மாணவர்களே நமது பாடத்தில் வரலாறு பகுதியில் முதல் பாடத்தில் மனிதனின் பரிணாம வளர்ச்சி வெற்றியும் இரண்டாவது பாடத்தில் நான்கு பண்டைய நாகரிகங்கள் பற்றியும் மூன்றாவது பாடத்தில் தொடக்க கால தமிழ் சமூகம் பண்பாடும் பற்றியும் பார்த்தோம்... தற்போது நான்காவது பாடத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே மூன்று நாடுகளில் பிறந்து மகான்களாக வளர்ந்த நால்வரை பார்க்க போகின்றோம்.... அவர்கள் முறையே சீனாவில் கன்பூசியஸ் மற்றும் லாவோட்சே..... தற்போதைய ஈரான் பிரதேசமான பாரசீகத்தில் ஜொராஸ்டிரியர்.... நம் இந்தியாவில் சமண மகாவீரர் பௌத்த புத்தர்.... ஆகியோர்களே....
அறிமுகம்....
கிமு ஆறாம் நூற்றாண்டில் தான் நகரமயமாக்களும் புதிய நாகரிக வளர்ச்சிகளும் மாற்றங்களும் பெற தொடங்கிய காலகட்டத்தில் தான் இந்த நால்வரும் தோன்றி புகழடைந்தனர்... இவர்களது நம்பிக்கைகளையும் தத்துவங்களையும் பின்பற்றி பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் பின்தொடர்ந்த போது அது சமயமாக மாறியது..
4.1. கிமு 6 நூற்றாண்டில் மதம் என்று பார்க்கும்போது... புதிய நாகரீக வாழ்க்கை தோன்றிய போது வர்த்தகத்தின் வளர்ச்சி நகரங்கள் உருவாக்குதல் உலகளாவிய மதங்களின் தோற்றம் நன்னடத்தை விருதுகள் உருவாகுதல் போன்றவை அரங்கேறின.... சீனாவில் கன்பூசியஸ் ஈரானின் ஜொராஸ்டிரியர் இந்தியாவின் மகாவீரர் புத்தர் ஆகியோர் காலகட்டத்தில் புகழ்பெற்றனர் ...
4.2. சீனாவில் கன்பூசியனிசம்....தாவோயிசமும்... என்ற தலைப்பில் சீனாவில் இரு மாபெரும் சிந்தனையாளர்கள் தோன்றினார்.. இவர்கள் சமூகத்திற்கான நல்ல நடத்தைகளையும் ஒழுக்க விதிகளையும் உருவாக்கினார்கள்.... பின்னர் இவர்கள் நினைவாக கோவில்கள் கட்டப்பட்டு இவர்களது போதித்த தத்துவங்கள் மதங்களாக மாற்றப்பட்டன..... இவர்களது நூல்கள் சீனாவில் மிகவும் மதிக்கப்பட்டன ஆளும் வர்க்கம் மட்டுமின்றி சாதாரண மக்கள் மீதும் செல்வாக்கு பெற தொடங்கினர்...
கன்பூசியஸ்.....கி.மு,.551...478....
கன்பூசியஸ் சீனாவின் சான்றும் மாகாணத்தில் பிறந்து வரலாறு கவிதை தத்துவம் இசை ஆகியவற்றை கற்றதோடு ஐந்து முக்கியமான படைப்புகளை எழுதினார்.. இந்த ஒவ்வொரு படைப்புகளும் சில ஒழுக்க நெறிகளை வலியுறுத்தியது... அதன்படி ஆவண நூல்... இசை பாடநூல்... மாற்றம் குறித்த நூல்... இளவேனிலும் இலையுதிர் காலமும் ...மற்றும் வரலாற்று நூல் .. இவரது ஐந்து முக்கிய கொள்கைகள்.... மனிதத் தன்மை... நேர்மை... நன்னடத்தை... மெய்யறிவு... நம்பகத்தன்மை... மெய்யறிவு குடும்பத்தில் இருந்து தான் வளரும் என்றார்... ஓர் ஒழுக்கமான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனிநபர் தான் சமூகத்தின் அடித்தளம் என்றார்....
தாவோயிசம்....
இவர் கண்பூசியஸ் விட 53 வயது மூத்தவர்... இவர்களது காலகட்டத்தில் அரசியல்வாதிகளின் முறைகேடுகள் ஊழல்கள் ஆகியவற்றால் மனம் விருத்த இவர் நாட்டை விட்டு வெளியேறி ஒரு உறைவிடத்தில் அமைதியாக வாழ்ந்தார்.... 5000 சொற்கள் கொண்ட ஒரு நூலை இரண்டு பக்கங்களாக எழுதினார்.... லாவோட்சேவின் போதனைகள்... மனிதர்களின் மகிழ்ச்சியின்மைக்கு காரணம் அவர்களது சுயநலம்.... நிறைவு செய்ய இயலாத அளவிற்கு ஆசைகளை மனிதர்களுக்கு ஏற்படுகிறது.... இயற்கையில் அனைத்துமே இயற்கை வழியிலேயே இயங்குகின்றன மனிதன் மட்டும் தான் இயற்கை விதிக்கு மாறாக நடக்கின்றான்.... மனிதர்களில் ஒரு சிலரே ஒழுங்கு படுத்திய வாழ்க்கை வாழ்கிறார்கள் மற்றவர்கள்... தங்கள் இஷ்டத்திற்கு வாழ்ந்து தங்களைத் தாங்களே மகிழ்ச்சி அற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்....
4.3 ஜொராஸ்டிரியனிசம்....
நாம் அறிந்த மிகப் பழமையான மதங்களில் ஒன்று.... இதனைத் தோற்றுவித்தவர் ஜொராஸ்டிரியர் தற்போதைய ஈரான் நாட்டைச் சேர்ந்த பாரசீக பேரரசின் அரச மதமாக இது இருந்தது.... எண்ணம் சொல் செயல் என அனைத்திலும் புனிதமாக இருப்பது தான் மிக உயரிய மதக் கோட்பாடு என்றார்... இவரது அஹூர மஸ்தாவிடம்.. ஒளி.. நல்ல மனம்.. நன்மை ..அரசாட்சி.. பக்தி ..ஆரோக்கியம்.. இறவாத்தன்மை ஆகிய தன்மைகள் உள்ளன என்றார்... இந்த மதத்தில் உயிர்ப்பலி உருவ வழிபாடு இல்லை.. கடவுளின் வடிவமாக தீயை வணங்குவது தான் உயர்ந்த வழிபாட்டு முறையாக கருதப்பட்டது... ஏழைகளுக்கு செய்ய முக்கியத்துவம் தரப்பட்டது...
4.4 இந்தியாவில் இரும்பு தொழில் நுட்பம் ஏற்படுத்திய தாக்கம்... இந்த தலைப்பில் கங்கை சமவெளி மக்கள் தங்களது உணவு தேவையை விட அதிகமான அளவில் பயிர்களை உற்பத்தி செய்ய அறிந்ததால் கங்கைச் சமவெளி மிகவும் வேகமாக அனைத்து துறைகளிலும் வளர்ந்தது... விவசாயம் இரும்புத் தொழில் மட்பாண்டங்கள் செய்தல் மர வேலைகள் தொழில் நெசவு போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலமாக சந்தைகள் இணைக்க தொடங்கின... நகர பரிமாற்ற மையங்கள் வளர்ச்சியடைந்தன.. அதன்படி பார்த்தால் வைஷாலி. சிராவஸ்தி ராஜகிரகம்.. கௌசாம்பி ..காசி.. முதலியன கங்கை சமவெளியின் முக்கிய வர்த்தக மையங்கள் ஆகும்...
4.5... மதம் - ரிக் வேத காலத்திற்கு பிந்தைய வேதகாலம்.... ரிக் வேதத்தை தொடர்ந்து யஜுர் சாமா அதர்வண வேதங்கள் எழுதப்பட்டன.ஆரண்யங்களும் உபநிடதங்களும் கங்கைச் சமவெளியில் தொகுக்கப்பட்டன...
4.6. இந்தியாவில் சமணமும் பௌத்தமும்... கங்கை சமவெளி விவசாயத்திற்கு கால்களை பயன்படுத்துவது... வேத சடங்குகள் யாருக்காக ஏராளமான கால்நடைகள் பலியிடப்பட்டது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது... மதச் சடங்குகள் விலங்குகள் பலியிடுதலை சமணரும் புத்தரும் எதிர்த்தனர்... அவர்களது துறவும் இறந்துள்ளும் மக்களுக்கு ஏற்புடையதாக இருந்தது.... இந்தியாவில் பிறந்து வளர்ந்த புத்த மதம் இன்று இந்தியாவின் அண்டை நாடுகளில் சக்கை போடு போடுகின்றது.... புத்தர் எந்த ஒரு நாட்டிற்கும் சென்றதும் இல்லை... ஆனால் சீனாவின் பாகஹியான் இவன் யுவான் சுவாங் மூலம் இன்று தென்கிழக்கு ஆசியா முழுவதும் பல நாடுகளின் அரச மதமாக விளங்குகின்றது... உருவ வழிபாட்டை எதிர்த்த புத்தருக்கு இந்த நாடுகளில் தங்கத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களில் வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன...அதனை ஏழாம் அறிவு போன்ற படங்கள் மற்றும் ஜாக்கிசான் போன்ற நடிகர்கள் படங்களில் நாம் காண முடியும்.... பட் இந்தியாவில் புத்த மதம் பின்பற்றும் மக்கள் சுமார் 5% கூட இல்லை.... சமண மதம் ஓரிரு இடங்களில் மட்டுமே இன்னும் துறவிகள் வாழ்கின்றனர்..
சமணம்.... மகாவீரர்... வருத்தமான மகாவீரர் வைசாலிக்கு அருகே உள்ள குந்த கிராமத்தில் பிறந்தார்... இவரது தாய் திரிசலை.... இவர் தனது இளமை காலத்தை ஓர் இளவரசராக கழித்தார்... பின்னர் யசோதா என்ற இளவரசையை மணந்தார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது ..மகாவீரர் தனது முப்பதாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவியானார்.. சுமார் 12 வருடங்கள் அவர் கடுமையான தவம் செய்து பல இடங்களுக்கு அலைந்து திரிந்து 13 வது வயதில் உரிய ஞானத்தை அடைந்து துறவறம் பூண்டார் ..அன்று முதல் இவர் ஜீனர்.. உலகை வென்றவர் என்று அழைக்கப்பட்டார்... சமணர்கள் தீர்த்தங்கரர்களின் பரம்பரையில் வந்தவர்கள்.. அதன்படி இவர் 24 வது அதாவது கடைசி தீர்த்தங்கரர் என்று மக்கள் கருதினார்கள்... ரிஷபர் என்பவர் தான் முதல் தீர்த்தங்கரர்... மகாவீரர் மகதம் விவேகம் அங்கம் ஆகிய பகுதிகளில் விரிவாக பயணம் செய்து உபதேசம் செய்தார்... இவரை பின்பற்றிய அரசர்கள் பிம்பிசாரர் மற்றும் அஜாத சத்ரு... 30 ஆண்டுகள் போதனை செய்த பிறகு 72 ஆவது வயதில் ராஜ கிரகத்திற்கு அருகில் பவபுரியில் காலமானார்... மகாவீரரின் போதனைகள்.... தன்னம்பிக்கை.. நல்லறிவு.. நன்னடத்தை... என மூன்று திரிரத்னங்கள் என்று அழைக்கப்பட்டது... இதில் நன்னடத்தை ஐந்து சூளுரைகளைக் கொண்டது.... அவைகள் முறையே எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது.. நேர்மையுடன் இருப்பது ..கருணை.. உண்மையுடன் இருப்பது... பிறருடைய உடமைகளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது... சமண மதம் பரவுதல்... தமது புதிய கொள்கையை பரப்புவதற்காக மகாவீரர் மடாலயங்களை நிறுவினார்... அங்கு வசதிகளை ஒதுக்கி வைத்து மிகக் கடுமையான எளிய வாழ்க்கை முறையை கொண்டிருந்த சமண துறவிகளை வட இந்தியாவில் இந்த புதிய மதத்திற்கு தனந்தர் வட இந்தியாவில் இந்த சமண மதத்திற்கு தனனந்தர் சந்திரகுப்த மவுரியர் காரவேளன் போன்ற அரசர்கள் ஆதரவு அளித்தனர்... கர்நாடகத்தின் மேற்கு பகுதியிலும் சமண மதம் பரவியது... மக்கள் அதிக செலவு பிடிக்கும் ஆடம்பர சடங்குகளையும் பலிகளையும் கைவிட்டனர்... சமணத்தில் பிளவு ஏற்பட்டது... பின்வரும் காலங்களில் அரசு ஆதரவு இன்மை அதன் கடுமையான கோட்பாடுகள் புத்த மதத்தின் வரவு இவைகள் சமண சமயத்தை வீழ்ச்சி அடைய செய்தது...
பௌத்த மதம்.. கௌதம புத்தர் பிறப்பும் வாழ்வும்... கௌதம புத்தர் இன்றைய நேபாள நாட்டிலுள்ள கபிலவஸ்துவில் பிறந்தார் அவருடைய தந்தை சாக்கியர்கள் எனும் ஒரு சத்திரிய இனக் குழுவின் தலைவராக இருந்தனர்.. இவரது இயற்பெயர் சித்தார்த்தர்.. இவருடைய தாயார் மாயாதேவி.. யசோதா என்ற இளவரசிய மணமுடித்து இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் பிறந்தான்.. ஒரு நாள் மாலை சித்தார்த்தர் நகர வளம் வந்த போது.. இவர் கண்ட காட்சிகளில்.. உறவினர்களால் கைவிடப்பட்ட ஒரு முதியவர் ..வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு நோயாளி.. இறந்த உடலை சுற்றி அழுத உறவினர்கள்.. ஆகியவற்றைக் கண்டார்.. இந்த காட்சிகளால் சித்தார்த்தர் மன வேதனை அடைந்தார் ..இதுவே உலக வாழ்க்கையை துறக்கவும்.. துன்பங்களுக்கான காரணத்தை தேடவும் அவரைத் தூண்டியது.. தனது முப்பதாவது வயதில் தனது மனைவி மற்றும் மகனைத் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி காட்டிற்குச் சென்றார் ..அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஒரு அரச மரத்தின் கீழ் அமர்ந்தார்.. தொடர்ந்து பல நாட்கள் அவர் அமைதி இருந்த போது மெய்யறிவு கிட்டியது. அதுவே அவருக்கு மெய்யறிவு அடைந்த இடம் ஆனது... இது தற்போது பீகாரில் உள்ள புத்தகயா ஆகும் ...இங்க தான் இவரது மகாபோதி கோவில் உள்ளது.. தனக்கு உயர்வு ஏற்பட்டதும் தமது அறிவை மக்களுக்கு அளிக்க புத்தர் முடிவு செய்து புத்தகயாவிலிருந்து வாரணாசி சென்று சாரணத்தில் தனது முதல் போதனையை தொடங்கினார்... அவரது உறவினர்கள் உட்பட பலர் அவருடைய சீடர்களாகினர்... 45 ஆண்டுகள் போதனை செய்த பிறகு தனது 80 வது வயதில் குஷி நகரத்தில்( அதாவது தற்போது உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் அருகே உள்ள)பரி நிர்வாணம் அடைந்தார்...
பௌத்தத்தின் போதனைகள்... நான்கு பெரும் உண்மைகள்.... உலகம் துன்பமும் துயரமும் நிறைந்தது... ஆசைதான் அனைத்திற்கும் காரணம்... ஆசையை அடக்குவதன் மூலம் துன்பத்தை போக்கலாம் .. ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் என் வழிப்பாதை அடையலாம் என்றார்... உண்மையான என்வழிப்பாதை நன்னம்பிக்கை... நல்ல ஆர்வம் ..நல்ல பேச்சு.. நல்ல செயல்... நல்ல வாழ்க்கை முறை ...நல்ல முயற்சி... நல்ல சிந்தனை... நல்ல தியானம்.... பௌத்தம் பரவுதல்.... தம்முடைய போதனைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரப்புவதற்காக புத்தர் பௌத்த சங்கத்தை நிறுவினார்.... இவரைப் பின்பற்றிய துறவிகள் பௌத்தப்பிக்குகள் என அழைக்கப்பட்டனர்... இவர்கள் மூலம் மத்திய ஆசியா இலங்கை திபர் தென்கிழக்கு ஆசியா சீனா மங்கோலியா கொரியா ஜப்பான் வியட்நாம் இந்தோனேசியா போன்ற போன்ற நாடுகளில் பௌத்த மதம் பரவியது... பௌத்த மதத்தில் பிளவு.... கனிஷ்கர் ஆட்சி காலத்தில் பௌத்தம் துறவி நாகார்ஜுனா என்பவர் பௌத்தத்தில் ஒரு சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்... இதனால் பௌத்த மதம் ஹீன யானம் மகாயானம் என இரு பிரிவுகளாக பிரிந்தது... ஹீன யானம் புத்தரின் அசல் வடிவ மதம்.. மகாயானம்... உருவ வழிபாடு கொண்ட பகுத்தறி கடவுளாக வழிபட்டது... பௌத்த மதம் வீழ்ச்சி... புத்த மதம் பாலி மொழியில் பிரச்சாரம் செய்யப்பட்டதால் மக்களுக்கு புரிந்து கொள்ள கடினமாக இருந்தது... மதம் இரண்டாகப் பிரிந்து உருவ வழிபாடு இருந்ததால் மக்கள் வெறுக்கத் தொடங்கினர்... குத்தகளின் காலத்தில் அரசர்களின் ஆதரவை இழந்தது.. துருக்கிகளின் படையெடுப்பால் கிட்டத்தட்ட புத்த மதம் அழிந்து விட்டது....
4.7. பிற அவைதீக பிரிவுகள்.. பௌத்தமும் சமணமும் தோன்றிய காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு பிரிவும் தோன்றியது அதனை தோற்றுவித்தவர் மக்களை கோசலர் என்பவர் இவர் மகாவீரரின் நண்பர்... ஆசிவகர்கள் தென்னிந்தியாவில் சிறிய எண்ணிக்கையில் இருந்தார்கள் சோழர்கள் காலத்தில் இவர்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டது.. புத்தர்களின் இலக்கியமான மணிமேகலை சமணர்களின் இலக்கிய நூலான நீலகேசி ஆகியவற்றில் ஆசீவக தத்துவங்கள் பற்றிய செய்திகள் உள்ளன... கண சங்கங்கள்... மகாவீரர் புத்தர் ஆகியோர் காலத்தில் முடியாட்சிகள் கன சங்கங்கள் எனப்படும் குலக்குழு ஆட்சி என்ற இரு வேறுபட்ட அரசு வடிவங்கள் இருந்தன....
4.8 அரசுகள் உருவாக்கம்.... கிமு ஆறாம் நூற்றாண்டில் தான் குழு ஆட்சிகள் குடித்தலமை ஆட்சிகள் அரசாட்சிகள் ஆகியவை உருவாகின.... முடியாட்சிகள் உருவாகி அரசர்களுக்கு அதிகாரம் அதிக அளவில் இருந்தது... முதல் மகத பேரரசு உருவானது..... முதல் மகத அரசர் பிம்பிசாரர்... இவரது செல்வாக்கு கங்கைச் சமவெளி பகுதிகளில் அதிக அளவில் இருந்தது... இவரது முதல்வர் அஜாதசத சத்ரு தனது தந்தையை கொன்று விட்டு அரியணை ஏறினார்... தனது தந்தையைப் போலவே மகதப் பேரரசை விரிவு படுத்தினார்... அஜாதசத்திற்கு பின் ஐந்து அரசர்கள் ஆட்சி செய்தனர்.... ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு சிசுநாக வம்சம் மகாபத்மநந்தரிடம் ஆட்சியை இழந்தது,.. இவர்தான் நந்த வம்சத்தை தோற்றுவித்தனர்....
4.9. மௌரியப் பேரரசு அரசும் சமூகமும்.. நந்த வம்சத்தை வீழ்த்த சந்திரகுப்தர் ஓர் அரசை அமைக்கும் நோக்கில் படைகளை திரட்டி நல்வாய்ப்புக்காக காத்திருந்த வேளையில் அலெக்சாண்டரின் படையெடுப்பை மக்களின் துணையோடு கைப்பற்றி.... பின்னர் பாடலிபுத்திரம் வந்து நந்த அரசரை தோற்கடித்து புதிய மௌரிய வம்சம் உருவானது.... கங்கை சமவெளியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திய பிறகு அலெக்ஸாண்டரின் மறைவிற்குப்பின் சந்திரகுப்தர் தனது கவனத்தை வடமேற்கு பக்கமான ஆப்கானிஸ்தான்.. பலுஜிஸ்தான்.. மாக்ரான் ஆகிய பகுதிகளை எந்தவித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றினார்.. தனது இறுதி காலத்தில் சமண மதத்தை பின்பற்றி... பின்னர் தனது மகன் பிந்துசாரருக்காக பதவி விலகினார்.. பிந்துசாரர் தனது ஆட்சியை கர்நாடக வரை விரிவு படுத்தினார்... இவருக்குப்பின் அசோகர் அரசர் ஆனார்... இவர் தனது பேரரசை விரிவுபடுத்தும் நோக்கில் கலிங்கத்தின் மீது படையெடுத்து... பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுத்தி கலிங்கத்தை தோற்கடித்தார்... இந்தக்கலிங்கப் போர் அவரை மனம் வருந்தச் செய்து புத்த மதத்தை தழுவினார்... அதனைப் பரப்பும் நோக்கில் புத்த மத மடாலயங்கள்... புத்த மத கருத்துக்களை பாறைகளில் வெட்டுவது... போன்ற பணிகள் செய்ததோடு தனது மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரன் அவர்களை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தை பரவச் செய்தார்.... தனது கலிங்க கல்வெட்டில் போரில் நடந்த படுகொலை.. அதனால் அடைந்த வேதனைகளை பதிவு செய்தார்... அலகாபாத்தில் உள்ள அசோகர் கார்ட்டூன் இன்று நான்கு சிங்கங்களை கொண்ட நமது தேசிய சின்னம் சாரணாத்தில் உள்ள அசோகர் துணை பிரதிபலிக்கும் விதமாகவே தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவு கொள்வோம்... மௌரியர்களின் ஆட்சி காலம்.... ஒரு பெரிய நிலையான ராணுவத்தை அமைத்து சிறந்த நிர்வாகத்தை முன்னெடுத்துச் சென்றனர்.... பேரரசு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது அவற்றை ஆளுநர்கள் ஆட்சி செய்தார்கள் பெரும்பாலும் இளவரசர்களை ஆளுநராக செயல்பட்டனர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நகர நிர்வாகம் இருந்தது... இவர்கள் மேற்கொண்ட பணிகள் வெளிநாட்டினரை கவனித்துக் கொள்தல்.. குடிமக்களின் பிறப்பு இறப்பு பதிவு செய்தல். வணிகத்தை கவனித்துக் கொள்தல் .. உற்பத்தி தொழில்களை கவனித்துக் கொள்தல்... சுங்க கலால் வரி வசூலித்தல்.... நகர நிர்வாகத்தை போலவே ராணுவ துறையும் 30 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட்டது... கிராம மட்டத்தில் எல்லைகளை பாதுகாப்பது நிலம் குறித்த ஆவணங்களை பராமரிப்பது மக்கள் மற்றும் கால்நடை எண்ணிக்கையை கணக்கெடுப்பது போன்ற பணிகளை கிராமணி என்ற அதிகாரி செய்து வந்தார்... எல்லா முக்கிய ஊர்களிலும் நகரங்களிலும் நீதி வழங்க முறையான நீதிமன்றங்கள் இருந்தன... குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருந்தது.. புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன கிராம பொருளாதாரம் மேம்பாடு அடைந்தது.. துணிகள் உற்பத்தி மையங்கள் உருவாகின... ஈரான் மெசபடோமியா சீனா போன்ற நாடுகளுடன் வணிகம் பெருகியது கௌசாம்பி பிட்டா வைஷாலி ராஜகிரகம் போன்ற புதிய நகரங்கள் தோன்றின... கல்வி மையங்கள் என்று பார்க்கும்போது மடங்களும் கோவில்களும் கல்வி கற்கும் பணியை செய்தன... நாளந்தா பல்கலைக்கழகம் மகதர்கள் காலத்தில் தான் கட்டப்பட்டது... தற்போது கூட பீகாரின் நாளந்தா பல்கலைக்கழகம் மத்திய அரசால் புனரமைக்கப்படுகின்றது... இங்கு பல வெளிநாட்டினர் கல்வி கற்கவும் புத்த மதத்தை அறிந்து கொள்ளவும் வந்து படித்தனர்... இலக்கணம் மருத்துவம் இலக்கியங்கள் தத்துவம் வானவியல் போன்றவை கற்றுத் தரப்பட்டன போர்களையும் கற்றுத் தரப்பட்டது மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்படவில்லை... மாணவர்களுக்கு இலவச தங்குமிடமும் உணவும் தரப்பட்டன....
0 கருத்துகள்