Ad Code

Ticker

6/recent/ticker-posts

ராம் நவமி அன்று இதை செய்தால் வாழ்க்கை மாறும் | Ram Navami Special Benefits & Pooja Tips

 


திருமாலின் அவதாரங்களில் சிறப்பு 'மிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராமாவதாரம். இறைவன் தனது தெய்வீக சக்திகளைத் துறந்து சாதாரண மனிதனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் இது,அயோத்தி தேசத்தை தசரதன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். திசைகளை எண் திசைகளாக பிரிப்பார்கள், இந்த எண் திசைகளோடு, கீழ் திசை, மேல் திசையையும் சேர்த்து 10 திசைகளிலும் தன்னுடைய ரதத்தை திறம்பட செலுத்தக்கூடியவர் என்பதால் 'தசரதன்" என்ற பெயர் வந்தது. அவருக்கு கோசலை, சுமித்ரை, கைகேயி என்று மூன்று மனைவியர். இருப்பினும் தனக்கு அடுத்த நாட்டை ஆள பிள்ளை இல்லாத தால் தசரதர் பெரும் கவலைகொண்டார்.


குழந்தைப் பேறு கிடைக்க வேண்டி ரிஷ்ய சிங்கர் என்ற முனியரை அழைத்து வந்து புத்திர காமேஷ்டி யாகம் நடத்தும்படி பணித்தார். அதன்படியே ரிஷ்ய சிங்கரும் யாகம் செய்தார், யாக அக்னியில் இருந்து, ஒளி பொருந்திய ஒரு உருவம் தோன்றியது. அதன் கரங்களில் தங்க பாத்திரமும், அதனுள் பால் பாயசமும் இருந்தது. அந்த உருவம் தசதரை நோக்கி இந்த பாயசத்தை உனது மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்" எனக் கூறி மறைந்தது.


சரத மகாராஜா, அந்த பாயசத்தில் பாதியை கவுசல்யாவிற்கு கொடுத்தார். மீதமுள்ள பாதியில் அரை பங்கை கமித்திராவுக்கு கொடுத்தார். மேலும் மீதமிருந்ததில் பாதியை கைகேயிக்கு அளித்தார். அதன்பிறகும் எஞ்சிய பாயசத்தை மீண்டும் சுமித்திராவுக்கு கொடுத்தார். பாயசத்தில் பாதியை அருத்திய கவுசல்யாவுக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில் கடக லக்னத்தில் நவமி திதியில் ராமபிரான் பிறந்தார், கைகேயிற்கு பூச நட்சத்திரம் கடக ராசி மீன லக்னத்தில் பரதன் பிறந்தான். இரண்டு முறை பாயசம் அருந்திய சுமித்தி ராவுக்கு ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசி கடக லக்னத்தில் லட்சுமணனும் சத்ருக்ணனும் பிறந்தனர். ராமர் பிறந்த தினத்தையே, நாம் ராம நவமி என்று கொண்டாடுகிறோம்.


விரதம் இருப்பது எப்படி?


ராமர் பிறந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், நன்மைகள் பலவும் வந்துசேரும். ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப் படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசி மாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்திய மாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயசம், வடை போன்றவற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.


அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நாலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்ச நேயரின் அருட்பார்வை கிட்டும்.


குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார் கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும், நாடிய பொருட்கள் கைகூடும்.


ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம்' என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணயம் அழிந்து அன்பும், அறியும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.




Keywords 

ram navami tamil
ram navami pooja methods tamil
ram navami benefits
ram navami special tips
lord rama pooja tamil
ram navami 2026
ram navami vazhipadu tamil
spiritual tips tamil
hindu festival tamil
ram navami remedies

கருத்துரையிடுக

0 கருத்துகள்