Ad Code

கருப்பு கவுனி அரிசி கிடைக்கும் இடம்

 



நாட்டு கருப்பு கவுனியில் அப்படி என்ன உள்ளது கருப்பு கவுனி என்றால் எல்லாம் ஒன்று தானே  சிலர் இந்த விவாதத்தை வைக்கிறார்கள் இதற்கு என்ன காரணம்?

தற்போதைய புழக்கத்தில்:


1) நாட்டுக் கருப்பு கவுனி
2) செட்டிநாட்டு கவுனி
3) பர்மா கவுனி
4) தாய்லாந்து கவுனி
5) அசாம் கவுனி
6) ரசாயன கவுனி
7) கோ 57 (பல்கலைக்கழக ரகம்)

இத்தனை வகைகள் புழக்கத்தில் உள்ளது

நான் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் நபார்டு வங்கியின் சார்பாக ஆடுதுறை ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து வகையான கவுனிகளையும் ஆய்வு செய்து நாட்டுக் கருப்பு கவுனியில் மிகச் சிறந்த சத்துக்கள் உள்ளது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது கூடுதலாக டெல்டா மாவட்டத்தில் விளையக்கூடிய நாட்டுக் கருப்பு கவனிக்கு கூடுதலான சிறப்பு உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது
மற்ற கவுனிகள் எல்லா பருவத்திலேயும் விளையக்கூடிய தன்மை உள்ளது

ஆனால் நாட்டுக் கருப்பு கவுனி என்று சொல்லக்கூடிய ரகம் மட்டும்தான் சம்பா பட்டத்தில் இயற்கையோடு ஒன்றி அதன் முழு பலன்களையும் கொடுக்கிறதுஅதுதான் தூய்மையான மழை நீரிலும் சரியான பருவத்திலும் பட்டத்திலும் விளையக்கூடிய தன்மை உடையது

ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட கவனியில் நாட்டுக் கருப்பு கவனிக்குதான் நோய் தீர்க்கும் தன்மைகள் உடையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

கருப்பு கவுனி அரிசி மருத்துவ பயன்கள் 


நீரிழிவைக் கட்டுப்படுத்தும் 


வெள்ளை அரிசி, பிரௌன் ரைஸ், சிகப்பு அரிசி என எல்லா வகை பாரம்பரிய அரிசி மற்றும் வரகு, குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறு தானிய வகைகளைக் காட்டிலும் கறுப்பு கவுனி அரிசியில் கிளைசெமிக் குறியீடு மிக மிகக் குறைவு.

இதை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையை உயர்த்தும் வேகமும் விகிதமும் இதில் மிக மிகக் குறைவு. இது நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய உதவி செய்யும். நீரிழிவு நோயாளிகள் கறுப்பு கவுனி அரிசியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

​ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் சீராகும்

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அதன் விகிதம் அதிகரிக்கும் போது, அத்திரோசிலிரோசிஸ் என்னும் பிரச்சினை உண்டாகும். இந்த பிரச்சினை என்னவென்றால், ரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் உறைதல் ஆகிய ஆபத்துகளை உண்டாக்கக்கூடும்.

இந்த பிரச்சினையை சரிசெய்வதில் கறுப்பு கவுனிக்கு முக்கிய இடமுண்டு. அதேபோல ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்கச் செய்யும்.

கொலஸ்டிரால் கட்டுப்படும்


கறுப்பு கவுனி அரிசியை உணவில் சேர்த்கும் போது ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதலைத் தடுக்கும் அதோடு ரத்தத்தில் இருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்டிராலைக் கரைத்து வெளியேற்றி, எச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யும்.

புற்றுநோய் 


கறுப்பு கவுனி அரிசி என்றாலே அது புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் உதவி செய்யும் அரிசி என்று சொல்லப்படுகிறது.

இந்த கருப்பு கவுனியில் உள்ள ஆந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகமாகக் கொண்டிருக்கிறது. அதனால் புற்நுநோய் ஆபத்தைக் குறைக்க இந்த அரிசியை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.



Key words 
கருப்பு கவுனி அரிசி இரவில் சாப்பிடலாமா
கருப்பு கவுனி அரிசி சத்துக்கள்
கருப்பு கவுனி அரிசி சர்க்கரை நோய்
கருப்பு கவுனி அரிசி 1 கிலோ விலை
கருப்பு கவுனி அரிசி கஞ்சி சமைப்பது எப்படி
கருப்பு கவுனி அரிசி கிடைக்கும் இடம்



கருத்துரையிடுக

0 கருத்துகள்