Ad Code

Ticker

6/recent/ticker-posts

கே.கஸ்தூரி ரங்கன்

கே.கஸ்தூரிரங்கன் ,1940, அக்டோபர்24 அன்று கேரளத்தின் எர்ணாகுலத்தில் பிறந்தார். பம்பாய், பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு ஆகியவற்றை முடித்தார். இயற்பியல் விஞ்ஞானியாக இந்திய வானியல் ஆய்வுக் கழகத்தில்(ISRO) சேர்ந்து பணியாற்றினார். இவர் தனது தொடர்ந்து முயற்சியால் படிப்படியாக உயர்ந்து, பிற்காலத்தில் இந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியான இயக்குனராகவும் பொறுப்பேற்றார். 2003 ஆகஸ்ட் 27 முதல் நம் நாட்டின் பாராளுமன்ற மேலவை உறுப்பினரார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா,அடுத்து பாஸ்கரா-1ஆகியவற்றை விண்ணில் ஏவும் பணியில் பங்கேற்றார். பின்னர் இவரது தலைமையின் கீழ் இந்திய வானியல் ஆராய்ச்சிக் கழகம் பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. முக்கியமாக இந்தியாவின் பெருமைமிகு ஏவுகணை யான பி.எஸ்.எல்.வியை செலுத்தியது இவர் பணியில் ஓர் மகுடமாகும். கே.கஸ்தூரிரங்கன் இந்திய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் 200க்கும் மேற்பட்ட வானியல் துறை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கஸ்தூரிரங்கன் சீரிய பணிக்கு அங்கீகாரமாக, இந்திய அரசின் மிக முக்கிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ  போன்றவை வழங்கப்பட்டதை சொல்லலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்