Ad Code

Ticker

6/recent/ticker-posts

தன்முனைப்பு

தன்முனைப்பால் ஒரு மனிதனிடம் சீரிய முயற்சியும் கடின உழைப்பும் சிறந்த விருப்பமும் ஒருங்கிணைந்து திகழ்வதைக் காணலாம். ஒரு மனிதனின் ஆற்றல் அளவிடறகுரியதாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னகத்தே சிறந்த ஆற்றல்களையும் திறமைகளையும் கொண்டுதான் உருவாகின்றான்.ஆற்றலை வளர்த்துக் கொண்டவன் வாழ்வில் வெற்றி காண்கின்றான்.  மற்றவன் வீணாகிப் போகின்றான். வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளமாய் திகழ்வது தன்முனைப்பே ஆகும். ஒருவனது முயற்சி அவனுக்கு செல்வத்தையும், வெற்றியையும் சேர்க்கும். அவன் சோம்பேறியாக முயற்சி இல்லாமல் இருந்தால் வறுமையையும் தோல்வியையும் காண்பான் என்பது வள்ளுவர் வாக்கு.

தன்முனைப்புடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி கண்டவர் பலர்.கஜினி முகமது தொடர்ந்து 17 முறை படையெடுத்து வந்து தான் சோமநாதர் ஆலயத்தை கொள்ளையடித்தான். அவன் நோக்கம் தவறானதாக இருந்தாலும் அவனது விடாமுயற்சியே அவனுக்கு வெற்றியைக் கொடுத்தது. தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரம் கண்டுபிடித்தார். பல உலோகங்களோடு போராடினார். சுமார் 2000 பரிசோதனைகள் செய்தும் அவரால் மின்கடத்தியைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அவரது நண்பர் "உன்னால்  முடியவில்லையே, இன்னும் ஏன் மேலும் பரிசோதனைகள்? என்று கேட்டார்.அதற்கு எடிசன் இந்த உலோங்களில் எல்லாம் மின்சாரம் பாயாது என்பதை கண்டுபிடித்து இருக்கிறேன் அல்லவா? அதுவே எனது வெற்றி என்றார். மேலும் தனது விடாமுயற்சியால் எடிசன் தாமிரத்தின் மூலம் மின்சாரத்தை பாய வைக்க முடியும் என்பதையும் கண்டுபிடித்தார். இது அவருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. மனிதகுலத்திற்கு ஏற்பட்ட விடியல். அவரால் தான் இன்று நாம் இரவிலும் பார்க்க முடிகின்றது. இதுவல்லவா தன்முனைப்பு இன்றைய இளைஞர்களின் வாழ்வுக்கு இத்தகைய தன்முனைப்பு தானே வேண்டும். மேலும் பல எடிசன்கல் உருவாக வேண்டும். அப்பொழுது தான் வானமும் நம் வசப்படும்.

சோம்பல் ஒரு சமுதாயத்தை அழித்து விடுகின்றது.  மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யம் தன் படைவீரர்களின் ஆடம்பரப் போக்காலும், சோம்பலாலும் அபரிமித குடிப்பழக்கத்தாலும் ஆட்டம் கண்டது. சோம்பலுள்ளவன் சமுதாயத்துக்கே எதிரி, விதியையும் மதியால் வெல்லலாம் என்று வள்ளுவரே கூறுகின்றார்.
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்" என்று கூறுகிறார் வள்ளுவர். ஒருவன் மனம் தளராது, இடைவிடாது முயற்சி செய்தால் விதியையும் தோற்று ஓடச் செய்ய முடியும். என்பது வள்ளுவரின் கருத்து.
"நெற்றியின் மீது எழுதிய விதியின்  வரிகளை வியர்வைத் துளிகளால் அழியுங்கள்" என்பது ஞானி கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகள். எனவே தன்முனைப்புடன் செயலாற்றினால் விதியை வெல்லலாம். தன்முனைப்புடன் கூடிய உழைப்பே வெற்றி தரும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்