Ad Code

Ticker

6/recent/ticker-posts

கல்வெட்டுகளில் தண்ணீர் பற்றிய செய்திகள்.

 


மிழ்நாடு நில நடுக்கோட்டை ஒட்டிய வெப்ப மண்டல பகுதியை சேர்ந்ததாகும். எனவே நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ் சமூகத்தில் நிறையவே காணப்படுவது வியப்புக்குரியது . இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என இரண்டு பண்புகள் நீருக்கு உண்டு. எனவே தமிழ் என்னும் மொழிப் பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள் இனிமேல் நேர்மையும் தமிழ் எனல் ஆகும் என குறிப்பிட்டனர். குளிர்ச்சியினை உடையது என்பதால் நீரைத் தண்ணீர் என்று தமிழர்கள் வழங்கி வருகின்றனர்.  உடலை தூய்மை செய்வதனை குளித்தல் உடலை குளிர்ச்சி செய்தல் என்றும் குறித்தனர். இது வெப்ப மண்டலத்துக்கு மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடு ஆகும்.      


 நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை அமிழ்தம் என்றே வள்ளுவர் குறிப்பிடுவார். நீர் நிலைகளுக்கு தமிழர்கள் வழங்கி வந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளிப்பதற்கு பயன்படும் நீர்நிலை குளம் என்பதாகும். உண்பதற்கு பயன்படும் நீர்நிலை ஊரணி எனவும் ஏர் தொழிலுக்கு பயன்படும் நீர்நிலை ஏறி என்றும் வேறு வகையான மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ஏர்தல் என்றும் கண் ஆறுகள் உடையது கண்மாய் என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.                


   ழைக் காடுகளில் உள்ள சுனைகளில் சூர் மகள் அற மகள் என்னும் அடங்குகள் அதாவது மோகினிகள் வாழ்கின்றனர் என்பது பழைய நம்பிக்கை. அதுபோலவே தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கு நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பது ஒரு நம்பிக்கையாகும். விழாக் காலங்களில் சாமி ஆடுபவர்களின் தலையில் ஏற்படும் நீர் கரகத்துக்குள் சாமியின் அருளாற்றல் கலந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.          


நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாது நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும் நிலத்தால் திரிந்து போன நீரின் சுவை யை மேம்படுத்த தமிழர்கள் நெல்லினை ஒரு மருந்தாக பயன்படுத்தினர். கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களை போட்டு வைப்பதும் ஊரணி கரைகளிலே நெல்லி மரங்களை நட்டு வைத்து அதற்கு நெல்லிக்காய் ஊறுனி என்று பெயரிடுவதும் தமிழ் மக்களின் வழக்கம். நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவை தெரியும் இச்செய்தி சங்க இலக்கியத்தில் ஒரு உவமையாகவும் எழுத்தாளப்பட்டுள்ளது.              



   நீரின் தூய்மையினை பேணுவதில் தமிழர்கள் கருத்து செலுத்தியுள்ளனர். நீருக்குள் மனித கழிவு இடுதல் பெரும் பாவமாக கருதப்படுகிறது           நீருக்குள் ஜலபானம் செய்த பாவத்தில் போக கடாவராகவும் என்று ஆவணங்கள் இதனை குறிக்கின்றன. சங்கரன்கோவிலுக்கு வடக்கே பனையூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் இறைவனுக்கு அக் கோயில் கல்வெட்டுகளில் நன்னீர் துறையுடைய நாயனார் என்ற பெயர் காணப்படுகிறது. இயற்கையின் பேராற்றலில் ஆரியர் நெருப்பினை முதன்மைப்படுத்தியது போலவே திராவிடர் நீரினை முதன்மைப்படுத்தினர் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளை போலவே தமிழர்களின் வீட்டு சடங்குகளிலும் நீர் சிறப்பிடம் பெறுகின்றது செம்பு நீரில் அல்லது குவளை நீரின் மேல் பூக்களையோ பூ இதழ்களையோ இட்டு வழிபடுவது எல்லா சாதியாரிடமும் காணப்படும் பழக்கம். நெடுஞ்சாலைகளில் கோடை காலத்தில் நீர் பந்தல் அமைப்பது ஒரு அரசியலாக கருதப்பட்டது. சோழர் காலத்து கல்வெட்டு ஒன்று தண்ணீர் பந்தலில் தண்ணீர் இறைத்து தருபவனுக்கும் அதற்கு களமிடும் குயவனுக்கும் தண்ணீர் ஊற்றி தருபவனுக்கும் மானியம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது. இயற்கை அல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்டையோடு இறப்பது இயல்பாகும்.எனவே அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர் பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம். மொகஞ்சதாரோவில் அகழாய்வில் காணப்பட்ட படிக்கட்டுகளுடன் கூடிய குளம் நீர் சடங்குகள் செய்வதற்குரிய இடமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நீராடுவதே ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருதப்பட்டதற்கு பரிபாடல் திருப்பாவை போன்ற இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்புகளும் தமிழர்களிடத்தே உண்டு. நீரடித்து நீர் விலகாது.நீர் மேல் எழுத்து. தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்.என்பவைஅவற்றுள் சில   .   


 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் துறைத் தலைவர் முனைவர் தோ. பரமசிவம் அவர்கள் எழுதிய அறியப்படாத தமிழகம் என்ற புத்தகத்திலிருந்து... 

தொகுப்பு                          

 மூ.செல்வகுமார் 

பட்டதாரி ஆசிரியர் வரலாற்று துறை  

அரசு உயர்நிலைப்பள்ளி

 புதுப்பாளையம் 

பண்ருட்டி வட்டம் 

கடலூர் மாவட்டம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்