Ad Code

Ticker

6/recent/ticker-posts

TET Paper 2 Psychology-ல் 30/30 வாங்கணுமா? இந்த 65 கேள்விகளை முதல்ல படிங்க!

 *Psychology TET paper 2 க்கான முக்கியமான 65 வினாக்கள்.*

TET Paper 2 Psychology Important Question



1. சைக்காலஜி என்ற வார்த்தையை உருவாக்கியவர் - ருடால்ப் ஹோக்கல்

2. சமூக உளவியல் ஓர் அறிமுகம் நூலை எழுதியவர் - வில்லியம் மக்டூகல்

3. உள இயற்பியல் எனும் நூலை எழுதியவர் - பெட்ச்னர்

4. உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்ஹெம் உண்ட்

5. உற்று நோக்கல் முறை யாருக்கு ஏற்ற முறை - குழந்தைகள் விலங்குகள் 

6. வினா வரிசை முறை இதன் இன்னொரு முறை -  வாக்கெடுப்பு முறை 

7. நவீன உளவியலின் தந்தை - சிக்மண்ட் பிராய்டு 

8. தனிநபர் உளவியல் - ஆட்லர்

9. பகுப்பு உளவியல் - யூங் 

10. நடத்தை உளவியல் - ஜே பி வாட்சன் 

11. இயல்புக்க கொள்கை, ஹார்மிக் கொள்கை - வில்லியம் மக்டூகல்

12. வடிவமைப்பு கோட்பாடு - டிட்ச்னர்

13. மனிதநேய உளவியல் - கார்ல் ரோஜர்ஸ் மாஸ்லோ

14. முழுமை காட்சி கோட்பாடு - மேக்ஸ் வெர்திமர்

15. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிகழ்ச்சியும் மரபு சூழ்நிலை ஆகிய இரண்டின் இணைந்த செயல்பாட்டிலேயே அமைகிறது - மக்கைவர, பேஜ்

16. கவனவீச்சை கண்டறியும் கருவி - டாசிஸ்டோஸ்கோப் 

17. கவன வீச்சை கண்டறிந்தவர் - ஆர்.பி. கேட்டல்

18. கவன வீச்சு சோதனை செய்தவர் - சார் வில்லியம் ஹாமில்டன் 

19. பார்வை கவனத்தில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறிய உதவும் கருவி - மேசன் தட்டு 

20. பளிங்கு கற்களின் மேல் சோதனை - ஜெவான்ஸ்

21. புலன் காட்சியின் நான்கு கூறுகளை கூறியவர் - முர்ஃபி 

22. தூண்டல் தவறாக புரிந்து கொள்ளப்படும் போது ஏற்படும் நிலை - திரிபுக் காட்சி optical illusion

23. 0-12 வயது வரை உள்ள குழந்தைகளிடம் *மீத்தெளிச் சாயல்களை* உருவாக்கும் திறன் அதிகரிக்கும் 

24. The process of education - புரூணர் 

25. ஒரு பொருளைப் பற்றி அறிய உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ செயல்படுதல் - ஸ்கீமா

26. பிம்பங்களின் உதவியுடன் எழும் சிந்தனை - கற்பனை 

27. மொழி உருவாவதிலும் மொழியினை புரிந்து கொள்வதிலும் அடங்கியுள்ள உளவியல் கருத்துக்கள் - மொழிசார் மனவியல் 

28. புதிர் நிலையை கிளை வழி நிலை என்றவர் - ஜான் டூயி 

29. வடிகட்டுதல் கோட்பாட்டை வெளியிட்டவர் - பிராட்பேண்ட் 

30. உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலை - மனவெழுச்சி 

31. ஒரு மனவெழுச்சி அது எழுவதற்கான காரணம் மறைந்த பின்னரும் தொடர்ந்து செயல்படுதல் - மனவெழுச்சி நீட்சி 

32. மூன்று மாத குழந்தையின் மனவெழுச்சிகள் - சினம் பயம் அன்பு 

33. குழவிப் பருவத்திலும் முன் பிள்ளை பருவத்திலும் மனவெழுச்சிகளில் ஆண் குழந்தை தாயிடமும் பெண் குழந்தை தந்தையிடமும் அதிக அன்பு காட்டுவதால் இருமுகப் போக்கு நிலை தோன்றுகிறது என கூறியவர் - சிக்மன்ட் பிராய்டு 

34. குமரப் பருவத்தில் மனவெழுச்சி மிகுந்து காணப்படுவதால் இப்பருவத்தினருக்கு தேவைப்படுவது - வழிகாட்டுதல் 

35. மனவெழுச்சி மிகுந்திருக்கும் போது ஓவியம் தீட்டுதல் இசை கற்றல் போன்ற மாற்று வழிகளில் மனதை செலுத்துதல் - மடைமாற்றம் எனப்படும் 

36. தப்பித்து உயிர் வாழ்வதற்கான முதல் படி - பய உணர்வு 

37. தற்கருத்து என்ற சொல்லை முதலில் அறிமுகப்படுத்தியவர் - லெக்கி

38. வாழ்க்கைத் தொழில் ஒன்றை தேர்ந்தெடுத்தலில் தற்கருத்து முக்கிய செல்வாக்கை பெறுகிறது என்று கூறியவர் - டொனால்ட் சூப்பர் 

39. ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் எந்த அளவு கற்று தேடுகிறார் என்பதே - கற்றல் வீதம் 

40. விளைவு விதியே எல்லா வகை கற்றலுக்கும் அடிப்படை என நம்பியவர் - தார்ண்டைக் 

41. பயிற்சி விதியின் வேறு பெயர்கள் - அலை வெண் விதி, அண்மை விதி 

42. நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் என்று சொன்னவர் - சிக்மண்ட் பிராய்ட்

43. மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள் - கால்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் 

44. கற்பதற்கான SQ3 R முறை - survey, questioning, recite, repeat, review 

45. SWOT - strength, weakness, opportunities, threats 

46. ஒற்றை காரணி கோட்பாடு - மீனே

47. இரட்டை காரணி கோட்பாடு - ஸ்பியர் மேன் 

48. பல் காரணி கொள்கை - தார்ண்டைக் 

49. நுண்ணறிவை அளப்பதில் முதன் முதலில் வெற்றி கண்டவர் - ஆல்பிரட் பீனே 

50. நுண்ணறிவு ஈவு கண்டறிந்தவர் - வில்லியம் ஜெர்மன்

51. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் முறை - மனவையது / கால வயது × 100 

52. பாவ்லோவின் சோதனை - நாய் 

53. ஸ்கின்னர் சோதனை - எலி 

54. தார்ண்டைக்‌ சோதனை - பூனை 

55. கோஹ்லர் சோதனை - மனித குரங்கு 

56. நாட்டத்தை அளவிடும் சோதனை - DAT 

57. நுண்ணறிவு வளர்ச்சி பதினைந்தாம் வயதில் முழுமை அடைகிறது என்று சொன்னவர் - மீனே

58. கிரகாம் வாலிஸ் படிநிலைகள் - நான்கு அவை ஆயத்தம் உள்வளர்ச்சி உள்ளொளி தோன்றுதல் சரிபார்த்தல் 

59. ஏதோ ஒரு வகை ஊக்கி எல்லா கற்றல் நிலைமைகளிலும் இருப்பது இன்றியமையாதது - கெல்லி 

60. Achieving society என்ற நூலை எழுதியவர் - டேவிட் மெக்லிலேண்டு 

61. அடைவு  ஊக்கத்தை அளவிடும் முறைகள் - SCT, TAT

62. ஒரு குழுவின் மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக திகழ் பவர் குழுவின் தலைவர் - ஸ்ப்ராட்

63. சமுதாயம் என்னும் நூலை எழுதியவர்கள் - மெக்கைவர், பேஜ் 

64. Personality என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது - லத்தீன் 

65. நடத்தைகள் எழுவது தடைபடும் நிலை - மனவிறைப்பு நிலை




கருத்துரையிடுக

0 கருத்துகள்