Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " உயர்ந்த நெறி"

 




" செல்லும்பாதை தவறாக இருக்கும்போது வேகமாக ஒடி என்ன பயன்? " என்பார்கள் நம்முன்னோர்கள். இக்காலத்தில் வாழ்கின்ற  மக்கள் இப்படித்தான் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். " கனியிருக்கு காய்கவர்ந்தற்று " என்பதுபோல உயர்ந்த நெறியில் வாழ்ந்து உயர்நிலையை அடையாமல் , தீநெறியில் சென்று இழிநிலையை அடைகிறார்கள். நாம் வாழவேண்டிய உயர்ந்த நெறி எதுவென்பதை திரிகடுகம் கூறக்கேட்போம். 


" முந்தை எழுத்தின் வரவுணர்ந்து , பிற்பாடு 

தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த

ஒழுக்க பெருநெறி சேர்தல்,  - இம்மூன்றும் 

விழுப்ப நெறிதூரா வாறு.


( நல்லாதனார், திரிகடுகம் - 56)


1. கற்க வேண்டிய கல்வியை எல்லாம் இளமைக்காலத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும். 


2.முதுமைக் காலத்தில்  தாய்தந்தையைப் போற்றி ஒழுகவேண்டும். பிள்ளைகள் காட்டும் அன்பே பெற்றவர்களின் வாழ்நாளை நீட்டிக்கும். 


3.எல்லாக் காலத்திலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நல்லொழுக்கம் இல்லாதவர்கள் நடைப்பிணமாகவே கருதப்படுவர். 


இம்மூன்று உயர்ந்த நெறிகளையும் தூர்ந்து போகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் மேன்மையுற்று வாழமுடியும். 


இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்