Ad Code

Ticker

6/recent/ticker-posts

சுஸ்ருதர்

சுஸ்ருதர் காலத்திற்கு பிறகே ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான மருத்துவ சிகிச்சை முறை என்பது ஆரம்பித்தது. சுஸ்ருதர் மருத்துவத்திறன் நவீன உலகத்திலும் வியந்து போற்றப்படுகிற ஒன்றாகும்.சுஸ்ருதர்"பிளாஸ்டிக் சர்ஜரி"யின் தந்தை, பிதாமகன் என்று பாராட்டக் காரணமாய் அமைந்தது பின்வரும் சம்பவம்தான்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நாள் நள்ளிரவு வேளையில் மூக்கு அறுபட்டு இரத்தம் வழிந்தோடி ஓடி வந்த ஒருவர், உறக்கத்தில் இருந்த சுஸ்ருதரை எழுப்ப, கண்விழித்த அவர் வினாடிக்குள் விஷயத்தை புரிந்து கொண்டார்.பிறகு ஒரு கோப்பை திராட்சை ரசத்தாலான  மதுவை அவருக்கு புகட்டிப் படுக்க வைத்தார். பின்பு ஒரு இலையைப் பறித்து வந்து நோயாளியின் மூக்கின் அளவை அளந்து தெரிந்து கொண்டார்.பின்பு பித்தளையால் ஆன கத்தி மற்றும் கிடுக்கியின் உதவியால், நோயாளியின் கன்னப் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை அறுத்து எடுத்துக் கொண்டு அறுத்த இடத்தில் மருந்து வைத்து கட்டுப்போட்டார்.

பிறகு இரண்டு வெண்கலச் குழாய்களை நோயாளியின் மூக்கு பகுதியில் பொருத்தி, கன்னப் பகுதியில்லிருந்து எடுக்கப்பட்ட சதையால் மூக்கின் வடிவத்திற்கேற்ப மூடினார். பிறகு அதற்கேற்றபடி ஒரு கட்டும் போட்டார். தன் இருப்பிடத்தில் ஒரு நாள் தங்க வைத்து நோயாளி தினந்தோறும் அருந்த வேண்டிய மருந்து
குறிப்புகளையும் எழுதி கொடுத்து, மருந்துகளையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.சுஸ்ருதர் அறுவைச் சிகிச்சைக்காக நூற்றியொரு சிறப்புக் கருவிகளை உருவாக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு கருவியும் சுலபமாக அடையாளம் காணும் வகையில் பறவைகள், மிருகங்கள் போன்றவற்றின் உருவ அமைப்பை ஒத்திருந்தன. உடனுக்குடன் எடுத்துக் கொள்வதற்கு இது ஏற்றதாக இருந்தது.

சிறுநீரக குழாயில் ஏற்படும் கல் அடைப்பை நீக்குதல், உடலில் எந்தப் பகுதியில் உள்ள எலும்பு உடைந்தாலும் அதன் சரியான இடத்தை கண்டறிந்து சீராக்குதல், திரை விழுந்து பார்வைக் குறைவு ஏற்பட்ட விழிகளை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்குதல் போன்ற வற்றில் சாதனை புரிந்தவர் சுஸ்ருதர்.அறுவை சிகிச்சைக்கு முன் "திராட்சை ரசம்" என்னும் மதுவை நோயாளிக்கு புகட்டி அறுவைச் சிகிச்சையின் போது நோயாளி வேதனையை உணராமல் இருக்கும் முறையை முதன்முதலில் கையாண்டுள்ளார். எனவே இன்றைய 'அனஸ்தீசியா' என்ற மயக்க மருந்து கொடுக்கும் முறையின் முன்னோடியாகவும் சுஸ்ருதர் போற்றப்படுகிறார்.

மகப்பேறு என்பது இயற்கையான முறையில் நடைபெற முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் அதை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை உலகுக்கு அறிவித்த முதல் மருத்துவம் மேதையும் சுஸ்ருதர்தான்.முதலில் ஏட்டு
கல்வியைத் தெளிவாகப் பயின்று அதோடு அனுபவ ரீதியான வைத்தியத்தையும் ஒரு வைத்தியர் கற்க வேண்டும் என்று தன் மாணாக்கர்களுக்கு சுஸ்ருதர் வலியுறுத்தி இருக்கிறார். அறுவைச் சிகிச்சை பயில்வதற்கு, இறந்துபோன உடல்களை அறுத்துப் பார்த்து அனுபவரீதியாகக் கற்றுத் தெளிய வேண்டும் என்பதும் அவருடைய கருத்துதான். சுஸ்ருதர் கிமு ஆறாம் நூற்றாண்டில் விசுவாமித்திர மகரிஷியின் பிந்திய தலைமுறையில் பிறந்தவர் என்றும், வாரணாசி நகரில் 'தெய்வதாஸ் தன்வந்திரி 'என்பவரிடம் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளைப் பயன்றவர்  என்றும் வரலாறு தெரிவிக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்