Ad Code

Ticker

6/recent/ticker-posts

AI மூலம் 2 நிமிடத்தில் Lesson Plan தயாரிப்பது எப்படி | How to Create Al Lesson Plan| Step by Step

 

1. அறிமுகம் (Introduction)

வாராந்திர Lesson Plan எழுத மணிநேரக் கணக்கில் செலவழிப்பதைத் தவிர்த்து, மொபைல் போனைப் பயன்படுத்தி வெறும் 2 நிமிடங்களில் AI மூலம் சுலபமாகத் தயாரிக்கலாம். இதற்கு எந்தவொரு வாட்ஸ்அப் குழுக்கள் அல்லது இணையதளங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான எந்தப் பாடத்திற்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் Lesson Plan உருவாக்கலாம். ChatGPT, Claude, Gemini போன்ற எந்த AI டூலையும் இதற்காகப் பயன்படுத்தலாம் இந்த கட்டுரையில் Google Gemini பயன்படுத்தி எப்படி lesson plan உருவாக்கலாம் என்பதை பார்க்கலாம்.

2. Google Gemini செயலியை நிறுவுதல் (Installation)


 Google Play Store சென்று "Google Gemini" எனத் டைப் செய்து செயலியை இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.



செயலியை ஓபன் செய்தவுடன், கீழேயுள்ள பிளஸ் (+) குறியீட்டைக் கிளிக் செய்து நமக்குத் தேவையான கட்டளையை (Prompt) டைப் செய்து அனுப்பலாம்.



3. அடிப்படை Lesson Plan உருவாக்குதல் (Basic Prompting)

தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டளை (Prompt) வழங்கலாம்.

எடுத்துக்காட்டு: "ஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம் இன்பத்தமிழ் பாடத்திற்கான லெசன் பிளான் உருவாக்கி கொடு" என டைப் செய்து அனுப்பினால், AI உடனடியாகக் கீழே வரும் தலைப்புகளில் லெசன் பிளானை உருவாக்கும்:




வகுப்பு, பருவம், பாடம், பாடத்தலைப்பு, காலளவு

கற்றல் நோக்கங்கள், கற்பித்தல் உபகரணம்

ஆயத்தப்படுத்துதல், விளக்குதல், மாணவர் செயல்பாடு

மதிப்பீடு, தொடர்பணி

4. விருப்பமான தலைப்புகளில் (Custom Headings) பெறுதல்

உங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட தலைப்புகளைக் குறிப்பிட்டு லெசன் பிளான் கேட்க முடியும்.

 எடுத்துக்காட்டு பிராம்ட்: "வகுப்பு, பாடம், தலைப்பு, கற்றல் நோக்கங்கள், ஆயத்தப்படுத்துதல், மனவரைபடம், விளக்குதல், கற்றல் விளைவுகள், மதிப்பீடு, தொடர்பணி என்ற தலைப்பின் கீழ் லெசன் பிளானை உருவாக்கி கொடு" எனக் கேட்டால், அதே வடிவத்தில் உருவாக்கித் தரும்.

லெசன் பிளானைச் சுருக்கமாகச் (ஒரே பக்க அளவில்) செய்யவோ அல்லது மேலும் விரிவாகத் தரவோ பிராம்ட் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

5. சந்தேகம்/பிரச்சனை 1: 


கற்றல் விளைவுகள் (Learning Outcomes) பொருந்தவில்லை என்றால்
AI உருவாக்கிய கற்றல் விளைவுகள் அரசு பாடத்திட்டத்துடன் சரியாகப் பொருந்தவில்லை என்றால், உங்களிடம் உள்ள கற்றல் விளைவுகள் (Learning Outcomes) PDF கோப்பை Gemini செயலியில் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும் 

பிராம்ட்: "நான் பதிவேற்றம் செய்துள்ள கற்றல் விளைவுகளில் இந்த பாடத்திற்கு எது பொருந்துமோ, அந்த கற்றல் விளைவை கற்றல் விளைவு எண்ணுடன் பொருத்தி மீண்டும் லெசன் பிளான் உருவாக்கி கொடு" என அனுப்பினால், சரியான கற்றல் விளைவு எண்ணுடன் லெசன் பிளான் கிடைக்கும்.

6. சந்தேகம்/பிரச்சனை 2: 


தகவல்கள் துல்லியமாக இருக்க வேண்டும் என்றால் AI உருவாக்கும் தகவல்கள் சரியாக இருக்கிறதா எனச் சரிபார்க்க, பாடப் புத்தகத்தின் சம்பந்தப்பட்ட பக்கங்களைப் புகைப்படம் (Photo) எடுத்து Gemini-இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்


 

 "நான் அப்லோட் செய்துள்ள பாடப்பகுதிக்கான லெசன் பிளானைப் பொருத்தமாக மீண்டும் உருவாக்கி கொடு" என்று கேட்டால், பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்களுக்கு ஏற்ப எந்தத் தவறும் இல்லாத லெசன் பிளான் கிடைக்கும்.

7. PDF / Word வடிவத்திற்கு மாற்றுதல்


லெசன் பிளான் உருவானதும், "இதை PDF பார்மட்டில் கிரியேட் செய்து கொடு" என்று பிராம்ட் கொடுத்தால், AI அதைப் PDF கோப்பாக மாற்றித் தரும். அதை 'Open' கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 

8. ஆங்கில வழிப் பாடங்களுக்கு உருவாக்குதல் (English Medium)



 எடுத்துக்காட்டு: "8th Standard Science Measurement lesson plan in English" எனக் கேட்டால், Learning Objectives, Motivation, Mind Map, Explanation, Learning Outcomes, Evaluation, Assignment ஆகிய தலைப்புகளில் ஆங்கில வழியில் PDF வடிவில் லெசன் பிளான் கிடைக்கும் .

9. AI மூலம் லெசன் பிளான் உருவாக்குவதன் நன்மைகள்

*ஆசிரியர்களுக்கு நேரம் பெருமளவு மிச்சமாகிறது.

*புதிய கற்பித்தல் யோசனைகள் கிடைக்கின்றன.

* நேர்த்தியான வடிவத்தில் (Format) எளிதாக லெசன் பிளான் உருவாக்க முடிகிறது மற்றும் ஆசிரியர்களின் பணிச்சுமை குறைகிறது.


மேலும் தகவல் தெரிந்துகொள்ள கீழ் கண்ட வீடியோவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது 






கருத்துரையிடுக

0 கருத்துகள்