👆🏻இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா...
அப்படி என்றால் என்ன...
பல நூற்றாண்டு காலமாக பூமியின் கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பர கோயில் உள்ள சிவனின் நடனமாடும் சிலையை கண்டு பக்திபரவசம் அடைவார்கள் பக்தர்கள் ....
சைவத்தில் சிதம்பரம் என்றால் கோவில் என பொருள்படும் ...
சிதம்பரத்தில் உள்ள சிலை தன் கண் முன்னே உயிர்பெற்று வந்து தரையில் தனித்துவமான நடனம்,இறைவன் ஆடுவதையும் அதனால் ஏற்பட்ட சலங்கையின் ஒலியையும் கேட்டவர் மாணிக்கவாசகர்....
இவ்வளவு புகழ் பெற்ற இந்த இடத்திற்கு ஒரு ரகசியம் உள்ளது ....
அதுதான் சிதம்பர ரகசியம்...
இங்குள்ள
சித்த சபா - வுக்கு
அடுத்துள்ள ஒரு சிறிய வாயிலில் தினமும் மாலை ஏழு முப்பது மணிக்கு வழிபாடு நடக்கும் ...
ஆனால் இங்கு எந்த சிலையும் இல்லை..
வெறும் வில்வ இலைகளைக் கொண்ட மாலை .....(Garland)சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும்.
அதை ஒரு திரை சீலை மூடி இருக்கும் ....
இதன் முக்கியத்துவம் என்ன???
என கேட்கலாம்...
இதன் பொருள் அறியாமையிலிருந்து உண்மையான அறிவு பெறுவது...
எல்லாம் வல்ல பரம்பொருள் எங்கும் இருக்கிறான்... வெற்றிடத்திலும் இருக்கிறான் ...
ஒருவனால் கடவுளை நேரடியாக பார்க்க முடியாது .ஆனால் உணர முடியும்...
சிதம்பர ரகசியம் என்பது ....
இறைவன் இருக்கிறான் என்பதை ஒருவன்
அகக் கண்ணால்(inner eye) பார்த்து உணர்வது....
இப்படி உணரப்படும் அந்த அறிவு... அறியாமையை விரட்டுகிறது ....
கடவுளின் தெய்வீக உருவத்தை புறக்கண்ணால் பார்த்தால் நடராஜன் ...
அதை....
உருவம் இல்லாத இறைவனின் இருப்பை, அகக்கண்ணாலும் பார்த்து உணரலாம் என்பது தான் சிதம்பர ரகசியம்....
0 கருத்துகள்