I.சரியான விடையினை தேர்ந்தெடுத்து எழுதுக.
1)இ) இங்கிலாந்து
2)அ) இரண்டாம் பாஜி ராவ்
3)இ)1986
4)அ) நெசவு
5)ஆ) கனிமங்கள்
6)அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
7)அ) கூற்று சரி ஆனால் காரனம் தவறு
8)அ)நிலக்கானி புவிப்படங்கள்
9)ஆ) முதலமைச்சர்
10)ஆ)1976
11)ஆ) டிசம்பர் 10
12)இ) வரி கோட்டு பாதையில்
13)இ) அ மற்றும் ஆ
14)ஆ) சேவை நோக்கம்
II குறுகிய வினாக்களுக்கு விடையளிக்க
15. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
- சிராஜ்-உத்-தெளலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.
- மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். இது வரலாற்றில் ’இருட்டறை துயரச் சம்பவம்’ என்றழைக்கப்படுகிறது.
16. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.
- சென்னை
- பம்பாய்
- கல்காதா
- மசூலிப்பட்டினம்
- சூரத்
- ஆக்ரா
- அகமதாபாத்
- புரோத்
17. இராணுவ குடியிருப்பு நகரங்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக
ஆங்கிலேயர்க்கு வலுவான இராணுவ முகாம்கள் தேவைப்பட்டதால் இராணுவக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். இராணுவ வீரர்கள் இந்தப்பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். மேலும் இப்பகுதிகள் படிப்படியாக நகரங்களாக வளர்ந்தன
- எ.கா. கான்பூர், லாகூர்
18.. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான பெண்களை குறிப்பிடுக
- பேகம் ஹஸ்ரத் மஹால்
- ராணி லட்சுமி பாய்
- வேலுநாச்சியார்
19. மண்ணின் வகைகளைக் கூறுக.
- வண்டல் மண்
- கரிசல் மண்
- செம்மண்
- சரளை மண்
- மலை மண்
- பாலை மண்
20. “வளிமண்டலக் காற்றழுத்தம்” என்றால் என்ன?
- புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள உள்ள காற்றின் எடையே வளிமண்டல அழுத்தம் அல்லது காற்றழுத்தம் எனப்படும்.
- காற்றின் அழுத்தம் காற்றழுத்த மானியால் அளவிடப்படுகிறது.
21. இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
- இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் மிகுந்த பகுதிகள்
- வேலை வாய்பிற்கேற்ற சூழல்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பு
22. இடைநிலைத் திசைகளின் பெயர்களை குறிப்பிடுக
- வடகிழக்கு
- வடமேற்கு
- தென்கிழக்கு
- தென்மேற்கு
23.மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.
- மேலவை – சட்டமன்ற மேலவை
- கீழவை – சட்ட மன்ற பேரவை
24. குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
- இயற்கை குடியுரிமை: பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை
- இயல்புக் குடியுரிமை; இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை
25.அரசியல் உரிமைகள் சிலவற்றை குறிப்பிடுக
- கருத்துச் சுதந்திரம்
- அமைதியாக கூட்டம் நடத்துதல்
- தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை
- வாக்களிக்கும் உரிமை
- பேச்சுரிமை
- தகவல்களைப் பெறும் உரிமை
26. போக்குவரத்து சமிக்ஞைகளின் விளக்குகளின் படம் வரைந்து அதன்
பொருளைக் குறிப்பிடு
நில் கவனி செல்
27. பண்டமாற்று முறை என்றால் என்ன?
பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தபடாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை என்றனர்.
28.தனியார் துறை நிறுவனங்களில் ஏதேனும் மூன்றினை கூறு
- இன்போசிஸ் நிறுவனம்
- ஆதித்யா பிர்லா நிறுவனம்
- ரிலையன்ஸ
- டாட்டா குழும நிறுவனங்கள்
- விப்ரோ நிறுவனம்
- இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்
- ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்
III. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி
29) கோடிட்ட இடங்களை நிரப்புக
1. புதுடெல்லி
2.அறிவு
3.3
4.ஆளுஞர்
5.1935
30)பொருத்துக
1.1600
2.மதராஸ்
3.1854
4. சமூக மற்றும் பண்பாட்டு இடப்பெயர்வு
5.ஈரப்பதம்
31)பொருத்துக
1.உண்மையான தலைவர்
2.1098
3.வாக்களிக்கும் உரிமை
4.பண்டங்களுக்கு பண்டம் பரிமாற்றம்
5.இரண்டாம்துறை
32)சரியா/ தவறா எனக் குறிப்பிடுக
1.தவறு
2.சரி
3.சரி
4.தவறு
5.சரி
33) 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து வரிவாக ஆராயவும்
மேலதிகாரக் கெள்கை
உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகளை இணைத்துக் கொண்டனர்.
வாரிசு இழப்புக் கொள்கை
அரசு கட்டிலில் அரியனை ஏற நேரடி ஆண் வாரிசு இல்லையெனில் அவர்கள் இறப்பிற்கு பின் அப்பகுதி ஆங்கிலேய ஆட்சிப் பகுதியுடன் இணைக்கப்படும். இதன் மூலம் சாரதா, சம்பல்பூர், ஜான்சி, நாக்பூர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன.
இந்திய கலாச்சார உணர்வுகள்
- சமயக்குறியீடுகளை தடைவிதிக்கப்பட்டதது
- தலைப்பாகைகளுக்கு பதிலாக தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.
- ஆடைக் கட்டுப்பாடுகள் மதம் மாறச் செய்வதற்கான ஒரு முயற்சியாக கருதப்பட்டது.
- ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டது.
- தரக்குறைவாக நடத்தப்பட்டன.
- கலகம் என்பது புதி ரக என்பீல்டு ரக துப்பாக்கியின் கீழ் வடிவில் வந்தது.
- பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய தோட்டாக்கள், விலங்குகள் தோலில் செய்யப்ட் உறைகளும் காரணமாக அமைந்தது.
35. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
- இங்கிலாந்த இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு 1600 டிசம் 31 அன்று ஒரு அனுமதிப் பட்டயம் வழங்கினார்
- பேரரசர் ஜஹாங்கீர் 1613-ல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்
- பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் வாயிலாக சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் தனது புகழ் வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.
- பின்னர் பம்பாய், கல்கத்தா ஆகிய பகுதிகளில் வர்த்தக மையங்களை விரிவுபடுத்தினார்.
- 1757-ல் பிளாசி போர் மற்றும் 1764-ல் பச்சார் போருக்கு பிறகு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது
36. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்
வண்டல் மண்
- வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது.
- இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்பட்டு உருவாகிறது. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம்மிக்கது.
- இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
கரிசல் மண்
- கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
- கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
- கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு வளரும்.
செம்மண்
- செம்மண், உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது.
- இம்மண்ணில் உள்ள இரும்பு ஆக்சைடு அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது. இது வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
சரளை மண்
- சரளை மண் அயனமண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது.
- இம்மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருதலின் (Leaching) செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து காணப்படுகிறது.
- இது தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
மலை மண்
- மலைமண், மலைச்சரிவுகளில் காணப்படுகிறது.
- இப்பகுதிகளில் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது.
- உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.
பாலை மண்
- பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.
- இது உவர்தன்மை, மற்றும் நுண்துளைகளைக் கொண்டது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.
37. மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக
- புவிப்படத்தில் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிடப்படுவதற்கு புவிப்படக்குறியீடு மற்றம் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- இச்சின்னங்கள் புவிப்பட திறவு விசை பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
- ஒரு சிறிய பகுதியில் அதிக தகவல்களை இக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் அளிக்கின்றன. இதன் மூலம் புவிப்பட கருத்துகளையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்
- சில குறியீடுகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்த சர்வதேச ஒப்பந்தம் அல்லது நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவை மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் எனப்படுகின்றன
38. மாநில சட்ட மன்றத்தின் பணிகளை விவரி?
- மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்ட மன்றத்தின் முக்கிய பணி ஆகும்.
- மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுபாட்டினை செலுத்துகிறது.
- சட்ட மன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கி கொள்வோ முடியாது
- அரசியலமைப்பு திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்க வகிக்கின்றது.
39. மனித உரிமைகள் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி
இயல்பானவை
அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை
அடிப்படையானவை
இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதல் வாழக்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்
மாற்றமுடியாதவை
இவைகள் தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவைகள் அகம்
பிரிக்கமுடியாதவை
மற்ற உரிமைகளை ஏற்கனேவ அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.
உலகளாவியவை
இந்த உலகாளவிய உரிமைகளை ஒருவரின் தோற்றம் அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும்.
சார்புடையவை
இவைகள் ஒன்றுக்கொன்று சார்புடையவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு உரிமையைப் பயன்படுத்தம் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது.
40. பணத்தின் பணிகள் யாவை? அவற்றை விளக்குக.
முதன்மை அல்லது முக்கிய பணிகள்
பொருளாதாரத்தில் செயல்பட்டு அவை பிரதான பணிகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை
பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.
மதிப்பின் அளவுகோல்
அனைத்து மதிப்பையும் பணத்தால் அளவிடலாம். பலவகையான பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இடையில் பரிமாற்ற விகிதத்தை தீர்மானிப்பது எளிது.
இரண்டாம் நிலை பணிகள்
இரண்டாம் நிலை பணிகளில் முக்கிய மூன்று முக்கிய பணிகள்
(i) எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு
- எதிர்கால செலுத்துகைக்கு பணம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. இன்று ஒரு கடனாளி கடன் வாங்குகிறார்.
- குறிப்பிட்ட தொகையை கூறிய படி குறிப்பிட்ட காலத்தில் செலுத்துவது கடமையாகும்.
(ii) மதிப்பின் நிலை கலன் அல்லது
- வாங்கும் சக்தியின் நிலைகலன் சில பண்டங்கள் அழிந்து போகக்கூடியதால், பண்டமாற்று முறையில் சேமிப்பை ஊக்குவிப்பதில்லை.
- பணத்தின் அறிமுகத்திற்கு பிறகு எதிர்காலத்திற்காகப் பணத்தை சேமித்தார்கள்.
- அது அழிய கூடியதில்லை.
(iii) மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி
- பணத்தால் தொலைதூர இடங்களுக்கும், வெளி நாட்டிற்கும் பண்டங்களை பரிமாற்றம் செய்ய முடியும்.
- ஆகவே, வாங்கும் சக்தியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு அவசியம் என உணரப்பட்டது
41. பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக
பொதுத்துறை |
தனியார் துறை |
1. தொழில்களின் உரிமையானது அரசாங்கத்திடம் உள்ளது | தொழில்களின் உரிமையானது தனிநபர்களிடம் உள்ளது |
2. பாெதுத்துறை தொழிலாளர்களக்கு முறையான ஊதியத்தை உறுதி செய்கிறது | தனியார்துறை தொழிலாளர்களை சுரண்டகிறது |
3. வரி ஏய்ப்பு இல்லை | வரி ஏய்ப்பு உண்டு |
4. இது சேவை நோக்கமுடையது | இது இலாப நோக்கமுடையது |
5. இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது | இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை |
எ.கா. NLC, SAIL, BSNL | எ.கா. TVS Moterors. TATA Steel |
42) உலகவரைபடம்
43)
வேறுபடுத்துக.
1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்
உருமாறிய பாறைகள் | படிவுப்பாறைகள் |
அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது. | அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட லமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. |
புவிகோள மாதிரி மற்றும் புவிப்படம்
புவிகோள மாதிரி | புவிப்படம் |
1. புவிகோள மாதிரியானது புவியை முப்பரிமாணத்தில் சித்தரிக்கின்றது | புவிப்படங்களை புவியின் இரு பரிமாண சித்தரிப்பாகும். |
2. இது புவியின் வடிவிலான ஒரு சிறிய தோற்றமாகும் | முழு புவியையோ அல்லது ஒரு பகுதியையோ சமதளபரப்பில் அளவையுடன் பதிலீட்டுக் காட்டும் ஒரு முறை ஆகும். |
காரணம் கூறுக
3. மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.
- மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்ஸிஜன் அளவும் காற்றின் அழுத்தமும் மிகவும் குறைவாக உள்ளது.
- இதனால் மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துக் செல்கின்றன
2. புவியில் நன்னீர் குறைவாக உள்ளது.
புவியில் உள்ள மொத்த நீரில் 97.2% உவர்ப்பு நீராகவும் மற்றும் 2.8% நன்னீராகவும் உள்ளது.
44) இந்திய வரைபடம்
0 கருத்துகள்