Ad Code

Ticker

6/recent/ticker-posts

விடைகள்

  


1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்_____


அ) எந்+தமிழ்+நா


ஆ) எந்த+தமிழ்+நா


இ) எம்+தமிழ்+ நா


ஈ) எந்தம்+ தமிழ்+நா


2. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்..இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது-


அ) இலையும் சருகும்


ஆ) தோகையும் சண்டும்.


இ) தாளும் ஓலையும்


ஈ) சருகும் சண்டும்


3. வேர்க்கடலை, மிளகாய்விதை மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை


அ) குலைவகை


ஆ) மணிவகை


இ) கொழுந்துவக


ஈ)இலை வகை


4. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்


அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது


ஆ ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது


இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்


ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்


5. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'-இத்தொடர் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே


அ) பாடிய கேட்டவர்


ஆ) பாடல் பாடிய


இ) கேட்டவர் பாடிய


ஈ) பாடல் கேட்டவர்


6 செய்தி 1-ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.


செய்தி 2-காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது எனக்குப் பெருமையே


செய்தி 3-காற்றின் ஆற்றலைக் கொண்டுகடல் கடந்து வாணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்


அ) செய்தி1 மட்டும்சரி


ஆ) செய்தி 1.2 ஆகியனசரி


இ) செய்தி3 மட்டும்சரி


ஈ) செய்தி1.3 ஆகியனசரி


7. பொருத்துக.


அ) கொண்டல்-1.மேற்கு


ஆ) கோடை-2.தெற்கு


இ) வாடை-3.கிழக்கு


ஈ) தென்றல்-4.வடக்கு


அ) 1,2,3,4  ஆ)3,1,4,2 இ) 4,3,2 1 ஈ)3,4,1,2


8. பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக்குறிக்கிறது?


அ) வானத்தையும் பாட்டையும்


ஆ) வானத்தையும் புகழையும்


இ) வானத்தையும் பூமியையும்


ஈ) வானத்தையும் பேரொலியையும்


9. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்காரணமாக அமைவது.


அ) வேற்றுமை உருபு


ஆ) எழுவாய்


இ) உவம உருபு

 ஈ) உரிச்சொல்


10.மகிழுந்து வருமா? என்பது.....


அ)விளித்தொடர்


ஆ) எழுவாய்த்தொடர்


இ) வினையெச்சதொடர்


ஈ)பெயரெச்சத்தொடர்


11. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை......


அ) நிலத்திற்கேற்ற விருந்து


ஆ) இன்மையிலும் விருந்து


இ) அல்லிலும் விருந்து 


ஈ)உற்றாரின் விருந்து


12) பின் வருவனவற்றுள் முறையாணத் தொடர் எது?


அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு


ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு


இ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இளைக்கு இடமுண்டு


ஈ)தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.


13 காசிக்காண்டம் என்பது


அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்


ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்


இ) காசி நகரத்தின் பெருமையைக் யக் குறிக்கும் நூல்


ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்


14. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பிடுவது


அ) சுட்டி 

ஆ ) கிண் கிணி

இ) குழை

 ஈ) சூழி


15) நன்மொழி என்பது.


அ) பண்புத்தொகை


ஆ) உவமைத்தொகை


இ) அன்மொழித்தொகை


ஈ) உம்மைத்தொகை


16. கீழ்க்காண்பவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?


அ) திருக்குறள் 

ஆ) கம்பராமாயணம்

இ) கலித்தொகை 

ஈ) சிலப்பதிகாரம்


17)இரவீந்தரநாத் தாகூர்____மொழியில்

  எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை_____மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது


அ) ஆங்கிலம், வங்காளம்


ஆ) வங்காள ஆங்கில


இ) வங்காள தெலுங்கு


ஈ) தெலுங்கு ஆங்கில


18. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ஆவார் இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்____ ஆவார்


அ) அமைச்சர் மன்னன் 

ஆ) அமைச்சர், இறைவன்

இ) இறைவன் மன்னன்

ஈ) மன்னன், இறைவன்


19. உவப்பின் காரணமாக

அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது


அ) இடவழுவமைதிம்

ஆ) பால் வழுவமைதி

இ) திணை வழுவமைதி 

ஈ) கால வழு வழுவமைதி


20.படர்க்கைப் பயரைக் குறிப்பது எது?


அ) யாம் ஆ )நீவிர் இ)அவர் ஈ)நாம்


21.கூற்று:போராட்டப் பண்புடனே வளர்த்தவர் கலைஞர்.


கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வர அது உதவியது.


அ) கூற்று 1 சரி 2 தவறு


ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு


இ) கூற்று தவறு 2சரி


ஈ)கூற்று மற்றும் 2சரி


22. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது இத்தொடருக்கான வினா எது?


அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?


ஆ ) கலைஞர் என்ற சிறப்புபெயர் எப்போது வழங்கப்பட்டது?


இ)தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?


ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?


23 "மையோமா சுதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில்


குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக


அ)கருப்பு ஆ)பச்சை


இ) பழுப்பு ஈ) நீலம்


24 குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்


அ) முல்லை குறிஞ்சி மருதம் நிலங்கள்


ஆ) குறிஞ்சி பாலை நெய்தல் நிலங்கள்


இ) குறிஞ்சி மருதம் நெய்தல்நிலங்கள்


ஈ) மருதம் நெய்தல் பாலை நிலங்கள்


25 சித்திரை வைகாசி மாதங்களை......காலம் என்பர்


அ) முதுவேனில் ஆ) பின்பனி


இ) முன்பனி ஈ) இளவேனில்


26 மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே


அ) திருப்பதியும் திருத்தணியும்


ஆ) திருத்தணியும் திருப்பதியும்


இ) திருப்பதியும் திருச்செந்தூரும்


ஈ)திருப்பரங்குன்றமும் பழனியும்

27. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது


அ) திருக்குறள் 


ஆ) புறநானூறு


இ) கம்பராமாயணம் 


ஈ) சிலப்பதிகாரம்


28.சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க


அ) உழவு மண் ஏர் மாடு


இ) உழவு, ஏர் மண், மாடு


ஆ) மண் மாடு ஏர் உழவு


ஈ) ஏர் உழவு, மாடு மண்


29 நச்சிலை வேல் கோக்கோதை நாடு நல்யானை கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப்படும் நாடுகள் முறையே.....


அ) பாண்டிய நாடு சேரநாடு


ஆ) சோழ நாடு சேர நாடு


இ)சேர நாடு, சோழ நாடு


ஈ)சோழ நாடு பாண்டிய நாடு


30. இருநாட்டு அரசர்களும் தும்பை பூவைச்சூடி போரிடுவதன் காரணம்


அ) நாட்டை கைப்பற்றல்


ஆ) ஆதிரை கவர்தல்


இ )வலிமையை நிலைநாட்டல்


ஈ) கோட்டையை முற்றுகையிடல்


31 உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்' என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்....


அ) உதியன் சேரலாதன்


ஆ) அதியன்பெருஞ்சாத்தன்


இ) பேகன் கிள்ளிவளவன்


உ) நெடுஞ்செழியன் திருமுடிக்காரி


32. மேன்மைதரும் அறம் என்பது.


அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது


ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது


இ) புகழ் கருதி அறம் செய்வது


ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது


33. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று வேண்டினார்.


அ) கருணையன் எலிசபெத்துக்காக


ஆ) எலிசபெத் தமக்காக


இ) கருணையன் பூக்களுக்காக


ஈ) எலிசபெத் பூமிக்காக


34. வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்து நூல் எது?


அ) ஒரு சிறு இசை


ஆ) முன்பின்


இ) அந்நியமற்ற நதி


ஈ) உயரப் பறத்தல்


35. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்


அ) வெண்பா ஆ) அகவற்பா


இ) கலிப்பா ஈ) வஞ்சிப்பா


36.பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க."


1. உறங்கு கின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்

இறங்கு கின்ற தின்று காணெ ழுந்தி ராய் எழுந்திராய் 

கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே,

உறங்கு வாய், உறங்கு வாய் இனிக் கிடந்து உறங்குவாய்


1. இப்பாடலின் ஆசிரியர் யார்?


அ) கம்பர் ஆ) இளங்கோவடிகள்


இ) கண்ணதாசன் ஈ) அதிவீரராம பாண்டியர்

2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?


அ) காசிக்காண்டம்


ஆ) கொய்யாக்கனி


இ) சிலப்பதிகாரம்


ஈ) கம்பராமாயணம்


3. இப்பாடலில் இடம்பெற்றுள்ள சீர்மோனை சொற்களைக் குறிப்பிடுக.


அ) உறங்குகின்ற உங்கள்


ஆ) உறங்குகின்ற-இறங்குகின்றது


இ) உறங்குகின்ற உறங்குவாய்


ஈ) உறங்குவாய் கிடந்து


4 இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடியெதுகை சொற்களை எழுதுக.


அ) உறங்குகின்ற- உங்கள்


ஆ) உறங்குகின்ற கும்பக்கன்ன


இ) உறங்குகின்ற- உறங்குவாய்


ஈ) உறங்குவாய் கிடந்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்