1.பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.
- சாதவாகனர்கள்
- சோழர்கள்
- களப்பிரர்கள்
- பல்லவர்கள்
விடை : களப்பிரர்கள்
2. சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.
- மெக்ராலி
- பிதாரி
- கத்வா
- மதுரா
விடை : மெக்ராலி
3. அ)மேயர்
4. புவியின் வடிவம்
- சதுரம்
- செவ்வகம்
- ஜியாய்டு
- வட்டம்
விடை : ஜியாய்டு
5. தீர்க்கக் கோடுகளின்மொத்த எண்ணிக்கை
- 370
- 380
- 360
- 390
விடை : 360
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
6. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ___________ கட்டினார்
விடை: கரிகாலன்
7.குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் __________________ஆகும்.
வினட: பெஷாவர் (புருஷபுபரம்)
8.. முதன்மை தீர்க்கக்கோடு ___________ என அழைக்கப்படுகிறது
விடை: க்ரீன்விச் தீர்க்கக்கோடு
9.. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ___________ ஆகும்.
விடை: வாலாஜாபேட்டை
III.பொருத்துக
10) மீன்பிடித்தல்
11) ஷர்ஷ சரிதம்
12)10000மாணவர்கள்
13) சுனாமி
14) வட்டார வளர்ச்சி அலுவலகம்
IV. சரியா ? தவறா ?
15. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது
விடை : தவறு
16.‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது
விடை : சரி
17. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்
விடை : சரி
V பொருந்தாததை வட்டமிடுக
18. வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு
விடை : பன்னாட்டு தேதிக்கோடு
19. வெப்பமண்டலம், நேர மண்டலம், மிதவெப்ப மண்டலம், குளிர்மண்டலம்
விடை : நேர மண்டலம்
20. மகரரேகை, கடகரேகை, நிலநடுக்கோடு, முதன்மைதீர்க்கக்கோடு
விடை : முதன்மைதீர்க்கக்கோடு
VI குறுகிய விடையளிக்க
21.சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
22.கடையேழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
- பாரி
- காரி
- ஓரி
- பேகன்
- ஆய்
- அதியமான்
- நள்ளி
23.. கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.
- கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார்.
- அஸ்வகோஷர், வசுமித்ரர், நாகார்ஜுனர் போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.
24. நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?
- நாளந்தாவில் பெளத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது.
- யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன
25.ஹர்ஷர் எழுதிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
- ரத்னாவளி
- நாகநந்தா
- பிரியதர்ஷிகா
26.ஜியாய்டு என்பது என்ன?
- புவியானது துருவப் பகுதிகளில் தட்டையாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் சற்றுப் பருத்தும், கோள (Spherical) வடிவமாக காணப்படுகிறது.
- ஆனாலும் புவியின் வடிவத்தை எந்த வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது.
- எனவே, இதன் வடிவம் புவிவடிவம் (Geoid) என்று அழைக்கப்படுகிறது.
27. தலநேரம் என்பது என்ன?
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
ர்க்கக் கோட்டிற்கும் மாறுபடும். 0° கிரீன்விச் தீர்க்கக்கோட்டிற்குச் சூரியன் உச்சநிலையில் வரும் நண்பகல் 12 மணி இந்த இடத்திற்குத் தலநேரம் ஆகும்.
28. புவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.
- வடக்கு அரைக்கோளம்
- தெற்கு அரைக்கோளம்
- கிழக்கு அரைக்கோளம்
- மேற்கு அரைக்கோளம்.
29.பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.
- இயற்கை பேரிடர்
- மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்
என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம்.
இயற்கை பேரிடர்
- நிலநடுக்கம்
- எரிமலை
- சுனாமி
- சூறாவளி
- வெள்ளம்
- நிலச்சரிவு
- பனிச்சரிவு
- இடி மற்றும் மின்னல்
மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்
- நெருப்பு
- கட்டடங்கள் இடிந்து போதல்
- தொழிற்சாலை விபத்துக்கள்
- போக்குவரத்து விபத்துகள்
- தீவிரவாதம்
- கூட்ட நெரிசல
30.ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்
31. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
- சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை.
- கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர்.
- நாற்பது பெண்புலவர்கள் வாழ்ந்து அரியநூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர்.
- சங்க காலப் பெண்பாற்புலவர்கள் : அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார், ஆதி மந்தியார், பொன்முடியார்.
- திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது.
- இருந்தபோதிலும் ‘கற்பு’ பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது.
- பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றிருந்தனர்.
33. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
- சமுத்திரகுப்தர் மகத்தான போர்த்தளபதியாவார். அவர் பேரரசர் ஆனவுடன் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார்.
- தென்னிந்தியாவின் மீதும் படையெடுத்தார். தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.
- வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.
- தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார்.
- கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி, ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
34. முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?
முக்கிய அட்சக் கோடு வகைகள்
- ‘தாழ் அட்சக்கோடுகள்
- மத்திய அட்சக் கோடுகள்
- உயர் அட்சக்கோடுகள்
‘தாழ் அட்சக்கோடுகள்
0° அட்சக் கோட்டிலிருந்து 23½° வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப் பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘தாழ் அட்சக்கோடுகள்’ Low Latitudes எனவும்
மத்திய அட்சக் கோடுகள்
• 23½° வடக்கு முதல் 66½° வடக்கு வரையிலும், 23½° தெற்கு முதல் 66½° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘மத்திய அட்சக் கோடுகள்’ Middle Latitudes எனவும்
உயர் அட்சக்கோடுகள்
• 66½° வடக்கு முதல் 90° வடக்கு வரையிலும், 66½° தெற்கு முதல் 90° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் ‘உயர் அட்சக்கோடுகள்’ High Latitudes, எனவும் அழைக்கப்படுகின்றன.
மண்டல வகைகள்
- வெப்பமண்டலம்
- மிதவெப்ப மண்டலம்
- குளிர் மண்டலம்
வெப்பமண்டலம் (Torrid Zone)
நிலநடுக்கோட்டிலிருந்து (0°) வடக்கில் கடகரேகை (23½° வ) வரை மற்றும் தெற்கில் மகரரேகை (23½° தெ) வரை சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் புவியின் மற்ற பகுதிகளை விட இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது. எனவே, இப்பகுதி ‘வெப்பமண்டலம்’ என அழைக்கப்படுகிறது.
மிதவெப்ப மண்டலம் (Temperate Zone)
- வட அரைக்கோளம் கடகரேகை (23½° வ) முதல் ஆர்க்டிக் வட்டம் (66½° வ) வரையிலும், தென் அரைக்கோளம் (23½° தெ) மகரரேகை முதல் (66½° தெ) அண்டார்டிக் வட்டம் வரையுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது.
- எனவே இப்பகுதி ‘மித வெப்பமண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது.
குளிர் மண்டலம் (Frigid Zone)
- வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66½° வ) முதல் வடதுருவம் (90° வ) வரையிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம் (66½° தெ) முதல் தென்துருவம் (90° தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்த நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது.
- எனவே இப்பகுதி “குளிர்மண்டலம்” என அழைக்கப்படுகிறது.
35.மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக.
- குடிநீர் வசதி
- தெருவிளக்கு அமைத்தல்
- தூய்மைப் பணி
- மருத்துவச் சேவை
- சாலைகள் அமைத்தல்
- மேம்பாலங்கள் அமைத்தல்
- சந்தைகளுக்கான இடவசதி
- கழிவுநீர் கால்வாய்
- திடக்கழிவு மேலாண்மை
- மாநகராட்சிப் பள்ளிகள்
- பூங்காக்கள்
- விளையாட்டு மைதானங்கள்
- பிறப்பு, இறப்பு பதிவு. இன்னும்பிற.,
36. சாலை பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுதவும்.
- நடைபாதையில் நடப்போம்! நலமுடனே பயணிப்போம்!!
- சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!!
- கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!!
- வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்!
- தலைக்கவசம் அணிவோம்! சீட் பெல்ட் அணிவோம்!!
- படியில் பயணம்! நொடியில் மரணம்!!
- இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!!
- போதையில் பயணம்! பாதையில் மரணம்!!
VII உலக வரைபடம்
0 கருத்துகள்