Ad Code

Ticker

6/recent/ticker-posts

சமுதாயம்

றவுமுறையிலான சில தனிமனிதர்கள் சேர்ந்த கூட்டமைப்பு குடும்பம். அதுபோல் பல குடும்பங்கள் சேர்ந்து இருப்பதே சமுதாயம். சமூகம் ஒரு குடும்பம் போன்றது என்பது காந்திஜியின் கருத்து. ஒவ்வொரு தனிமனிதனும் பிறருக்காக. தான் வாழும் சமுதாயத்திற்காகவும் அறநெறிகளையும், சிறந்த பண்புகளையும் பெற்றவனாகவும் வாழவேண்டும். அப்படிப்
பட்டவர்களால் மட்டுமே பிறரின் சுக துக்கங்களில் பங்கேற்று வழி நடத்த இயலும். மனிதநேயம் வளரும். சமுதாயம் என்பது ஒவ்வொருவரின் நன்மைக்காக கூடி வாழும் மனிதர்களை கொண்ட ஓர் அமைப்பாகும்.

சமுதாயம் அறவாழ்வின் பின்னணி

தனிமனித ஒழுக்கம் என்பது அவன் சமுதாயத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. மனிதனை பண்புடையவனாக மனித  நேயமிக்கவனாக வாழும் முறைகளை கற்றுக் கொடுக்கிறது. சமுதாய வாழ்வு தான் மனிதனின் அறவாழ்வினை செம்மைப்படுத்தும் வழிகாட்டியாகவும். ஒரு மனிதன் நல்ல முறையில் தன் உடலையும் மனதையும் சரிவர பேணி வந்தால் அதுவே சமுதாயத்திற்கு இலாபமாக, நன்மையாக அமையும். தனிமனித நலம் சமுதாய வளத்தை பெருகச் செய்யும். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் துன்பம் தவிர்த்து இன்பமாக வாழ முடிந்தவரை தன்னாலான உதவியை செய்யக்கூடிய நிலைக்கு உயர வேண்டும். அதுவே தனிமனிதன் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும்.
"உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு
உழைப்பிலே பதில் உலகுக்குத் தந்திடு"
என்பார் வேதாந்திர மகரிஷி. இயற்கை வளம் சமுதாய வளமாக மாற சமுதாயக் கூட்டமைப்பு மிகவும் தேவை.

சமுதாய அமைப்பிற்கேற்ப தனி மனிதனின் செயல்திறன் அமைகிறது. இறையுணர்வும் அறநெறியும் இணைந்த சமுதாயத்தில் தனிமனிதன் நலம் பெறுகின்றான். தனிமனிதனால் சமுதாயம் நலம் காக்கப்படுகிறது. இதில் தன்னலம் கருதாமல் "சமுதாயத்திற்குக் கடமை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்" என்ற உணர்வு தனிமனிதனிடத்தில் உண்டாதல் வேண்டும்." கூடிவாழ்ந்தால் கோடி நன்மை"." தனிமரம் தோப்பாகாது"என்னும் சொல்லுக்கேற்ப தனிமனிதன் சமுதாயத்துடன் வாழ்வதே அவனை வெற்றியின் அடித்தளமாகும்.பல குடும்பங்கள் உள்ள பகுதியை ஊர் எகின்றோம். ஊர் என்பதும் சமுதாயத்தையே குறிக்கிறது. இச்சமுதாயம்தான் நம்மை உருவாக்கியது.வளர்ந்து அறிவூட்டியது  வாழத்தகுதியுடையவர்களாக்கியது. காலை முதல் மாலை வரை நமக்கு தேவையான இன்றியமையாத பொருட்களை சமுதாயம்தான் அளிக்கிறது. அந்த சமுதாயத்தை நாம் நம் உடல், அறிவு இவற்றின் ஆற்றல் கொண்டு நன்றி கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

சமுதாயத்தில் உள்ளோர் அனைவரும் அனைத்து நலன்களையும் நிறைவாகப் பெற்று வாழ்ந்தால் மட்டுமே நாமும் அமைதியாக, சுதந்திரமாக வாழ முடியும். அந்த சமுதாய நலம் மேன்மையடையத் தாம் பெற்ற நலத்தை சமுதாய நலன் கருதி பகிர்ந்து வாழ வேண்டும். சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் ஆற்றவேண்டிய கடமைகளை புரிந்து கொண்டு நலம் செய்ய வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் சமுதாய நலன் வேண்டி காரியம் செய்ய மனித சமுதாயம் வளமுற்று இருக்கும். அதன் கீழ் அனைவரும் இன்புற்று வாழலாம். இந்நிலை மாறின் சமுதாய வளம் வற்றி துன்ப நிலை பெருகும். எனவே தன்னை வாழ்விக்கும் சமுதாயத்திற்கு தனிமனிதன் தன் கடமையாற்றி வாழவேண்டும். பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும்.கடமையுணர்வுதான் சமுதாயத்தின் வளம் பெருக்கவல்லது. அமைதி நிலவ வழிவகுப்பது ஆகும்.ஆகையால் தனிமனித பண லாபம் மட்டும் கருதாமல் சமுதாய இலாபம் கருதி மக்கள் தம் மனதை "கடுகு உள்ளம், துவரை உள்ளம்" எனக் கொள்ளாமல் தூய வளம் பெறுக "வாழ்வோம் வாழ்விப்போம்" என்ற கருத்தினை மனதில் கொண்டு "பரந்த உள்ளம்" கொண்ட நல்லதொரு மனிதனாக வாழ்வோம். வாழும் வகை செய்வோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்