Ad Code

Ticker

6/recent/ticker-posts

TET Tamil Model Question Paper -1with Answers PDF | Free Download (Updated 2025)

 


1.புரட்சிக் கருத்துக்களை பாடியதால் பெயர் பெற்றவர்


A. பாரதியார்


B. பாரதிதாசன்


C. சுரதா


D. கவிமணி


2.செந்தமிழ் பெயர்களில் ஒன்று


A. பால்


B. மனம்


C. சுவாள்


D. அனைத்தும்


3."அமிழ்தே நீ இல்லையென்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்" என்று கூறியவர்


A. பட்டுக்கோட்டையார்


B. உ.வே.சா


C. காசி ஆனந்தன்


D. ஔவையார்


4.ஏற்றத்தாழ்வின்றி அமைய வேண்டுவது எது?


A. சமூகம்


В. நாடு


C. வீடு


D. தெரு


5.பிரித்தெழுது: செம்பயிர்


A. செம + பயிர்


B. செம்பு + பயிர்


C. செம்மை + பயிர்


D. செமை + பயிர்


6.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு கிடைப்பது


A. மகிழ்ச்சி


B. கோபம்


C. வருத்தம்


D. அசதி


7.சேர்த்தெழுது: நிலவு + என்று


A. நிலவுயென்று


B. நிலவென்று


C. நிலவுஎன்று


D. நிலாவென்று


8.தாசன் என்பதன் பொருள்


A. அரசன்


B. புலவர்


C. அடிமை


D. எதுவுமில்லை


9.பாரதிதாசனின் கூற்றுப்படி "சோர்வினை நீக்கி ஒளிரச்செய்யும் தமிழ்" எதனைப் போன்றது


A. தேன்


B. தோள்


C)வாள்


D. அனைத்தும்


10.மேதினி என்பதன் பொருள்


A. கடல்கோள்


B. உலகம்


C. வெள்ளம்


D. தமிழ்


11.கனிச்சாறு என்னும் நூலில் உள்ள தொகுதிகள்


A. எட்டு


B. ஏழு


C. ஆறு


D. பதினொன்று


12.தாய்மொழியில் படித்தால் கிடைப்பது


A. பெருமை


B. பன்மை


C. பொறுமை


D. மேன்மை


13.சேர்த்தெழுது: எட்டு + திசை


A. எண்திசை


B. எட்டுதிசை


C. எட்டுத்திசை


D. எட்டித்திசை


14."ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி"

ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள்"

-என்று பாடியவர்

A. பெருஞ்சித்திரனார்

 B. சுரதா

C. பாரதியார்

D. வாணிதாசன்


15. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் ஒன்று


A. எழுத்து


B. தமிழ் நிலம்


C. தமிழ் உலகம்


D. அனைத்தும்


16.மா - என்னும் சொல் குறிப்பது/குறிப்பவை


A. வயல்


B. வண்டு


C. A மற்றும் B


D. எதுவுமில்லை


17.பூவின் நிலைகள்


A. ஆறு


B. ஒன்பது


C. ஏழு


D. எட்டு


18. அ - என்னும் எழுத்து குறிக்கும் எண்


A. ஆறு


B. ஒன்பது


C. ஏழு


D. எட்டு


19. பின்வருவனவற்றுள் எது இலக்கண நூல்?


A. எட்டுத்தொகை


B. பத்துப்பாட்டு


C. நாலடியார்


D. நன்னூல்


20. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்


A. கை


B. நொ


C.பூ


D. தை


21. மெய் என்பதன் பொருள்


A. உடல்


B. உயிர்


C. ஆன்மா


D. எதுவுமில்லை


22.இலக்கணம் எத்தனை வகைப்படும்


A. 4


B. 5


C.6


D. 3


23.கீழ்வரும் எழுத்தில் மென்மையாக ஒலிக்க வேண்டியது


A.ய்

B.ழ்

C.ப்

D.ண்


24. App-இணையான தமிழ்ச்சொல்


A. செயலி


B. மின்னஞ்சல்


C. புலனம்


D. இணையம்


25. கபிலர் என்னும் பெயரின் மாத்திரை அளவு


A. 4


B. 3


C.3 1/2


D. 2½


26. நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை


A. 5


B. 6


C. 7


D. 4


27. இயல்பாக காற்று வெளிப்படும்போது பிறப்பவை


A. உயிர் எழுத்து


B. மெய் எழுத்து


C. குறில்


D. நெடில்


28. கபிலர் எழுதிய பாடல் இடம்பெற்றுள்ள நூல்


A. நற்றினை


B. நன்னூல்


C. தண்டியலங்காரம்


D. குறுந்தொகை


29.அறிவியல் செய்தி காணப்படும் நூல்


A. திருக்குறள்


B. பரிபாடல்


C. முல்லைப்பாட்டு


D. திருமந்திரம்


30.ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை வகைப்படுத்தும் நூல்


A. தொல்காப்பியம்


B. நன்னூல்


C. பரிபாடல்


D. திருக்குறள்


31. எண்ணத்தை வெளிப்படுத்த உதவுவது


A. இயற்றமிழ்


B. இசைத்தமிழ்


C. நாடகத்தமிழ்


D. எதுவுமில்லை

32.நிறைகுறைகளை நம் வாழ்வில் சுட்டிக்காட்டுவது எது


A. நாடகத்தமிழ்


B. இசைத்தமிழ்


C. A மற்றும் B


D. எதுவுமில்லை


33. நெல், வரகு என்பவற்றின் தாவர இலைப்பெயர்கள்


A. இலை


B. புல்


C. தாள்


D. தழை


34. கூந்தல் என்பது எதன் இலைப்பெயர்


A. பனை, தென்னை


B. நாணல், தழை


C. வாழை, பலா


D. கமுது(பாக்கு)


35. தமிழ் எழுத்துக்களில் பெரும்பான்மையாக அமைந்திருப்பவை


A. வலஞ்சுழி


B. இடஞ்சுழி


C. வினா எழுத்து


D. உயிர் எழுத்து


36. பின்வருவனவற்றுள் எவை இடஞ்சுழி எழுத்துக்கள்


A.அ.எ


B.ண.ஒ


C.மு,து


D. ட,ய


37. "என்று பிறந்தவள் என்று உணராத


இயல்பினனாம் எங்கள் தாய்" கூறியவர் யார்


A. பாரதிதாசன்


B. பாரதியார்


C. வாணிதாசன்


D. பெருஞ்சித்தனார்


38. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்


A. தொல்காப்பியம்


B. அகத்தியம்


C. நன்னூல்


D. தண்டியலங்காரம்


39. அறிவியல் அறிஞர் கலிலியோவின் கருத்துக்கள் போன்று அறிவியல் கருத்துக்களை கூறியவர்


A. தொல்காப்பியர்


B. கபிலர்


C. தண்டி


D. அனைவரும்


40. அறுவை சிகிச்சைகள் பற்றிய செய்திகள் காணப்படும் நூல்


A. நற்றினை


B. பதிற்றுப் பத்து


C. அகநானூறு


D. புறநானூறு


41. வேளாண்மை என்ற சொல் இடம்பொறும் நூல்




A. குறுந்தொகை


B. கலித்தொகை


C. அகநானூறு


D. புறநானூறு


42. உயர்வு அல்லாத திணை என்று குறிக்கப்படுவது


A. உயர்திணை


B. அஃறிணை


C. நற்றிணை


D. எதுவுமில்லை


43. "தமிழன் கண்டாய்" என்ற வாக்கியம் இடம்பெறும் நூல்


A. தொல்காப்பியம்


B. திருக்குறள்


C. தேவாரம்


D. குறுந்தொகை


44. பாகற்காய் - பிரித்து எழுதுக


A. பாகல் + காய்


B. பாகு + இன் + காய்


C, பாகு + அல் + காய்


D. பா + அல் + காய்


45. மாணிக்கம் என்னும் இயற்பெயர் யாருடையது


A. பெருஞ்சித்திரனார்


 B. வாணிதாசன்


C. சுரதா


D. யாருமில்லை


46. மெய் எழுத்துக்களின் இனங்கள்


A. 18


B. 12


C. 3


D. 5


47. விரிவான கருத்தைச் சுருக்கி சொல்வது


A. இன்னா நாற்பது


B. இனியவை நாற்பது


C. பழமொழி


D. திருக்குறள்


48. உழைப்புக்கு அடிப்படையாக அமைவது


A. சுத்தம்


B. உறைவிடம்


C. உணவு


D. எதுவுமில்லை


49. தனி எழுத்து என்று அழைக்கப்படுவது


A.ஃ

B. ழ

C.Aமற்றும்B

D.எதுவுமில்லை


50. மெய் எழுத்துக்களின் மாத்திரை அளவு


A. 1

B. 1/4

C. 1/2

D.1 1/2

மேற்கண்ட வினாக்களுக்கு விடைகள் கீழே லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது

  📥 Download விடைகள் (PDF)  

  மாதிரி தேர்வு வினாத்தாள் PDF

📥 Download TET Tamil Model Paper (PDF)

ஆன்லைன் தேர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

https://tamilmoozi.blogspot.com/2025/09/tet-tamil-online-test-2025-free-mock.html




Key words 

TET Tamil model question paper,

TET Tamil question paper 2025,

TET previous year question paper PDF,

TET exam preparation Tamil,

TET mock test in Tamil,

Tamil Nadu TET question paper with answers,

Free TET study material Tamil,

TRB TET exam model paper Tamil,

TET paper 1 Tamil model questions,

TET paper 2 Tamil sample questions,

high CPC education keywords,

கருத்துரையிடுக

0 கருத்துகள்