Ad Code

Ticker

6/recent/ticker-posts

டாக்டர் ராஜா ராமண்ணா

டாக்டர் ராஜா ராமண்ணா, கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் 1925-ஆம்  ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். டாக்டர் ராஜா ராமண்ணா தன்னுடைய பட்டப்படிப்பு வரை பெங்களூரிலும், பட்ட மேற்படிப்பை சென்னை, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கற்றார்.டாடா கல்வி உதவித்தொகை பெற்று லண்டனில் தனது பி.எச்.டிஆய்வை கிங்ஸ் கல்லூரியில் முடித்தார்.1949 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய டாக்டர் ராஜா ராமண்ணா மும்பையில் இருந்த டாட்டாவின் ஃபண்டமெண்டல் ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞான ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.  டாக்டர் ராஜா ராமண்ணா அறிவியலில் கொண்ட ஈடுபாடு காரணமாக 1954 ஆம் ஆண்டு டிராம்பேவில் வடிவமைக்கபட்ட டாடா அணு ஆராய்ச்சி மையத்தின்
வடிவமைப்பிற்கும் கட்டுமானத்திற்க்கும் பொறுப்பாளரானார்.  இந்த நேரத்தில் தான் இந்தியாவின் முதல் அணு குண்டு சோதனையான 'பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு'சோதனையை 'புத்தர் சிரித்தார் 'என்னும் பெயரில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் நிகழ்த்தியதில் டாக்டர் ராஜா ராமண்ணா முக்கியப் பங்காற்றினார்.

டாக்டர் ராஜா ராமண்ணா 1972முதல்1978-ஆம் ஆண்டு வரை டிராம்பே டாடா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக இருந்தார்.1978 முதல் 1985 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு துறை மந்திரியின் விஞ்ஞான ஆலோசகர், பாதுகாப்பு ஆராய்ச்சி முன்னேற்றக் கழகத்தின் இயக்குனர், இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியின் செயலாளர் என பல பதவிகளில் இருந்தார்.1986-ஆம் ஆண்டில் ஆஸ்திரியா, வியன்னாவிலுள்ள சர்வதேச விஞ்ஞான ஆலோசகர் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக இருந்தார். 1983-இலிருந்து 1987 வரை இந்திய அரசாங்கத்தின் அணுசக்தி கமிஷனின் தலைவராக இருந்தார். பல பிரபலமான விஞ்ஞான கழகங்களில் பதவிகள் வகித்திருக்கிறார்.டாக்டர் ராஜா ராமண்ணா 1990-ஆம் ஆண்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும், 1997 முதல் 2003 வரை பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

டாட்டாவின் மூளையில் உதித்த பெங்களூரில் உள்ள தேசிய முன்னேற்ற கல்வி கழகத்தின் நிறுவன இயக்குனராக இருந்தார். டாக்டர் ராஜா ராமண்ணா எளிமையானவராக இருந்து எல்லாராலும் சுலபமாக அணுகக் கூடியவராக இருந்தார். அணுவியல் பௌதிகம், ஐரோப்பிய இசை, தத்துவம் ஆகியவற்றில் பிரதான ஆர்வம் இருந்து. பியானோவில் தேர்ச்சி பெற்றிருந்தார். மேற்கத்திய, இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். லண்டனிலுள்ள டிரினிட்டி கல்லூரியில் நிகழ்ச்சிகள் தந்திருக்கிறார்.டாக்டர் ராஜா ராமண்ணா 1993 -ஆம் ஆண்டில் 'ராகத்தில் இசையின் வடிவம் மற்றும் மேற்கத்திய பாணி 'என்ற நூலினை எழுதி இருக்கிறார் .மேலும் 'Year of Pilgrimage' உட்பட ஏராளமான படைப்புகள் இவருடைய கைவண்ணத்தில் வந்திருக்கின்றன.

அணுவியல் விஞ்ஞானத் துறையில் தனது மாறுபட்ட சேவைக்காக பல விருதுகளும், கௌரவங்களும் பெற்றிருக்கிறார். அவற்றில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு, பத்மஸ்ரீ,பத்மவிபூஷன், பத்ம பூஷன், நேரு விருது, மேகநாத் சாஹா பதக்கம், பிர்லா நினைவுப்பரிசு ஆகியவை அடங்கும். டாக்டர் ராஜா ராமண்ணா நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். 'அணுவியல் பௌதிகம்' என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்திருக்கிறார். அறிவியலில் சாதனைராக இருந்த இவர் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி காலமானார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்