🎩🎩02.06.2025 பள்ளி துவங்கும் நாள் அன்று செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
👉2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்களின் செயல்முறைகள் வெளியீடு.
👉பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்களுக்கு விரிவான அறிவுரைகள் வழங்குதல் - DSE & DEE Proceedings வெளியீடு.
🎩🎩கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.
செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற நெறிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🎩🎩ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது .
👉6,7,8 மாணவர்களுக்கு திறன் என்ற பெயரில் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது.
👉ஜூன் மாதம் இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.
👉முதல் நாள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரைக்கும்.
👉இரண்டாம் நாள் 6,7,8 ஆசிரியர்கள் திறன் பயிற்சி புத்தகம் சார்பாக பயிற்சியும் நடைபெற உள்ளது.
👉1-3 பயிற்சி காலையிலும்.
4-5 பயிற்சி மாலையிலும் நடைபெற உள்ளது எனினும் 1-5 ஆசிரியர்கள்* அனைவருக்கும் ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடைபெறும்.
🎩🎩தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம்.
உயர்கல்வித் துறை சார்பில், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம், ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கம்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கல்லூரிகளை துவக்கி வைத்தார்.
இந்த 11 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 🎩🎩G.O.NO.114 பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிடமாறுதல் சார்ந்து அரசாணை வெளியீடு.
👉மெட்ரிக் பள்ளி இயக்குநர் மதிப்புமிகு முனைவர் திரு .முத்துபழனிச்சாமி அவர்கள் ஆசிரியர் தேர்வுவாரியத்திற்கும்
மெட்ரிக் பள்ளி இயக்குனராக மதிப்புமிகு திரு.குப்புசாமி அவர்களும்
தமிழ்நாடு பாடநூல்கழக இயக்குநராக மதிப்புமிகு உஷாராணி அவர்களும்
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.🎩🎩கால்நடை மருத்துவராக விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம்.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்கள், நாமக்கல் மற்றும் நெல்லையில் உள்ள கல்லூரிகளில் 100 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
மாநில ஒதுக்கீட்டில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
🎩🎩நீட் முதுநிலை தேர்வு: விரைவில் உச்சநீதிமன்றம் விசாரணை
நீட் முதுநிலை தேர்வை 2 ஷிப்டுகளில் நடத்த உத்தரவிடுவதற்கு எதிரான மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது
முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் நடப்பு வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.
நீட் முதுநிலை தேர்வு ஜூன் 15ம் தேதி 2 ஷிப்டுகளாக நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது
🎩🎩தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணையை
கோடை கால விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
🎩🎩பாகிஸ்தானில் புயல் மழை - 20 பேர் உயிரிழப்பு:
பாகிஸ்தான் புழுதி புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிப்பு. 5 வீடுகள் இடிந்து விழுந்ததில் 20 பேர் உயிரிழப்பு.
🎩🎩தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறுகிறது
வைகோ, சண்முகம், வில்சன், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகிய 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது
🎩🎩தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
🎩🎩குட்கா, பான் மசாலா தடை - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை 2026 மே மாதம் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை 2026 மே மாதம் 23-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
🎩🎩தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவின் முதற்கட்ட நிகழ்வு மே 30ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக அரியலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து கௌரவிக்கிறார் விஜய்.
🎩🎩நாடு முழுவதும் 1009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் டெல்லியில் மட்டும் 104 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் அங்கு 99 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
🎩🎩ராஜஸ்தானில் மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் ஹோட்டலுக்கு சென்று காதலிகளுடன் பொழுதைக் கழித்த சிறைக் கைதிகள்.
சிறை கைதிகளுக்கு உடந்தையாக இருந்த 5 கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 13 பேர் கைது.
🎩🎩"நீயின்றி நானுமில்லை... என் காதல் பொய்யும் இல்லை".
சீனா - மூளையில் கட்டி வளர்ந்ததால், கோமா நிலைக்கு சென்று மரண படுக்கையில் இருந்த மனைவியை, தன் காதலால் மீட்டு கொண்டு வந்துள்ளார் டெங் என்ற நபர்.
இறுதியாக ஒருமுறை மகளையும், கணவரையும் பார்க்கும் வீடியோவை அவரின் குடும்பத்தினர் இணையத்தில் பதிவிட அது வைரலாகி பலரும் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர்.
பின் தனது வேலையை விட்டுவிட்டு மனைவியை நன்கு கவனித்து பாடல்கள் பாடி, உடன் நடந்து கோமாவில் இருந்த மனைவியை மீட்டுள்ளார்.
🎩🎩ஒரே நாளில் 9 குழந்தைகளை பறிகொடுத்த பெண் மருத்துவர்.
காசாவில் உள்ள பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலால், 9 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சோகம்.
10 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே உயிர் தப்பியுள்ளது.
கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
சம்பவ நேரத்தில் மருத்துவர் பணிக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
🎩🎩ஹெல்மெட் அணிந்தால் தங்கம்.
தஞ்சை - ஆற்றுப் பாலம் பகுதியில் ஹெல்மெட் அணிந்து சென்ற ஹரிணி என்பவருக்கு குலுக்கல் முறையில் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு.
மேலும் 15 பெண்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
பெண்கள் மத்தியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது தொண்டு நிறுவனம்.
🎩🎩வடமாநில ATM கொள்ளையர்கள் மூவர் கைது.
சென்னை திருவான்மியூரில் ATM இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து, நூதன முறையில் பணம் திருட முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்..
பணம் வெளியே வராததால் இயந்திரக் கோளாறு என நினைத்து வாடிக்கையாளர் சென்ற பிறகு, அந்த பணத்தை வந்து எடுத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தர்.
-சிசிடிவி அடிப்படையில் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு கைது.
🎩🎩ஓர் உயிரைக் காப்பாற்றிய வழிப்போக்கன்.
தேனி - 40 பயணிகளுடன் சென்றபோது அரசுப் பேருந்து ஓட்டுநர் விஜயனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு.
அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் உடனே பேருந்தை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மயக்கமடைவதை அவ்வழியாக சென்றபோது கவனித்து, துரிதமாக செயல்பட்டு அவரின் உயிரைக் காப்பாற்றிய செந்திலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு.
🎩🎩உணவு வாங்க முண்டியடிக்கும் அவலம்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு.
77 சதவிகித பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
-காசாவில் உணவுக்காக பரிதவிக்கும் பாலஸ்தீனர்கள்.
🎩🎩"வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை"
"கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கி உள்ளனர் என்ற தகவல் தவறானது"
வெள்ளியங்கிரி மேலே ஏறிய பக்தர்கள் மெதுவாக இறங்கி கொண்டுள்ளனர்
"வெள்ளியங்கிரி மலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது"
ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது
வனத்துறை அறிவிப்பு
🎩🎩நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: உச்சநீதிமன்றம் மறுப்பு
கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை ஆர்டிஐ சட்டத்தில் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
🎩🎩நாடு முழுவதும் 1009 பேருக்கு கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல்
நாடு முழுவதும் 1009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் டெல்லியில் மட்டும் 104 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் அங்கு 99 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
🎩🎩ரூ.53,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்- பிரதமர் மோடி தொடங்கி வைப்பு
குஜராத்தில் ரூ.53,000 கோடி மதிப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தாஹோத்தில் 9,000 குதிரைத் திறன் கொண்ட ரயில் எஞ்சினை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ரயில் எஞ்சினை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
🎩🎩கடலில் கவிழ்ந்த கப்பல்- பேரிடர் மீட்புக் குழு விரைவு
கொச்சி அருகே கடலில் கவிழ்ந்த கப்பலை மீட்க அரக்கோணம் பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 பேர் கொண்ட குழு கொல்லம் சென்றது. கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கொல்லம் அருகே கரை ஒதுங்கிய நிலையில் மீட்பு பணிக்காக விரைந்து வந்தனர்.
🎩🎩நகர்ப்புற நிதிப் பத்திரங்களை பட்டியலிடும் விழா
நகர்ப்புற நிதிப் பத்திரங்களை பட்டியலிடும் விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தேசிய பங்குச் சந்தையில் ரூ.200 கோடி மதிப்பு நகர்ப்புற நிதிப் பத்திரங்களை பட்டியலிடும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவை மணி ஒலித்து முதல்வர் தொடங்கி வைத்தார்.
🎩🎩ஜூன் 2 தேதி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
🎩🎩எங்கே பாஜக - திமுக கூட்டணி அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் சந்திப்பு பற்றி
எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார்
திருமாவளவன்
🎩🎩உடல் தகுதியை கருத்தில் கொண்டு ஐபிஎல்-ல் திரும்ப விளையாட வரலாமா? என்பது குறித்து முடிவு செய்வேன்: ஓய்வு குறித்து தோனி பதில்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்
&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
0 கருத்துகள்