Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் உப்பு தொடர்பான தகவல்கள்

 





 ழந்தமிழ் நாட்டின் மிகப்பெரிய சந்தைக்குரிய உற்பத்தி பொருளாக உப்பு விளங்கி இருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச்செல்லும் உமணர்  என்ற வணிகர்களை பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலை தமிழ் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம், என்று வழங்கப்பட்டுள்ளன. சோழ,பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள்.


 டாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் காலத்தில் கி.பி. 1268 இல் அதும்பூர் என்னும் ஜனநாத பேரளம், செல்லூர் என்னும் அனபாய சோழப் பேரளம், இடையன்குழி என்னும் ராஜேந்திர சோழ பேரளம், கூடலூர் என்னும் ராஜநாராயண பே  ரளம்,திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம் வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை கோமகன் பேரளம், சூரை காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து உப்பு விற்கையில் ஒரு உரை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்து திருவதிகை திரு. வீராட்டனேஸ்வரர் கோயில் திருவமுது படிக்கும் கோயில் சீரமைப்பிற்கும்    நிவந்தமாக  அளிக்கப்பட்டிருக்கின்றன என்று தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் எடுத்துக்காட்டுகிறார்.                


போக்குவரத்து வசதிகள் பெருகாத காலத்தில் உப்பின் விலையும்  அதிகமாகவே இருந்திருக்கிறது. நெல்லின் நேரே பெண்கள் உப்பு என்று பெண்ணொருத்தி விலை கூறி உப்பு விற்பனையை சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம்.சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது. இன்றைய பொருளாதாரக் கணக்கில் உப்பின் விலை இப்போது உள்ளதை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்ததாக கொள்ளலாம்.உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்டதனால் மறவை எனப்படும் மரச்சட்டியிலும் கல் மரவை எனப்படும் மண் சட்டியிலும் வீடுகளில் உப்பு எடுத்து வைக்கப்படுகிறது. இப்ப பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றன .           


மிழ்நாட்டின் சமூக படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்குகிறது.ஆக் கிய சோற்றோடு உப்பை சேர்த்து சாப்பிடுவது ஒரு வழக்கமாகும்.சாதிய ஒடுக்குமுறை கடுமையாக இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார் சோறு உலையில் இருக்கும் போதே அதில்  உ ப்பை இடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இலையில் தனியாக உ ப்பிட்டு உண்ணும் வழக்கம் மற்றிமையின் சின்னமாக கருதப்பட்டது.   உப்பு வரிக்கு எதிராக காந்தியடிகள் சட்ட மறுப்பு தொடங்கிய காரணம் உப்பு அனைத்து மக்களையும் அதாவது சாதி, சமயம், வர்க்கம் ஆகியவற்றை பாதிக்கக் கூடியது என்பதுதான் உப்பிற்கு இருக்கும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் குறியீட்டு சிறப்பினையும் சுற்றி உப்புக்கு வரி போடும் அரசும் ஓர் அரசா என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத் தகுதியற்றது என அதன் தகுதிப்பாட்டை கேள்விக்குறியாக்கியது தேசிய இயக்கம் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகமும், தண்டியாத்திரையும் இந்திய அரசியல் வரலாற்றின் அழுத்தமான பக்கங்கள் ஆகும். தண்டி யாத்திரை நடந்த குஜராத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு நிறுவனமான கார்கில் கம்பெனிக்கு மைய அரசு உப்பு தயாரிக்க அனுமதி வழங்கியது குஜராத் மக்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் இந்த அனுமதியை எதிர்த்து கிளர்ச்சி செய்ததும் இறுதியில் கார்கில் நிறுவனம் பின்வாங்கியதும் இந்திய வரலாற்றின் வெப்பம் மிகுந்த பக்கங்கள் ஆகும்.    


      ப்பு பெறாத வேலை ஒன்றுக்கும் பயனற்றதை குறிப்பிடுவார்கள். உணர்ச்சி அற்றவனே உப்பு போட்டு தான் சாப்பிடுகிறாயா? என்றும் கேட்பார்கள். ஆனால் மனித குல வரலாற்றில் உப்புக்கு தனி இடம் உண்டு மனிதனின் நாகரீக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்க கற்றது போல, உப்பினை பயன்படுத்த கற்றதும் முக்கியத்துவம் உடையது தான். அப்போதுதான் வேதியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது உப்பு என்ற தமிழ் சொல்லுக்கு சுவை என்பதே முதற்பொருள். இனிப்பு,கசப்பு, துவர்ப்பு என்ற சுவைக்கலாம் உப்பு என்ற சொல்லை அடியாக கொண்டே பிறந்தவை . சமையலுக்கு பயன்படுத்தப்படும் உ ப்பிற்கு வெள்ளுப்பு  என்று பெயர். பழந்தமிழ் நாட்டு பொருளாதாரத்திலும் தமிழ் பண்பாட்டிலும் உப்புக்கு தனி இடம் உண்டு பழம் தமிழர்களின் சுவையின் சின்னமாகவும், வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது.தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன் பெறுவது வெள்ளுப்பு. செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும்  (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால் தான் சம்பளம் என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும் சேலரி என்ற சொல் சால்ட் என்பதன் அடியாக பிறந்தது என்று கூறுவர். இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டுக்குள் நுழையும் போது ஒரு சிறு ஓலை கூடையில் உப்பை எடுத்துக் கொண்டே நுழைகிறாள்.அது போலவே புதுமனை புகு விழாக்களில் உறவினர்கள் அரிசியையும், உ ப்பினையும் அன்பளிப்பாக கொண்டு வருவர் மதுரை மாவட்ட கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர். ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்கு படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியரிடத்தில் இருக்கின்றது.உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாயாகவும் கருதப்படுகிறது என்பது நன்றி மறந்ததன்னை காட்டும் வழக்கு மொழி.                                


ஆதாரம்.  தோ. பரமசிவம் அவர்கள் எழுதிய அறியப்படாத தமிழகம் என்ற புத்தகத்தில் இருந்து. தொகுப்பு செல்வகுமார் பட்டதாரி ஆசிரியர் (வரலாறு )அரசு உயர்நிலைப்பள்ளி, புதுப்பாளையம், பண்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டம்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்