Ad Code

Ticker

6/recent/ticker-posts

சிந்தனைகள்

ப்பானியர்கள் இன்றைய நிர்வாக அறிவில் ஒரு புதிய சொல்லை சேர்த்திருக்கிறார்கள். அதன் பெயர் "கெய்சன்"என்பதாகும். அதன் பொருள் "தொடர்ந்து கண்காணிப்பு, தொடர்ந்து முன்னேற்றம்" நமது சிந்தனையின் விளைவுகளை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். விளைவுகள் நாம் எதிர்பார்த்த பாதையிலிருந்து கீழே இறங்குமானால் மீண்டும் எண்ணங்களை சீரமைத்துத்திருந்த முயலவேண்டும். எண்ணங்களையும் விளைவுகளையும் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி முன்னேற்றம் தொடர்ந்து ஏற்படும். பகை, வெறுப்பு, ஏமாற்றம், வஞ்சகம், பொறாமை, பேராசை,  ஆணவம் போன்ற தீய குணங்களை அகற்றி  முடியாவிட்டால் அவைகளைக் கட்டுப்படுத்தி ஒரு சமநிலையுடன் வாழ்கிறார்களோ எதையும் சிரிப்புடன் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றிருக்கிறார்களோ அவர்களைத்தான் ஆன்மிக அடிப்படை கொண்டவர்கள் என்று சொல்கிறோம்.

"தம்பி! மகனே! உன் விதி உன் கையில்தான்!
நெல்லை பயிரிடு, முள்ளை பயிரிடதே!
நல்லெண்ணம் கொள் தீயெண்ணம் வேண்டாம்".
விதை இல்லாது செடியில்லை அதுபோல எண்ணமில்லாது விளைவுகளில்லை நமது எண்ணங்கள்தாம் நமது குணங்களாக மாறுகின்றன. ஒத்த உள்ளங்கள் பிற ஒத்த உள்ளங்களை சூழ்நிலைகளை ஈர்க்கின்றன என்கிற விதிக்கேற்ப நமது எண்ணங்களுக்கேற்ப நமது சூழ்நிலை அமைகிறது. உலகை வெல்வது பணத்தாசை அல்ல. உள்மன உந்துதல் காட்டும் வழியில் செல்லும் தீவிரமான ஆசை. அதுதான் சரியான திசை வாழ்வின் பயன் காண வழி. ஜான் கார்ட்னர் என்ற அமெரிக்க சிந்தனையாளர் எழுதுகிறார் "எது அர்த்தம் நிறைந்த வாழ்க்கையோ,எதை நாம் பூரணமாக நம்புகிறோமோ அதிலே இறங்கி உழைக்கும் சிரமம் இருக்கிறதே அதுதான் அறியா ரகசியம்." இந்தப் பிரபஞ்சமும் மனித வாழ்வும் எல்லாம் ஒரே அச்சில் தான் வார்க்கப்பட்டிருக்கின்றன. அதிசயமான பிரபஞ்சம் இது! அதிசயமான மனிதன் நீ! எல்லாம் உனக்குள்! எல்லாம் வெளியே!. என்பது டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தியின் சிந்தனைகள்.

அன்னை தெரசாவின் சிந்தனையோ ஏழ்மை, தூய்மை, கீழ்ப்படிதல், இலவச சேவை என்ற நான்கு எண்ணங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தெரசா விரும்பினார்.அன்புதான் வாழ்க்கை, அன்பே கடவுள் என்பது அன்னை தெரசா அவரது கொள்கை.ஏழைகள் மீது அன்பு செலுத்துவதற்கும் ஏழைகளை அறிந்து கொள்வதற்கும் நாமும் ஏழைகளாக மாற வேண்டும் என்று கூறினார்.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனையோ கோபம், பாலியல் வேட்கை, வெறுப்பு ஆகிய நிலைகளில், ஒருவரை எதிரியாக கருதுதல் போன்ற பல வகைகளில் நம் மனம் வன்முறையில் ஈடுபடுவதை அனுபவத்தில் காண்கிறோம்.ஒருவனை மற்றவன் கொள்வது மட்டுமே வன்முறை என்று நினைக்க வேண்டாம். ஆத்திரமான சொல், எழுத்துடன் கூடிய ஒரு பார்வை அல்லது கையசைவு, பயத்தினால் ஒருவருக்கு அடிபணிதல் போன்றவற்றில் எல்லாம் கூட வன்முறையிருக்கிறது. கடவுள் பெயரிலோ சமயம், சமுதாயம் அல்லது நாடு என்ற பெயரில் கொன்று குவிப்பதுதான் வன்முறை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நுண்ணியதாக, சூட்சமமாக, தந்திரமாக, சாமார்த்தியமாக, ஆழமாக என பல வழிகளில் வன்முறை செயல்படுவதை நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்