Ad Code

Ticker

6/recent/ticker-posts

இன்றைய செய்திகள் 26.05.2025(திங்கட்கிழமை)

 


⛑️⛑️திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் படை என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஆறு பேர் மிசா சட்டத்தின் மூலம் சிறை சென்றனர் . அவர்களில் மூத்த முன்னோடி ஆசிரியர் மிசா சரவணமுத்து அவர்களை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

⛑️⛑️ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசு ஊழியர் விபரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.

(நாளிதழ் செய்தி)

⛑️⛑️நீண்ட நாள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவாக முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

⛑️⛑️முதல் பட்டதாரி, ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்- தமிழக அரசு உத்தரவு.

⛑️⛑️கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண்கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 22 பேர் கல்வி சுற்றுலா ஜெர்மனி பயணம் பள்ளி கல்வித்துறை தகவல். (பத்திரிக்கைச் செய்தி)

⛑️⛑️மத்திய அரசின் UPSC வேலை வாய்ப்பு 2026 - தேர்வு பட்டியல் அட்டவணை வெளியீடு.

⛑️⛑️ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு.

⛑️⛑️ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான முதல் நிலை தேர்வு; தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதினர்: இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றனர்.

⛑️⛑️பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம்!

👉பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

👉பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் ஆன்லைனில் விண்ணப்பித் துள்ளனர்.

👉பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.18-வது நாளான சனிக்கிழமை  மாலை 6.60 மணி நிலவரப்படி 2 லட்சத்து 40,754 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 73,005 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 30,262 பேர் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்ப பதிவை முழுமை செய்துவிட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

👉தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி நாள் ஆகும். பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தி ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பில் மட்டுமின்றி கலை அறிவியல் படிப்புகளிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தி மே 27ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

⛑️⛑️யுபிஎஸ்சி சர்ச்சை - தமிழிசை விளக்கம்.

யுபிஎஸ்சி தேர்வு கேள்வியில் பெரியார் பெயருடன் சாதி பெயர் சேர்ப்பு, "சாதி பெயரை குறிப்பிட்டது தவறு.

-அதை நான் ஏற்கவில்லை".

-பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

⛑️⛑️கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.இணையதளம் வாயிலாக ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

⛑️⛑️அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே.28ம் தேதி தீர்ப்பு.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே.28ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்.

கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

⛑️⛑️சென்னை மண்ணடியில் UPSC தேர்வு நடைபெற்ற மையத்தில் இந்தி மொழியில் ஒட்டப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை மண்ணடியில் மத்திய அரசின் UPSC தேர்வு நடைபெற்ற மையத்தில் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்தி மொழியில் ஒட்டப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி.

⛑️⛑️யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 1929 செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். யு.பி.எஸ்.சி. தேர்வில்  கவர்னரின் அதிகாரங்கள் குறித்து 2 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

⛑️⛑️உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா ஜப்பானை முந்தி முன்னேறி உள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

⛑️⛑️உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடானது இந்தியா.

உலகின் 4 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா ஆகிவிட்டது - சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி இந்தியா தற்போது ஜப்பானை முந்திவிட்டது.

இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகி விட்டது 

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம்

⛑️⛑️வெள்ளியங்கிரி மலை ஏறியவர்களில் 2 பேர் நேற்று உயிரிழந்துள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.7வது மலையில் பெண் ஒருவரும், 5வது மலையில் ஆண் ஒருவரும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

⛑️⛑️மதுரை பொதுக்குழுவுக்கு நான் ரெடியாகிவிட்டேன்

 தேர்தல் களமும் மக்கள் பணியும் இணைந்துள்ள நிலையில், உடன்பிறப்புகளான உங்களை ஜூன் 1 அன்று மதுரையில் நடைபெறும் கழகப் பொதுக்குழுவில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

திராவிடத்தின் அடுத்த தலைமுறை பாய்ச்சலுக்கும், தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஆர்த்தெழும் இயக்கமான தி.மு.கழகம் எவருக்கும் எப்போதும் அடிபணிவதில்லை என்பதை உணர்த்தி, எதிரிகளின் எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கும் நம் கழகத்தின் நிலைப்பாட்டை உரக்க வெளிப்படுத்தவும் கூடல் நகரில் பொதுக்குழு கூடுகிறது.

 உடன்பிறப்புகளை எதிர்நோக்கி மதுரை பொதுக்குழுவுக்கு உங்களில் ஒருவனான நான் ரெடியாகிவிட்டேன். நீங்களும்தானே?

திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

⛑️⛑️சர்க்கரை உட்கொள்வதால் பாதிப்பு 

சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு.

அதிக சர்க்கரை உட்கொள்வதால் உண்டாகும் ஆரோக்கிய கேடு குறித்து பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.

பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் சர்க்கரை அளவுக்கான பலகைகள் வைக்கப்படுகின்றன.

குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவை கண்காணிக்க நடவடிக்கை தேவை பிரதமர் மோடி

⛑️⛑️பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்; நாடு தேசபக்தியில் மூழ்கியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியேந்தி பேரணிகள் நடைபெற்றன.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை 

மன் கீ பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி

⛑️⛑️பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா(25) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

சனிக்கிழமை இரவு பணிக்கு வந்த நிலையில்,நேற்று  காலையில் தற்கொலை; மன உளைச்சலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறை விசாரணை.

⛑️⛑️ஒரு பூத்தில் இரண்டு நாற்காலிகள்

வாக்குச்சாவடியின் வாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு பிறகு வேட்பாளர்களின் தேர்தல் பூத் இருக்க வேண்டும் 

ஒரு பூத்தில் இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருக்க வேண்டும்

வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பூத் அமைப்பது குறித்து புதிய விதிகளை வெளியீடு

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

⛑️⛑️ரெட் அலார்ட்டை தீவிரமாக எடுத்துகொள்ளுங்கள் .தடைகளை யாரும் மீற வேண்டாம் .பல்வேறு காரணக்களை கவனித்துதான் பல இடங்களில் தடை விதித்துள்ளோம் .சுற்றுலா பயணிகள் கவனமாக இருங்கள் .

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சமி பவ்யா தன்னிரு

⛑️⛑️குடும்பத்தின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் தேஜ் பிரதாப் செயல்படுவதால் நீக்கம்.

மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கினார்

குடும்ப பாரம்பரிய மரபுகளை மீறுவதால், குடும்பத்தில் இருந்து தேஜ் பிரதாப்பை விலக்கி வைக்கிறேன்.

லாலு பிரசாத் யாதவ்

⛑️⛑️வஞ்சிக்கும் பிரதமரை புறக்கணிக்கும் தமிழ்நாடு

பிரதமர் மோடி தன் பேச்சுகளில் திருக்குறளை குறிப்பிட்டு வந்தாலும், அவரது நடவடிக்கைகள் பலவும் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் வஞ்சிப்பதாகவே அமைந்துள்ளது. அதனால்தான், தமிழ் மக்களும், தமிழ்நாடும் அவரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

⛑️⛑️IPL போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை, ஆனால் நான் திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லைஇன்னும் நிறைய நேரமிருக்கிறது யோசித்து முடிவெடுப்பேன்

எம்.எஸ்.தோனி

⛑️⛑️ஐபிஎல் - தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னைடாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது231 ரன்கள் இலக்கை விரட்டிய குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்

⛑️⛑️தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு மறைவெய்தியதையொட்டி, அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர்  ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

⛑️⛑️கோவையில் அடாது மழை பெய்தாலும், இடைவிடாது இசை மழை பொழியும் - ஜூன் 7ஆம் தேதி கோவைப்புதூரில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி குறித்து வீடியோ வெளியிட்ட இசைஞானி இளையராஜா

⛑️⛑️திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் திருநங்கையர் வாழ்வில் ஏற்றம் காண்கின்றனர் என தமிழ்நாடு அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

திருநங்கையர்களுக்காக நல வாரியம், சிறப்பு விருது, சுயதொழில் மானியம், கல்விக் கனவு திட்டம் முதலிய சிறப்பான திட்டங்களால் வாழ்வில் திருநங்கையர்கள் ஏற்றம் காண்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என கூறியுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.   என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்,                                                        மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

கருத்துரையிடுக

0 கருத்துகள்