Ad Code

Ticker

6/recent/ticker-posts

TET தமிழ் வினா விடை 2025 PDF | TNTET மாதிரி வினா விடைகள் மற்றும் தேர்வுக்கான தயாரிப்பு குறிப்புகள்

 


1). சரியான விடையைத் தேர்ந்தெடுக்க


a. திராவிட - திரவிட - திரமிள - தமிழ்


b. திராவிட - திரமிள - திரவிட - தமிழ்


C. தமிழ் - திரமிள - திரவிட -திராவிட


d. தமிழ் - திராவிட - திரமிள - திரவிட


e. விடை தெரியவில்லை


2. சரியான விடையை எழுதுக. நடுதிராவிட மொழிகள் யாவை?


a. கதபா,பெங்கோ, கோயா


b. தோடா, கோத்தா, கொரகா


c. மால்தோ, குரூக்,பிராகுய்


d. கோத்தா, கூவி, மால்தோ


e. விடை தெரியவில்லை


3. 'இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்' - இந்நூலுக்குரிய டாக்டர் அம்பேத்கர் மறைந்த தினம்


a. 1926 - டிசம்பர் 6


c. 1946 - டிசம்பர் 6


b. 1936- டிசம்பர் 6


d. 1956 - டிசம்பர் 6


e. விடை தெரியவில்லை


4. "இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்?


a.முடியரசன்


b. சுரதா


C.வாணிதாசன்


d. கண்ணதாசன்


e. விடை தெரியவில்லை


5. "போலச் செய்தல்" பண்பை அடிப்படையாக கொண்ட கலை


a. சிற்பக் கலை

 b. பேச்சுக் கலை

C. நாடகக் கலை 

d. ஓவியக் கலை

e. விடை தெரியவில்லை


6. சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது' என உணர்ந்தவர்


a.பாரதி


b. சுரதா


c. பாரதிதாசன்


d.கவிமணி


e. விடை தெரியவில்லை


7. அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்


a. சென்னை


b.மதுரை


c. சிதம்பரம் d.தஞ்சை


e. விடை தெரியவில்லை


8. 'திராவிட' எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்


a. ஈராஸ் பாதிரியார்


b.கால்டுவெல்


C.ஜி.யு.போப்


d. வீரமாமுனிவர்


e. விடை தெரியவில்லை


9. நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை


a. பூநாரை


b. அன்னம் c. கொக்கு d. குருகு


e-விடை தெரியவில்லை


10. 'நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து' யார் கூற்று?


a. பம்மல் சம்பந்தனார்


b. சங்கரதாசு சுவாமிகள்


C.கவிமணி


d. பரிதிமாற் கலைஞர்


e. விடை தெரியவில்லை


11. பாவேந்தர் பாரதிதாசன் பாடியது


a. "பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்"


b. "தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி"


c. "சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும்

சேருவீர்"


d. "தோள்கள் உனது தொழிற்சாலை நீ

தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை"


e. விடை தெரியவில்லை


12. தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?


a. பிள்ளையார்பட்டி


b. பெருமாள் பட்டி


c.சுங்குவார்ப்பட்டி


d.செல்லப்பிராட்டி

e. விடை தெரியவில்லை

13. நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?


a. ஆஸ்பிரின்


b.கோப்ராக்சின்


C. குளோரோபார்ம்


d. தைராக்ஸின்


e. விடை தெரியவில்லை


14. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?


a. சகலகலா வல்லி மாலை


b. பூங்கொடி


C. மணிக்கொடி


d. உரிமை வேட்கை


e. விடை தெரியவில்லை


15. தமிழ்- பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்


a. கண்ணதாசன்

b. வாணிதாசன்

C. வண்ணதாசன்

d.பாரதியார்

e. விடை தெரியவில்லை




16. 'களி இன்ப நல்வாழ்வு கொண்டு - கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு" - என்று பாடியவர்


a.பாரதியார்


b.கோ.அ.அப்துல் லத்தீப்


c. முடியரசன்


e. விடை தெரியவில்லை


d. பாரதிதாசன்


17. 'காந்தியடிகளை அரை நிருவாணப் பக்கிரி' என்று ஏளனம் செய்தவர்.


a. சர்ச்சில்


c. வாரன் ஹேஸ்டிங்ஸ்


b. புனித ஜார்ஜ்


d. இராபர்ட் கிளைவ்


e. விடை தெரியவில்லை


18. "நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவர்?


a.உ.வே.சாமிநாதர்


b. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்


C. மறைமலையடிகள்


d. கவிமணி தேசிக விநாயகம்


e. விடை தெரியவில்லை


19. முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்கள் அமைக்கப்பட்ட இடம்


a. கிரீஸ் 

b.ரோம்


c. இத்தாலி

 d. ஏதென்ஸ்


e. விடை தெரியவில்லை


20. மேரி கியூரி -பியூரிகியூரி இணையர் இணைந்து நோபல்பரிசு பெற்ற ஆண்டு எது?


a. 1911


b, 1934


c. 1903


d. 1905

e. விடை தெரியவில்லை


21. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?


a. கவிஞர் முத்துலிங்கம்


b. கவியரசர் கண்ண தாசன்


C. கவிஞர் வெ.இராமலிங்கனார்


d. கவிஞர் பாரதிதாசன்


e. விடை தெரியவில்லை


22. 'வங்க சிங்கம்' என அழைக்கப்படுபவர்


a. காந்தியடிகள்


b. ஜவஹர்லால் நேரு


C.வல்லபாய் பட்டேல்


d. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


e. விடை தெரியவில்லை

23. தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.


a. 1949-ல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்


b. 1954-ல் காமராசர் முதலமைச்சராக இருந்தார்


c. 1944-ல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்


d. 1947-ல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்


e. விடை தெரியவில்லை


24. தம்முடைய மாணவர்களை 'இயற்றமிழ் மாணவர்' என அழைத்தவர்


a. உ.வே. சாமிநாதர்


b. பரிதிமாற்கலைஞர்


c. மீனாட்சி சுந்தரனார்


d. இராகவனார்


e. விடை தெரியவில்லை


25  நான்காம் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர்


a.பாண்டித்துரையார்


b. மருது பாண்டியர்


c. முத்துராமலிங்கனார்


d. திருமலை நாயக்கர்

e. விடை தெரியவில்லை


TET தமிழ் வினா விடை 2025 PDF | TNTET மாதிரி வினா விடைகள் மற்றும் தேர்வுக்கான தயாரிப்பு குறிப்புகள்


https://tamilmoozi.blogspot.com/2025/09/tntet-paper-2-social-science-online_17.html?m=1



கருத்துரையிடுக

0 கருத்துகள்