்றானோ அதே தொகை மற்றவர்களும் கொண்டு வரவேண்டும் என்றான்.
மூவரும் தந்தை சொன்னபடியே  18,16, 14 ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் சென்று பழங்களை விற்றார்கள். வீடு திரும்பிய மூவரும் தாங்கள் பழம் விற்றுக் கிடைத்ததாக கூறி ஒரே தொகையை ஒவ்வொருவரும் தந்தையிடம் தந்தார்கள். அப்படியானால் அவர்கள் பழத்தை என்ன விலைக்கு விற்றிருந்தால் மூவருக்கும் ஒரே தொகை கிடைத்திருக்கும்?

விடை
மூத்தவன்  17 ஆரஞ்சு பழங்களைஒரு ரூபாய்க்கு விற்றார். அவனிடம் 17 ரூபாயும் ஒரு ஆரஞ்சுப் பழமும் இருந்தது. அதே போல் இரண்டாமவன் விற்க அவனிடம் 14 ரூபாயும் இரண்டு ஆரஞ்சு பழங்களும் இருந்தது. மூன்றாம் மகனும் அப்படி விற்க அவனிடம் 11 ரூபாயும் 3 ஆரஞ்சு பழங்களும் இருந்தது. மூத்தவன் எஞ்சியிருந்த  ஒரு ஆரஞ்சு பழத்தை மூன்று ரூபாய்க்கு விற்றான்(17+3=20) மொத்தம் அவனிடம் 20 ரூபாய் இருந்தது. அதே போல் இரண்டாமவன் இரண்டு பழங்களை ஆறு ரூபாய்க்கு விற்றான்(14+6=20) அவனிடமும் பழங்களை விற்ற தொகை  20ரூபாயாயிற்று.  மூன்றாமவன் மூன்று பழங்களை ஒன்பது ரூபாய்க்கு விற்றான்(11+9=20) அவனிடமும் பழங்கள் விற்ற தொகை 20 ரூபாயாயிற்று.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. நல்ல புதிர்க் கணக்கும்,ஆனால் கணக்கு இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். காலையில் அனைவரும் ஒரே விலையில் பழங்களைவிற்றனர். அவர்களிட்ம் கொஞ்சம் மீதிப் பழங்கள் இருந்தன. அனைவரும் ஒரே தொகை எடுத்து செல்ல வேண்டும் என்பதால் மீதி உள்ள பழங்களையும் விலையை மாற்றி ஒரே விலையில் எஞ்சியுள்ள பழங்களை விற்றனர். இப்போது அவர்களிடம் உள்ள தொகை சமமாக இருந்தது எனில் எப்படி விற்றிருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு