Ad Code

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் அலகு - 1 இந்திய அரசியலமைப்பு lesson plan

 வகுப்பு:10


பகுதி : குடிமையியல்

அலகு - 1 இந்திய அரசியலமைப்பு

அலகின் தன்மை : மை சிந்தும் வகை

கற்றல் வகை : குழு கற்றல்

கற்பித்தல் உபகரணங்கள் :
அரசியலமைப்பு சட்ட உருவாக்க சிற்பிகளின் படங்கள், Ppt,qr code,Chart, இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்பு அட்டை

உட்பாடத் தலைப்புகள் : 
  • அரசியலமைப்பு அவசியம்
  • இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
  • அடிப்படை உரிமை 
  • அடிப்படை கடமை
  • மத்திய மாநில உறவுகள்
  • அவசரகால ஏற்பாடுகள்
  •  அரசமைப்புச் சட்டத் திருத்தம்

கற்றல் விளைவுகள் : 

SST 1008 - முக்கிய சொற்களான கூட்டாட்சி பன்முகத்தன்மை, மதம் மற்றும் அரசியல் கட்சி போன்றவற்றை வரையறுத்தல். 

 SST 1043 - பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களாட்சிக்கும் இடையிலான தொடர்பை விளக்குதல்.

SST 907 உலகை மாற்றிய சில சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளின் பெயர்கள். இடங்கள் மற்றும் ஆண்டுகளை நினைவுகூர்தல்.

பாட அறிமுகம் :
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியது யார்? எதற்காக இது உருவாக்கப்பட்டது .அதன் அடிப்படைக் கருத்துக்கள் என்ன? என்பது பற்றி மாணவர்களிடம் விவாதித்து பாட அறிமுகம் செய்தல்.

கருத்து வரைபடம் : 

 


கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 

ஆசிரியர் செயல்பாடு

  • இந்திய அரசியலமைப்பு சிறப்பு கூறுகளை விளக்குதல்.
  • அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் அட்டவணைப்படுத்தி விளக்குதல்.
  • கருத்து வரைபடத்தில் உள்ள விவரங்களை தொகுத்து விரித்தல்.

 

மாணவர் செயல்பாடு

  • இந்திய அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றவர்கள் பங்களிப்பை ஒப்படைப்பாக கொடுத்தல்.
  • அடிப்படை உரிமை மற்றும் அடிப்படை கடமைகளை முழு செயல்பாடாக வாசித்தல்.
வலுவூட்டல் செயல்பாடுகள்
  • க்யூ ஆர் கோடு மூலம் வீடியோக்களை காட்டுதல்.
  • குழு விவாதம் நடத்துதல்.
  • வினாடி வினா நடத்துதல்.
மதிப்பீடு

LOT : இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?

MOT : ஒரு நாட்டின் அடிப்படை கொள்கைகள் சார்ந்த சட்டம் எது?

HOT : உன் வகுப்புத் தோழனின் ரம்ஜான் விருந்திற்கு செல்கின்றாய் அப்போது நீ எந்த உரிமையை பயன்படுத்துகிறாய்?

குறைதீர் கற்றல் 
  • மெல்ல மலரும் மாணவர்களுக்கு மீத்திறன்  மாணவர்கள் பாடப் பொருளை மீளக் கற்பித்தல்.
எழுதுதல் மற்றும் தொடர் பணி

 இந்திய குடிமகனாக இருந்து தேசிய சின்னங்களை எவ்வாறு மதிக்க கற்றுக் கொள்ளலாம் என எழுதி வரச் சொல்லுதல்.



1) முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்- lesson plan 

கருத்துரையிடுக

0 கருத்துகள்