சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1 . அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
- இராமானுஜர்
- இராமாநந்தர்
- நம்மாழ்வார்
- ஆதி சங்கரர்
விடை : ஆதி சங்கரர்
2. கலாச்சார நிலவரை படங்கள் என்பன ________________ அமைப்புகளைக் காட்டுகின்றன.
அ) இயற்கையான
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
இ) செயற்கையான
ஈ) சுற்றுச்சூழல்
விடை : மனிதனால் உருவாக்கப்பட்ட
3.ஜப்பான்
4. 1848
5.வருமான வரி என்பது ——
- நேர்முக வரி
- மறைமுக வரி
- அ மற்றும் ஆ
- இவற்றில் எதுவுமில்லை
விடை : நேர்முக வரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
6. பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ________________ என்ற இடத்தில் உள்ளது.
விடை : மண்டகப்பட்டு
7. காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் ___________ என அழைக்கப்படுகின்றன
விடை : கிராமம் மற்றும் நகரங்களின் வரைபடம்
8. ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகளில், பொருத்தமான __________ அதிகாரிகளால் சில மேற்பார்வை உள்ளது.
விடை : அரசாங்க
9.மறைமுக வரி என்பது ______________________நெகிழ்ச்சி உடையது.
விடை : அதிக
III சரியா? தவறா? காண்
10. இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.
விடை : தவறு
11. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.
விடை : சரி
12. பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
விடை : சரி
V. பொருந்தாதைக் கண்டுபிடித்து எழுது.
13.அளவை
14. ஏரோப்ளேன்
15.பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?
- சேவை வரி
- மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
- சொத்துவரி
- சுங்கவரி
விடை : சொத்துவரி
V.பொருத்துக
16). குரு கிரந்த் சாகிப்
17) மாவட்டம் அல்லது நகரம்
18) புயலின் கண்
19) பாதசாரிகள்
20)மறைமுக வரி
VI. குறுகிய விடையளி
21. நாயன்மார்கள் மொத்தம் எத்தனைபேர்? அவர்களில் முக்கியமானோர் யாவர்?
மரபுவழிக் கதையின்படி நாயன்மார்கள் 63 பேராவர். அவர்களில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்கள்) ஆகியோர் தென்னிந்தியக் கோவில்களில் சிலைவழிபாடு செய்யப்படுகின்
22. தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.
- தஞ்சாவூர் பெரிய கோவில் அது கட்டப்பட்டபோது ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது.
- அதன் விமானம் (கர்ப்பகிரகத்தின் மேலுள்ள கட்டுமானம்) 216 அடிகள் உயரம் கொண்டதாகும்.
- உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் அதுவும் ஒன்று என்பதால் அது குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது.
- மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
- இங்குள்ள 16 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்.
23. முதன்மை திசைகள் யாவை?
கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு
24. நிலவரைபட நூல் என்பது என்ன?
- நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும்.
- இவை அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது.
- மலைகள், பிரதான சாலைகள், இரயில்பாதைகள் மற்றும் முக்கிய நகரங்களை நிலவரைபட நூல் வரைபடங்களில் முதன்மையாகக் காட்டப்படுகின்றன.
- அதிக பரப்பின் புவியியல் கூறுகள் குறித்து அறிந்துகொள்ள நிலவரைபட நூல் உதவுகிறது.
27.ஏதேனும் 4 சாலை பாதுகாப்பு விதிகளை கூறுக.
- எப்பொழுதும் இடது புறமாக செல்வது
- வளைவுகளிலும், திருப்பங்களிலும் வேகத்தை குறைத்தல்
- நான்கு சக்கர வாகனத்தினை ஒட்டும் போது இருக்கை பட்டையும், இரண்டு சக்கர வாகனத்தினை ஒட்டும் போது தலைக்கவசத்தையும் அணிய வேண்டம்
- வேக வரம்பை ஒருபோதம் மீறக்கூடாது
28. வெள்ளத்தினால் எற்படும் மூன்று விளைவுகள் பற்றி எழுதுக.
- சொத்து மற்றும் உயிரிழப்பு
- மக்கள் இடப்பெயர்வு
- காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.
29. வரியின் வகைகள் யாவை? மற்றும் அதனைப் பற்றி விளக்குக.
நேர்முக வரி
- நேர்முக வரி என்பது தனியாளோ, நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர், பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார்.
- எடுத்துக்காட்டாக, உண்மையான சொத்து வரி, தனியாள் சொத்துவரி, வருமான வரி அல்லது உறுதிமொழிப் பத்திரங்களின் மீதான வரி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மறைமுக வரி
- தொடக்கத்தில், ஒருவருக்கு விதிக்கப்பட் வரிச்சுமை, மற்றொருவர் மீத மாற்ற இயலம் முறையையே மறைமக வரி என்கிறோம்.
- எடுத்தக்காட்டாக ஒருபொருளை விற்பனை செய்யும் விற்பனையாளர், தொடக்கத்தில் அதன் வரிச்சுமையை எற்கிறார். அவரிடமிருந்து, அந்தப் பொருளை யார் வாங்கிறார்களோ அவர்களே அந்த பொருளுக்கான வரிச்சுமையை ஏற்கிறார்கள்
30. நன்கொடை அல்லது அன்பளிப்பு வரி மற்றும் சேவை வரி பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
அன்பளிப்பு வரி:
ஒருவர் வெகுமதியாக அல்லத அன்பளிப்பாகப் பெறும் பொருள்களின் மதிப்புக் விதிக்கப்படும் வரி, அன்பளிப்பு வரியாகும்
சேவை வரி
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது சேவை வரியாகும். சேவையைப் பெறவர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு செலுத்தப்படுகிறது.
VI. வேறுபடுத்துக.
31.
சுவர் வரைபடங்கள்
சுவர் வரைபடங்கள் என்பது அதிக பரப்பளவை காட்டும் சிறிய அளவை படங்களாகும். இவை வகுப்பறையில் மணவர்களுக்கும் மற்றும் அலுவலகங்களிலும் பயன்படுகிறது. சிறிய அளவை வரைபடமானது அதிக பரப்பளவிலான இடங்களுக்கு குறைந்த அளவு விவரங்களைக் கொடுக்கக் கூடியது.
நிலவரைபட நூல்
நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும். இவை அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது. மலைகள், பிரதான சாலைகள், இரயில்பாதைகள் மற்றும் முக்கிய நகரங்களை நிலவரைபட நூல் வரைபடங்களில் முதன்மையாகக் காட்டப்படுகின்றன. அதிக பரப்பின் புவியியல் கூறுகள் குறித்து அறிந்து கொள்ள நிலவரைபட நூல் உதவுகிறது.
32. வெள்ளம் மற்றும் சூறாவளி.
வெள்ளம்
கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை (சுனாமி) அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுகிறது.
சூறாவளி
உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று “சூறாவளி” என அழைக்கப்படுகிறது.
33. நேர்முக மற்றும் மறைமுக வரிக்கு இடையிலான வேறுபாடுகள் யாவை
நேர்முக வரி | மறைமுக வரி |
1. வரி செலுத்துவோர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையைப் பிறருக்கு மாற்ற இயலாது. | ஒருவர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையை மிக எளிதாக வேறொருவருக்கு மாற்ற இயலும |
2. தனியாள் மற்றும் நிறுவனங்கள் பெறும் வருமானங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. | பல்வேறு பொருள் மற்றும் சேவைகளின் மீது வரி விதிக்கப்படுகிறது. |
3. பணவீக்க அழுத்தம் இல்லை | பணவீக்க அழுத்தம் உண்டு |
4. வரித் தாக்கமும் வரி நிகழ்வும் சமமாக உள்ளன. | வரித் தாக்கமும் வரி நிகழ்வும் வெவ்வேறாக உள்ளன. |
5. நெகிழ்வுத் தன்மை குறைவு. | நெகிழ்வுத்தன்மை அதிகம் |
VIII. விரிவான விடையளிக்க.
35 . அளவையின் அடிப்படையில் நில வரைபடத்தின் வகைகளை விரிவாக எழுது?
பெரிய அளவை வரைபடங்கள் :
பெரிய அளவை நிலைவரைபடம்: குறைந்த பரப்பளவிலான இடங்களைக் குறித்து அதிக விவரங்களைக் கொடுக்கக் கூடியது பெரிய அளவை நிலவரைபடம் ஆகும். ஏனெனில் அவை ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.
நிலஅளவைப் படங்கள்
நிலஅளவைப் படங்கள் (Cadastral) என்பது கிராமம் மற்றும் நகர்ப்புறங்களின் வரைபடமாகும். அவை நிலம் மற்றும் வீடு இருப்பிடம் (sides) குறித்து விளக்குகின்றன.
தல வரைபடம்
தல வரைபடம் (Topographical) சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களைத் தருவனவாகும். இவை இந்தியாவின் நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது. இவ்வகை பெரிய அளவை நிலவரைபடங்கள் இயற்கை அமைப்புக்களான குன்றுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் குறித்தும், கலாச்சார அமைப்புக்களான மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், சாலைகள், மற்றும் கால்வாய்களை குறித்தும் விளக்குகின்றன.
36. . பெண் கல்வியின் முக்கியத்துவத்தை குறிபிட்டு ஒரு கட்டுரையை எழுதுக.
1. அதிகரித்த கல்வியறிவு:
- உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட 63 சதவிகிதம்பேர் பெண்கள்.
- எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்.
2. ஆள் கடத்தல்:
- ஆள் கடத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களேயாகும்.
- இளம் பெண்களுக்கு அடிப்படைத் திறன்கள் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதினால் ஆள் கடத்தல்கள் கணிசமாகக் குறைக்கப்படும் என்று ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம் விளக்குகின்றது.
3. அரசியல் பிரதிநிதித்துவம்:
- உலகம் முழுவதும் பெண்கள் வாக்காளர்களாகவே உள்ளனர். அவர்களது அரசியல் ஈடுபாடு கட்டுப்படுத்தப்படுகிறது.
- குடிமைக்கல்வி மற்றும் குடிமைப் பயிற்சி அனைத்து விதமான மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைக்கின்றது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான தலைமை மற்றும் பங்கேற்பினைப் பற்றிய ஆய்வு பரிந்துரைக்கிறது.
4. வளரும் குழந்தைகள்:
- கல்வியறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளை ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து ஐந்து வயதுக்கு மேல் வாழ வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
5. காலம் தாழ்த்திய திருமணம்:
- பின்தங்கிய நாடுகளில் மூன்றில் ஒரு பெண்குழந்தைக்குப் பதினெட்டு வயதுக்குள் திருமணமாகிவிடுகிறது மற்றும் எந்த நாடுகளில் பெண்குழந்தைகள் ஏழு அல்லது அதற்கும் மேலான வருடங்கள் படிக்கிறார்களோ, அவர்களின் திருமணம் நான்கு ஆண்டுகள்வரை தள்ளிப்போகிறது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் பரிந்துரைக்கிறது.
6. வருமான சாத்தியம்:
- ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.
- ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.
7. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்:
- பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உயருகிறது.
- 10 சதவீதம் கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக மூன்று சதவிகிதம் அதிகரிக்கின்றது.
8. வறுமை குறைப்பு:
- பெண்களுக்குக் கல்வியில் உரிமைகள் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்களும் பொருளாதார செயல்பாடுகளில் பங்கேற்பர்.
- இதனால் அவர்களின் வருவாய் ஈட்டும் திறன் அதிகரித்த வறுமை அளவை குறைக்க வழி ஏற்படும்
37.சாலைபாதுகாப்பிற்கான முக்கிய விதிகள்
- எப்பொழுதும் இடது புறமாக செல்வது
- வளைவுகளிலும், திருப்பங்களிலும் வேகத்தை குறைத்தல்
- நான்கு சக்கர வாகனத்தினை ஒட்டும் போது இருக்கை பட்டையும், இரண்டு சக்கர வாகனத்தினை ஒட்டும் போது தலைக்கவசத்தையும் அணிய வேண்டம்
- வேக வரம்பை ஒருபோதம் மீறக்கூடாது
- சரியான இடைவெளி விட்டு பின் தொடரவும்
- வாகனம் நிறத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனத்தை நிறத்த வேண்டும்
- சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்
- பாதசாரிகள் கடக்கும் பாதையில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும்
38. சந்தைகளின் வகைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி எழுதுக.
1. புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில்
உள்ளூர் சந்தைகள்:
- உள்ளூர் சந்தையில் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதியை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
- அவர்கள் வழக்கமாக தினசரி பயன்பாட்டின் விரைவில் வீணாகிவிடும்/அழுகும் பொருள்களை விற்கின்றனர்.
- ஏனெனில் அத்தகைய பொருள்களின் போக்குவரத்துச் செலவு மிக உயர்ந்ததாக இருக்கும்.
பிராந்திய சந்தைகள்:
- பிராந்திய சந்தைகளானது உள்ளூர் சந்தைகளை விட பரந்த அளவிலானவை அல்லது சில சிறிய மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருக்கும்.
- தேசிய சந்தைகள்: தேசிய சந்தையில் பொருள்களின் தேவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் தேவையாக இருக்கலாம்.
அல்லது தேசிய எல்லைகளுக்கு வெளியே இத்தகையை பொருள்களின் வர்த்தகத்தை அரசாங்கம் அனுமதிப்பதில்லை.
சர்வதேச சந்தை:
- தயாரிப்புகளுக்கான தேவை சர்வதேச அளவிலானது மற்றும் சர்வதேச அளவில் பொருள்கள் மொத்த அளவில் வர்த்தகம் செய்யப்படும்போது அச்சந்தை சர்வதேச சந்தை என அழைக்கப்படுகிறது.
2. நேரத்தின் அடிப்படையில்
மிகக் குறுகிய கால சந்தை:
- மிகக் குறுகிய கால சந்தையில் பொருள்களின் அளிப்பு நிலையானது மேலும் அதை உடனடியாக மாற்ற முடியாது.
- உதாரணமாக பூக்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கான சந்தைகள் பொருள்களின் விலையானது தேவையை பொறுத்து அமையும்.
குறுகிய கால சந்தை:
- குறுகிய கால சந்தை என்பது முந்தைய சந்தையை விட சற்று கூடுதல் நேரம் உடையது. இங்கே அளிப்பை சற்றே மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
- நீண்ட கால சந்தை: நீண்ட கால சந்தையில் உற்பத்தியை கணக்கிடுவதன் மூலம் விநியோகத்தை எளிதாக மாற்றியமைக்கலாம்.
எனவே இத்தகைய சந்தையை தேவைகேற்ப மாற்றலாம். - எனவே சந்தையின் சமநிலை விலையை சரியான சமயத்தில் தீர்மானித்துக் கொள்ளும்.
3. பரிவர்த்தனையின் அடிப்படையில்
உடனடிச் சந்தை :
- பரிவர்த்தனைகள் நிகழும் இடத்திலேயே பணம் உடனடியாக செலுத்தப்படுகிறது கடன் முறை இல்லை.
எதிர்கால சந்தை:
- எதிர்கால சந்தையின் பரிவர்த்தனைகள் கடன் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் ஆகும். எதிர்காலத்தில் திரும்ப செலுத்த ஒரு வாக்குறுதியும் உள்ளது.
4. ஒழுங்குமுறை அடிப்படையில்
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை:
- ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையானது பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன.
- இத்தகைய சந்தை நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் இல்லை என்பதை உறுதி செய்கிறது.
- ஒழுங்குபடுத்தப்பட்ட உற்பத்தி அல்லது உற்பத்திகளின் குழுவைக் குறிக்கிறது. எ.கா, பங்குச்சந்தை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையாக உள்ளது.
கட்டுப்பாடற்ற சந்தை:
- முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை. சந்தையில் கண்காணிப்போ ஒழுங்குமுறையோ கிடையாது. அதுவே முடிவுகளை மேற்கொள்கிறது .
5. போட்டியின் தன்மை அடிப்படையில்
முற்றுரிமை :
- முற்றுரிமை என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது. அதில் ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர் முழு சந்தையிலும் கட்டுப்பாட்டைக் கொண்டு உள்ளனர்.
- இத்தகைய தனி விற்பனையாளர் நெருக்கமான மாற்று பொருள்கள் இல்லாத தயாரிப்புகளில் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.
ஏகபோக போட்டி:
- ஏகபோக போட்டி என்ற சொல் பேராசியரியர் எட்வர்ட். எச். 1933 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சேம்பர்லின் தனது ஏகபோகபோட்டியின் கோட்பாட்டு நூலின் குறிப்பிட்டுள்ளார்.
- ஏகபோக போட்டி என்ற சொல் ஏகபோக மற்றும் சரியான போட்டி என்பதன் கலவையைக் குறிக்கிறது. அதில் ஏராளமான வாங்குபவர்கள் மற்றும் தயாரிப்புகளை விற்பவர்கள் உள்ளனர்.
- இருந்தபோதிலும் ஒவ்வொரு விற்பனையாளரின் தயாரிப்பும் ஒரு அம்சத்தில் அல்லது மற்றொன்றிலிருந்து வேறுபட்டுள்ளது.
ஒலிகோபோலி :
- ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டது. ஒலிகோய் என்றால் சில மற்றும் பாலி என்றால் கட்டுப்பாடு. எனவே ஒலிகோபோலி என்பது ஒரு சந்தை வடிவத்தைக் குறிக்கிறது.
- இதில் ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தயாரிப்புகளில் சில விற்பனையாளர்கள் உள்ளதைக் குறிக்கிறது.
39. . நேர்முக மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக
நேர்முக வரி
- நேர்முக வரி என்பது தனியாளோ, நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர், பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார்.
- எடுத்துக்காட்டாக, உண்மையான சொத்து வரி, தனியாள் சொத்துவரி, வருமான வரி அல்லது உறுதிமொழிப் பத்திரங்களின் மீதான வரி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மறைமுக வரி
- தொடக்கத்தில், ஒருவருக்கு விதிக்கப்பட் வரிச்சுமை, மற்றொருவர் மீத மாற்ற இயலம் முறையையே மறைமக வரி என்கிறோம்.
- எடுத்தக்காட்டாக ஒருபொருளை விற்பனை செய்யும் விற்பனையாளர், தொடக்கத்தில் அதன் வரிச்சுமையை எற்கிறார். அவரிடமிருந்து, அந்தப் பொருளை யார் வாங்கிறார்களோ அவர்களே அந்த பொருளுக்கான வரிச்சுமையை ஏற்கிறார்கள்
IX இந்திய வரைபடம்
0 கருத்துகள்